17.8.13

கேசாதிபாதம்




கூந்தல் கருமுகில் 

நெற்றி பிறைநுதல்

கண்கள் கவினுரு  சேல்

பற்கள் கோ துத்தம்

முகம் சித்திரை அம்புலி 

நகில் சந்தக்குழம்பு  பருவதம் 

கொப்பூழ் பொன்னி நீர்ச்சுழி 

மருங்குல் உடுக்கை 

நிதம்பம் நறை கமலம் 

பாதம் ஆணிப்பொன் தாள் 

உன்னைத்தான் வர்ணித்துள்ளேன் 
என்றேன் .........

ஒண்ணுமே புரியவில்லை 
என்றாய் ...........

புரியாத கவிதை
எழுதுவதை இத்துடன் 
நிறுத்திக்கொள்கிறேன்...................... 

30.7.13

ஒளஷதம்



நிர்ச்சலன 
நிசப்த நொடியில் 
ஆலமரத்தடியில் 
மடியில் கிடத்தி 
உதிரம் சூடாகி 
அதரம் சுவைத்தபோது 
மயிர்க்கூச்செறிந்துன் 
பூனை முடிகள் 
குத்திய காதல் வலி 
இன்று 
பிரிவின் சீழ் 
பிடித்து நிற்கிறது 

அடுத்த பிறவியிலாவது 
ஒளஷதமாய் வா............

21.7.13

குட்டிக்கவிதைகள் - 3


1)
சிற்றிதழ் படித்து 
செவ்விலக்கியம் புனைய 
ஆசை இல்லை 

உன் 

பேரிதழ் சுவைத்து
பெருங்காமப்புராணம்
படைக்கவே ஆசை ................



2)

பிழை திருத்த சொன்னதும்
நீதான்

உரை எழுதச்சொன்னதும்
நீதான்

தலைப்பை மட்டும்
தரமறுத்தல்
எவ்விதத்தில் நியாயம் ?

1.7.13

குட்டிக்கவிதைகள் - 2


கடை வாசல் முன்பு 
சுடிதார் இறுக்கி பிடித்து 
பெருக்கும் பெண்களின் 
கைகளில் இருக்கிறது 
ஆண்களின் பார்வை ............

உலகத்திலேயே 
நீளமான 
அகண்ட 
மைதானம் இருக்கிறதென 
அவமானப்பட்டுக் கொள்ளலாம் 
காவிரி பார்த்து .............

18.6.13

சித்தப்பாக்கள்



அப்பாக்களின் எதிர் வடிவமே 
சித்தப்பாக்கள் 

அப்பா அமைதி என்றால் 
சித்தப்பா லொட லொட 

அப்பா கோபக்காரர் என்றால் 
சித்தப்பா கருணா மூர்த்தி 

அப்பா சூரியன் என்றால் 
சித்தப்பா நிலா 

பரிந்து பேசுவதிலும் 

அன்பை வெளிக்காட்டுவதிலும் 

எதை கேட்டாலும் வாங்கித்தருவதிலும் 

உற்சாகப்படுத்துவதிலும் 

தன்  உடைமைகளைத் தருவதிலும்

சித்தப்பாக்கள் இதயத்தில் நீங்காவிடம் 
பெற்றுவிடுகிறார்கள் 

அப்பாக்களும் யாரோ ஒருவருக்கு
சித்தப்பாவாய் 
இருக்கக்கூடும் 

சித்தப்பாக்களும் யாரோ ஒருவருக்கு 
அப்பாவாய் இருக்கக்கூடும் ........