15.10.09
காதல் குவாண்டம்
வீனஸ் ப்ப்ளை ட்ட்ராப்பாய் நீ
நேமடோட்ஸ் ஆக நான்
டயடோனிக் ஸ்கேல் மிதந்தபொழுது
கோதூளி லக்னத்தில் கலந்தோம்
கால சர்ப்பமாய்
பி இ ரேஷியோ பார்த்து
சிசிலியன் விளையாடி தோற்றோம்
வெர்னிக்ஸ் ஏரியா மரத்தது
உடைந்தோம் குவாட்கோர் சில்லுகளாய்
12.10.09
பிறவா மகள்
ஏன் பிறக்கவில்லை மகளே ?
பிஞ்சு பாதம் தாங்கி
உன்னில் கடவுளை காணவும்
பார்பியுடன் நீ தூங்க
நான் தூங்காது உன்னை ரசிக்கவும்
பள்ளி அனுப்பி
பரிதவித்து காத்திருக்கவும்
சொந்தம் கூட்டி பூப்புநீராட்டி
மனம் கர்விக்கவும்
குருவியாய் அலைந்து
குண்டுமணிகளாய் பொன் சேர்த்து
புக்ககம் அனுப்பி
புவியதிர விம்மவும்
தலைப்ரசவத்தில் என்னுருவில்
பெயரனை காணவும்
என் மூச்சுதிரும் வேளையில்
உவந்து உன் உச்சி மோறவும்
என்னுள் வெளிவராதுறைந்த
என் மகளே
மறுசென்மத்தாயாய் வா
காத்திருக்கிறேன் ........................................
7.10.09
அழகின் அலகீடு
அழகு
புலியின் பதுங்கு பாவனை
யானையின் முன் ஆசி நீட்சி
நாயின் பின் நன்றி நவிலல்
பால் குடிக்க பறந்தோடும் கன்று
தேனீயின் கழிவு
மண்புழுவின் தாமிரமேனி
கூவுகுயிலின் சமிக்ஞை
மருண்ட இருளோட்டிடும் செங்கதிர்
மொட்டைமாடியில் முழுநிலவு
பசும்வயலில் கிழிசட்டை பூதம்
நிமிர்ந்த மலையின் ஆரம்
அடர்ந்த காட்டில் மின்மினி
மரித்த பாட்டியின் முகவரிகள்
சிசுவின் தூக்கசிரிப்பு
செயற்கை ஒளி அறுந்தபின் லாந்தர்
கவிதையில் காதல்
என்னவளின் கோண வகிடு
கூடலின் வியர்வை
கோள்களில் வளையச்சனி
கோள்களில் வளையச்சனி
கடவுளில் கந்தன்
மொழியில் தமிழ்
தமிழில் ஈழம்
ஈழத்தின் வீரம்
பிரபஞ்ச பிழையான நாம் ....................................
5.10.09
நடுவர்க்க நரகம்
நடுவர்க்க நடுக்கடலில்
நாங்கள்
இருகரையும் பச்சை
எதிர் வீடு எல்சிடி
கண் எரியும்
பின்வீட்டு வாஷிங்மெஷின்
மனம் துவையும்
பண்டிகை கொண்டாட்டங்கள்
நகைகள் ஹிந்தி படிக்கும்
மனசு தூங்கி போகும்
திடீர் செலவு
திக்கற்ற நிலை
எண்ணிய பின் சம்பளம்
எண்ணவே முடியாது
ஊர் முழுதும் பழக்கம்
அடிக்கடி மாறிய வீடுகள்
ஆண்டவா ................................
மறுபிறப்பில் ஏழையாய் அல்லது வளமையாய்
படைத்திடு
நடுக்கடல் வாழ்க்கை நரகமென்பதால்................
விஜய் @ 98947 60636
3.10.09
நிறமி
பச்சை
பசித்த பசுவயல் அழித்த நாற்கல்
கருப்பு
உழைப்பின் உயர்நிறம் மணச்சந்தையில் மட்டும் மறுக்கப்படும்
நீலம்
வானின் பிம்பம் ஆழகல ஆழியில்
சிவப்பு
வெற்றிலைபாட்டிவிதவைக்கு வெறுநெற்றி
வெண்மை
தாய்மையின் முதல் திரவம் முடிவிலும் ஊற்றப்படும்.
Subscribe to:
Posts (Atom)




