13.3.10

கடவுச்சொல்


நீ கடத்திய
உதடழுத்த மின்சாரம்
உயிர் நிரப்புமெரிபொருள்

தடாகத்தாமரைக்கு
தாவணி வேலி

சுக்ரரேகையில்
ஓடுமெனது பெயர்

உச்சிவெயிலில்
உன்னுளடங்கும்
வெயிலாய்

உன்னுள் கலந்த
எனதாண்மை
பூனைமுடிகளாய்

கணிணிக்கு மட்டுமல்ல
என் வாழ்க்கைக்கும்
உன் பெயரே கடவுச்சொல்

மடியில் கிடத்தி
மயிர்களைக் கோதி
இடு ஒரு முத்தம்
கன்னக்கதுப்பில்
உய்வேன் நானும்
ஒருநொடியேனும்........................





30 comments:

Paleo God said...

ஆளே காணுமேன்னு இன்னிக்குத்தான் நினெச்சேன்..:)

--

சுட்டீஸ்களோட படம் டாப்..:)

ரோஸ்விக் said...

//உன்னுள் கலந்த
எனதாண்மை
பூனைமுடிகளாய்//

மொத்தத்துல நல்லா இருக்கு... அதுல இது எனக்கு புதுசா (நல்லா) இருக்கு... :-)

விஜய் said...

@ ஷங்கர்

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ ரோஸ்விக்

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா

விஜய்

அன்புடன் நான் said...

கணிணிக்கு மட்டுமல்ல
என் வாழ்க்கைக்கும்
உன் பெயரே கடவுச்சொல்//

இது தான் உண்மை வாழ்வின்.... அடிப்படை.
வாழ்த்துக்கள்.

விஜய் said...

@ அரசு

மிகுந்த நன்றி நண்பா

விஜய்

கவி அழகன் said...

உயர்ந்த தரத்தில் ஒரு கவிதை வாழ்த்துக்கள்

தமிழ் அமுதன் said...

///கணிணிக்கு மட்டுமல்ல
என் வாழ்க்கைக்கும்
உன் பெயரே கடவுச்சொல்///

super...!

விஜய் said...

@ யாதவன்

தங்களின் முதல் வருகைக்கும் மனதுயர்ந்த வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ ஜீவன்

வாழ்த்துக்கு நன்றி நண்பா

வீட்டில் அனைவரும் நலமா?

விஜய்

Kala said...

உவாவ்வ்வவ்...விஜய்! பெண்ணை ஆழ்ந்து,
களைந்த வரிகள்...கற்பனையல்ல நிஜம்
எனக் கவிதையின் ஒவ்வொரு சொல்லும்
மார்தட்டுகின்றது நன்றி விஜய்.

படம் எங்கோ பார்த்ததாக இருந்தது!
ஆஆ...ஜெஸ்வந்தியின் முகத் தளத்தில்
பார்த்தேன்

விஜய் said...

@ கலா

வாழ்த்துக்கு நன்றி தோழி

அந்த படத்திற்கு உண்மையான சொந்தக்காரர் ராஜா ரவிவர்மா

விஜய்

ஸ்ரீராம். said...

நீ.....ண்ட இடைவெளிக்குப் பின் கவிதை....கவிதையின் கடவுச் சொல் மறந்து விட்டதோ...?!
நல்லா இருக்கு விஜய்.

விஜய் said...

@ ஸ்ரீராம்

அலுவல் காரணமாக வர இயலவில்லை.

நன்றி நண்பா

விஜய்

ISR Selvakumar said...

ரொமாண்டிக்!

புலவன் புலிகேசி said...

கடவுச்சொல் மறந்து விடாதீர் அண்ணா...

Nathanjagk said...

புதுமையான உவமைகளால் ​சொல்லப்பட்ட விதம்.. தொடுகிறது.
சிக்கலான wild characters ​கொண்ட கடவுச்சொல் அலாதிதான்.
இன்னும் தொடர்ந்து செல்லுங்கள் விஜய்! நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

விஜய் said...

@ செல்வகுமார்

மிக்க நன்றி டைரக்டர் சார்

விஜய்

விஜய் said...

@ புலவன் புலிகேசி

மறக்கமாட்டேன் தம்பி

நன்றி

விஜய்

விஜய் said...

@ ஜெகா

மிகுந்த நன்றியும் அன்பும் நண்பா

விஜய்

சிவாஜி சங்கர் said...

அருமை அண்ணா.. நீண்ட நாள் பிறகு பார்க்க முடிகிறது., மகிழ்ச்சி.. :)

விஜய் said...

@ சிவாஜி சங்கர்

அன்பும் நன்றியும் தம்பி

விஜய்

Thenammai Lakshmanan said...

கணிணிக்கு மட்டுமல்ல
என் வாழ்க்கைக்கும்
உன் பெயரே கடவுச்சொல்//


என்றும் மறக்க முடியாத கடவுச்சொல் இல்லையா விஜய்..?

வீட்டில் அனைவரும் நலமா .?

மேலும் குழந்தைகள் படம் அருமை திருஷ்டி சுத்திப் போட சொல்லுங்க விஜய் ..அழகு ..!1

விஜய் said...

@ தேனக்கா

ஆமாம் அக்கா, என்றும் மறக்க முடியாத கடவுச்சொல்தான்

வாழ்த்துக்கு நன்றி அக்கா

விஜய்

சந்தான சங்கர் said...

கடவுச்சொல்லிலே
கடவுளை கண்டிடும்
கண்களின் விழிதிரையும்
கணினியின் வெளிதிரையும்
பேசிக்கொண்டதென்றால்
மிகையாகாது..


வாழ்த்துக்கள் நண்பா..

விஜய் said...

@ சந்தான சங்கர்

நீண்ட நாள் கழித்து தங்களது வருகை

வாழ்த்துக்கு நன்றி நண்பா

விஜய்

சத்ரியன் said...

//நீ கடத்திய
உதடழுத்த மின்சாரம்
உயிர் நிரப்புமெரிபொருள்//

அட சண்டாளா,

ஆரம்பிக்கும் போதே மின்சாரம் பாய்ச்சிறியே சாமி.

அருமை விஜய்.

விஜய் said...

@ சத்ரியன்

மனுஷங்களுக்கு தேவையான மின்சாரம்தானே நண்பா

நன்றி நண்பா

விஜய்

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு விஜய்!

விஜய் said...

நன்றி மக்கா

விஜய்