எங்கிருந்து வந்தாய்
என் இதயம் எனக்காக துடிக்க மறுத்து
என் நினைவு எனக்காக சிந்திக்க மறுத்து
என் வார்த்தை எனக்காக பேச மறுத்து
எல்லாம் உனக்காக என்றான போது
நீ என் இதயத்தை விட்டு
மூளையை ஆக்கிரமித்தாய்
உடலை விட்டு உயிரை சேகரம் செய்தாய்
உன்னிடம்
குழந்தையின் குறும்பு கண்டேன்
குமரியின் குழறல் கேட்டேன்
உனக்காக
உணவு மறந்து தூக்கம் தொலைந்து
கனவுகளில் நிஜமாகி போனேன்
காத்திருக்கிறேன்
நினைவுகளில் நிதர்சனமாய் வா ...
(12 வருடங்களுக்கு முன் எழுதிய கவிதை)
17 comments:
ஓ....கல்யாணத்குக்கு முதலே காதலா !
12 வருஷத்துக்கு முன்னமே இப்பிடி ஒரு கலக்கல் கவிதையா.அப்பாடி !
அதென்ன விஜய் நோஸ்டால்ஜிக் கவிதைன்னா ?
:)
கன்னி வார்த்தைகள்...!
முதல் மொட்டைக்கு முன் இருக்கும் சுருள் முடி போல குழந்தையின் அழகுடன்
@ ஹேமா
வாங்கோ ஹேமா
அசைபோட பிடிக்கும் பசுமையான நினைவுகளே நோஸ்டால்ஜிக்
நன்றி
விஜய்
@ நேசன்
இந்த மாதிரி உவமானங்கள் தங்களால் மட்டுமே சாத்தியம்
நெஞ்சார்ந்த நன்றி நண்பா
விஜய்
ஓஹ் அப்போதே கவிதையின் காதலனா நீங்கள்...
@ தமிழ்
ஆமாங்க சகோதரி
வாழ்த்துக்கு மிகுந்த நன்றி
விஜய்
விஜய்,
நான் ஒன்னும் சொல்றதா இல்லை. எல்லாத்தையும்
////(12 வருடங்களுக்கு முன் எழுதிய கவிதை) //
இது சொல்லும்.
@ சத்ரியன்
என் நண்பா சுமாரா இருக்கா ?
விஜய்
மறந்த உணவுகளும் தொலைந்த தூக்கமும் இப்போதும் அப்படியேதானா..?
\\உன்னிடம்
குழந்தையின் குறும்பு கண்டேன்
குமரியின் குழறல் கேட்டேன்
உனக்காக
உணவு மறந்து தூக்கம் தொலைந்து
கனவுகளில் நிஜமாகி போனேன்\\
எவ்வளவு உண்மையான வார்த்தைகள்
பதிவிற்கு நன்றி
@ ஸ்ரீராம்
அது கதம் கதம்
இப்பல்லாம் அப்படி இல்லை
விஜய்
@ +யோகி+
தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி நண்பா
விஜய்
அப்பவே ஒரு அழகான கவிதை....!!!
நல்லாயிருக்கு - மச்சான்ஸ்.
@ சிவன்
நன்றி மச்சான்ஸ்
விஜய்
கவிதை சூப்பராயிருக்குங்க...அசத்துங்க....
@ அஹமது இர்ஷாத்
நன்றி எனதருமை தம்பி
விஜய்
http://suryesh.blogspot.com/2010/04/blog-post.html
மறக்காம ஓட்டு போடுங்க
Post a Comment