2.5.10

ஹேமா, தேனக்கா மற்றும் பலர் - 50வது பதிவு



எட்டு மதங்களுக்கு முன் Monotonous lifeல் Freezeஆகி நின்றபோது திடீரென்று கண்ணில் பட்டது வலையுலகம். நாமும் கவிதை எழுதி பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதே எழுதிப்பார்ப்போம் என்று எழுத ஆரம்பித்தேன்.

முதல் ஊக்குவிப்பாக ஹேமாவின் பின்னூட்டம் என்னை அங்கீகரித்தது. தொடர்ந்து எழுதினால் உங்கள் எழுத்தும் மிளிரும் என்று ஹேமாவின் அறிவுரை, இன்று நானும் ஒரு வலைபதிவராக ஆகமுடிந்து ஐம்பதாவது பதிவு போடமுடிகிறதென்றால் முதல் காரணம் ஹேமாதான்.

அதன்பின் தேனக்காவின் பாராட்டு, சின்ன சின்ன வரிகளில் அற்புதமாக எழுதுகிறீர்கள் என்று. மிக பெரிய அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சி என்னுள். என் சகோதரியாக அவ்வப்போது எனை வழிநடத்துவதில் முதல் நபராக இருப்பது தேனக்காதான்.

குறையுள்ள கவிதைகளை கூட விவரித்து நிறைவுற்ற பிறையாக மாற்ற  முனையும் நண்பர் நேசமித்திரன்.

யதார்த்தத்தின் மறுபெயராய் நான் கோவித்தால் கூட சிறு குழந்தைக்கு நிலவு காட்டுவது போல் என் மனதிருக்குள் நுழையும் பா.ரா.

வலிய வந்து பாராட்டி மகிழும் அன்புச்சகோதரி தமிழரசி

பின்னூட்டத்தை கூட கவிதையாய் பொழியும் அன்பு நண்பர் சந்தானசங்கர்

எனக்கு முதன் முதல் விருது தந்த எனதருமை தம்பி புலவன் புலிகேசி

இரண்டாவது விருது தந்து எனை அன்பு சகோதரனாய் பாவிக்கும் மலிக்கா

எனது அகசூல் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து உதவிய ஜீவன்

வலைச்சரத்தில் எனது கவிதை தளத்தை அறிமுகம் செய்த சகோதரி இயற்கை,
அ.மு.செய்யது, வானம்பாடிகள்,அக்பர்
தொடர்ந்து ஊக்குவிக்கும் ஜோதிட ஓஷோ சித்தூர்.முருகேசன்

தொடர்ந்து வாசித்து வாழ்த்தும் ராமலக்ஷ்மி அக்கா

ரசித்து வாழ்த்தும் எங்கள் ஸ்ரீராம்

வித்தியாச கவிதைகளால் வியக்கவைக்கும் சிவாஜி சங்கர்

எப்பொழுதும் வாழ்த்தும் பாலா

வாழ்த்தியே கலாய்க்கும் அன்பு நண்பன் சத்ரியன்

தவறாமல் வாழ்த்தும் நண்பர் கருணாகரசு

பின்னூட்ட புயலாக அறியப்படும் ஜெகநாதன்

பின்னூட்ட சுனாமியாக அறியப்படும் கலா

வாய்ப்பு தந்திருப்பேன் என்று சொன்ன இயக்குனர் செல்வக்குமார்

ஆரம்பத்தில் தொடர்ந்து ஆதரவு தந்து வாழ்த்திய ரசிகை

கவிநண்பன் கமலேஷ்

எங்க ஊர் புபட்டியன்

மனது நிரம்பி வாழ்த்தும் பலா பட்டறை ஷங்கர்

அன்புச்சகோதரி ஜலீலாக்கா

அன்புச்சகோதரி காயத்ரி

மற்றும்

கலகலப்ரியா, காரூரன், வாணிநாதன், ஜெரி ஈசானந்தா, பின்னோக்கி, நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார், ஊடகன், கவிக்கிழவன், விக்னேஷ்வரி, வேல்ஜி

உழவன், க.பாலாசி, ராஜலக்ஷ்மி பக்கிரிசாமி, சந்ரு, தியாவின் பேனா

பாலா கவிதைகள், யாத்ரா, முகமூடியணிந்த பேனா, S.A. நவாஸுதீன்

பிரியமுடன்...வசந்த், பூங்குன்றன்.வேவிதூஷ், ரிஷபன், சிங்கக்குட்டி

சுந்தரா, ஆ.ஞானசேகரன், பத்மா, அண்ணாமலை�@����<��nE0��், ஆர்.கே.சதீஷ்குமார்

மதுரை சரவணன், பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி, .. பனித்துளி சங்கர் ....

பிரியா, ரோஸ்விக்,யாதவன், திவ்யாஹரி, அஹமது இர்ஷாத், சக்தி

People call me "Paul"..., மோனி, +யோகி+, சிவன், சுதாகர் குமார் LK

திருஷ், ஸ்டார்ஜன், ஜில்தண்ணி, பவி, nige k,பித்தனின் வாக்கு, மன்னார் அமுதன்,

றமேஸ், தமிழினிமை...செந்தில் நாதன், விழியில் விழுந்தவன்

தேவன் மாயம், விவேக் நாராயண், Jayaprakash Sundarraj, zoooo, Lee

இவர்களுக்கு எல்லாம் நன்றி என்று ஒற்றை வார்த்தையை மட்டும் எப்படி காணிக்கை ஆக்குவது என்று தெரியவில்லை.

என்ன கைம்மாறு இவர்களுக்கு செய்யபோகிறேன் எனது கவிதைகளை படிக்கும் தண்டனை தருவது தவிர !!!!!!











58 comments:

Deepan Mahendran said...

வாழ்த்துக்கள் விஜய்...(இது நீங்கள் எழுதப் போகும் நூறாவது பதிவுக்கு)...!!!!

:)

நேசமித்ரன் said...

50 பெருகட்டும் விஜய் ஐநூறாக

கச்சிதமான மொழி, ரசாயனக் கரைசலாய் உவமைகள் உங்கள் பலம்

பின்னூட்டிய அனைவரையும் நினைவிறுத்தி நன்றி மொழிந்திருப்பது உங்கள் பண்பு

வாழ்த்துகள் !!!

விஜய் said...

@ சிவன்

முதல் வாழ்த்துக்கு மனதார்ந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ நேசன்

நேய வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றி நண்பா

விஜய்

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துக்கள் விஜய்

சிநேகிதன் அக்பர் said...

50 வது பதிவுக்கும் விரைவில் 100 தொடவும் வாழ்த்துகள் சார்.

எல்லோரையும் நினைவு கூர்ந்து அனைவரும் ஒரே குடும்பம் என்று நிறுபித்து விட்டீர்கள்.

ராமலக்ஷ்மி said...

அரை சதத்துக்கு என் அன்பான வாழ்த்துக்கள் விஜய். நிறைவான பதிவு.

எல் கே said...

வாழ்த்துக்கள் விஜய் . தொடர்ந்து எழுதுங்கள். நல்ல பதிவுகளை ஊக்குவிக்கவேண்டியது எங்கள் கடமை

சத்ரியன் said...

வாழ்த்துகள் விஜய்.

//என்ன கைம்மாறு இவர்களுக்கு செய்யபோகிறேன் எனது கவிதைகளை படிக்கும் தண்டனை தருவது தவிர !!!!!!//

இதென்ன சாமி குசும்பு...?

விஜய் said...

@ ஸ்டார்ஜன்

மிகுந்த நன்றி அன்பு ஸ்டார்ஜன்

விஜய்

விஜய் said...

@ அக்பர்

ஆமாம் அக்பர் நாம் அனைவரும் ஒரே குடும்பம்தான்.

நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பா

விஜய்

விஜய் said...

@ ராமலக்ஷ்மி

தங்கள் வாழ்த்தால் மனம் நிறைகிறது சகோதரி

நன்றி

விஜய்

விஜய் said...

@ LK

தொடர்ந்து ஊக்குவிக்கும் தங்களை போன்றோரால் தான் என்னால் இத்தனை பதிவுகள் எழுத முடிந்தது.

மிகுந்த நன்றிகள் பல நண்பா

விஜய்

விஜய் said...

@ சத்ரியன்

மனமார்ந்த நன்றிகள் நண்பா

(இடுகையை lighter veinல் முடிக்க ஆசைப்பட்டேன் அவ்வளவுதான்)

விஜய்

Paleo God said...

வாழ்த்துகள் நண்பா!!

மிக்க மகிழ்ச்சி. :))

தொடருங்கள்.

விஜய் said...

@ ஷங்கர்

உளமார்ந்த நன்றி நண்பா

விஜய்

Jaleela Kamal said...

50 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள், மேலும் பல நல்ல பதிவுகள் படைக்கவும் அது 100 ஆகவும் வாழ்த்துக்கள்/..

நேரமின்மையால் தொடர்ந்து வரமுடியல முன்பு வந்து பின்னூட்டம் அளித்ததை நினை கூர்ந்து என்னையும் பதிவில் சொல்லி இருக்கீங்க , குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி

சிவாஜி சங்கர் said...

அண்ணே...
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ரொம்ப சந்தோஷம்.... இன்னும் பல 50- ஐ தாண்டி வாருங்கள்.

அண்ணா மொழிக்கலவை,பிரயோகம் உங்கள் பலம்

ஸ்ரீராம். said...

அடேடே...அத்தனை பேரையும் சொல்லிட்டீங்களே... எங்கள் சார்பிலும் நன்றி.
கவிதை(யும்) எனக்கு வருவதே இல்லை.. எழுதுபவர்களைப் பார்த்தால் ஒரு பொறாமை...குறிப்பாய் ஹேமா..இந்த ப்ளாக் பார்த்திருக்கிறீர்களோ..?
http://venbaaeluthalaamvaanga.blogspot.com/
சரி.. ஒரு நாலுவரிக் கவிதையாய் ஐம்பதாவது இடுகையை நிறைவு செய்திருக்கக் கூடாதோ..?

தமிழ் அமுதன் said...

வாழ்த்துகள்...!

பின்னூட்டமிட்ட அனைவரையும் நினைவு கூர்ந்துஇருப்பது மனதை நிறைவடைய செய்கிறது நன்றி...!

Ahamed irshad said...

வாழ்த்துக்கள் விஜய்...

//என்ன கைம்மாறு இவர்களுக்கு செய்யபோகிறேன் எனது கவிதைகளை படிக்கும் தண்டனை தருவது தவிர !!!!!!////

தேவையான தண்டனைதான்...

விஜய் said...

@ ஜலீலா

பரவாயில்லை சகோதரி நேரமிருக்கும் போது வந்து வாழ்த்துங்கள் போதும்.

வாழ்த்துக்களை தலை வணங்கி ஏற்கிறேன்

நன்றி

விஜய்

விஜய் said...

@ சிவாஜி சங்கர்

நிறைய நன்றியும் அன்பும் எனதருமை தம்பி

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

நானே கவிதை எழுதும்போது நீங்க ஏன் முயற்ச்சிக்க கூடாது ?

இதுபோன்ற தங்களின் தொடரும் பின்னூட்டமே எனக்கு மென்மேலும் எழுத சக்தி தரும்

(எப்பவும் தான் கவிதை கவிதைன்னு போரடிக்கிறேன், ஒரு மாற்றத்திற்காக)

நன்றி நன்றி

விஜய்

விஜய் said...

@ ஜீவன்(தமிழ் அமுதன்)

ஆம் நண்பா. ஒவ்வொரு பின்னூட்டமும் எனது வளர்ச்சியில் பங்கு வகித்துள்ளது.

முகமறியா நட்புகளை எங்ஙனம் மறப்பது

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ அஹமது இர்ஷாத்

குறுகிய காலத்தில் தொடர்ந்து பின்னூட்டி எனது மனதில் நீங்க இடம் பிடித்து விட்டீர்கள் நண்பா

நன்றி நன்றி

விஜய்

Kala said...

ஜம்பது வெல்லக் கட்டிகள்
நீங்கள் கொடுக்க...
அம்புட்டும் சாப்பிட்டு
ஆரோக்கியமாய் நாங்கள்
திழைக்க.....
வைத்த விஜய்க்கு
வாயார வாழ்த்துகள்.

ஏன் விஜய்?அப்படி எல்லோரையும்
சுருட்டி எடுக்கின்றேனா?
மிக்க நன்றி என் பெயர் பதிவுக்கும்,
தகுதிக்கும்.
வாழ்க ! தமிழுடன்!!

INDIA 2121 said...

BEAUTIFUL
VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com

விஜய் said...

@ கலா

தங்களின் பின்னூட்டத்திற்கு நான் ரசிகன் என்பது தங்களுக்கு தெரியும் தானே

தங்களின் மனம் குளிர் வாழ்த்துக்களை தலை சாய்த்து ஏற்று கொள்கிறேன்

நன்றி

விஜய்

விஜய் said...

@ வால் பையன்

நன்றி

விஜய்

ஹேமா said...

அன்பு விஜய்... என் வார்த்தைகளை அடைத்து உங்கள் அன்பை இப்படித் தெரிவித்திருக்க்றீர்கள்.நிறைவான வாழ்த்துகள் என்றும் சகோதரியாய்.
இன்னும் நிறைய எழுதுவீங்க.
எழுதணும்.இப்போதான் வேலையால் வந்து பிந்திய வாழ்த்துகள் விஜய்.

= YoYo = said...

தங்களின்
அடுத்த பதிவிற்க்காக காத்திருக்கிறேன்

பத்மா said...

வாழ்த்துக்கள் .எல்லா பெயரையும் படிக்கும் போது சந்தோஷமாயும் நெகிழ்வாயும் இருக்கு .
50 ,100 ஆகி 1000 ஆகட்டும் .

ஸ்வாமி ஓம்சைக்கிள் said...

உரையாடல் கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்கள் எனது தேர்வு
http://omcycle.blogspot.com/2010/05/blog-post.html

விஜய் said...

@ ஹேமா

மிகுந்த அன்பும் நன்றியும் சகோதரி

எப்பொழுதும் வாழ்த்திட வேண்டுகிறேன்

விஜய்

விஜய் said...

@ +யோகி+

தங்களின் தொடர்ந்த வரவும் வாழ்த்தும் மிகுந்த மகிழ்வு தம்பி

நன்றி

விஜய்

விஜய் said...

@ பத்மா

தங்களை போன்ற சகோதரிகளின் அன்பும் ஆதரவே என்னால் இத்தனை தூரம் பயணிக்க முடிந்தது.

நெஞ்சார்ந்த நன்றி சகோதரி

விஜய்

Thenammai Lakshmanan said...

விஜய் நாந்தான் லேட்டா வாழ்த்த வந்து இருக்கேன்.. என்தம்பி இவ்வளவு பேரை சம்பாதிச்சு வைத்துள்ளதை பார்த்து மகிழ்கிறேன்... வலைத்தளத்தின் குழந்தைகள் நாம்.. உங்கள் படைப்புகள் இன்னும் ஐம்பது நூறு ., ஆயிரம் பல்லாயிரமாகப் பெருக வாழ்த்துக்கள்.. என் அன்பும் ஆசியும் உங்களுக்கு.. பெருமைப் பத்தி விட்டீர்கள் விஜய்...தலை வணங்குகிறேன் உங்கள் அன்பின் முன்

கமலேஷ் said...

உங்களின் ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்..அண்ணா...உங்களின் பதிவை போலவே உங்களின் வரிகளின் வலிமையும் கூடிகொண்டே போகிறது...வாழ்த்துக்கள் அண்ணா...தொடருங்கள்....

விஜய் said...

@ தேனக்கா

சிரம் தாழ்த்தி ஏற்று கொள்கிறேன் தங்களது பாராட்டுகளையும் ஆசியையும்

நன்றி அக்கா

விஜய்

விஜய் said...

@ கமலேஷ்

மிகுந்த நன்றி தம்பி

நன்னிலம் சொந்த ஊரா ?

எனது முன்னோர்கள் வசித்த ஊர் அது

விஜய்

அன்புடன் மலிக்கா said...

சகோதரர் அவர்களே நான் நேற்று வந்தபோது. இந்த வலைப்பூ ஓப்பனாகலை.இரண்டொருமுறை டிரை செய்திட்டுதான்
அகசூழுக்கு சென்றேன்.

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கு சகோதரா. இத்தனை பேரையும் நினைவில் வைத்திருப்பதற்க்கு.

நமதெண்ணங்களை வெளிப்படுதும் தளங்களாக இருக்கும் வலைபூக்களுக்குதான் நன்றி சொல்லனும்.

இன்னும் இன்னும் முன்னேறவேண்டும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு செயல்படுங்கள் வெற்றிகள் வந்து குவிந்துகொட்டும்.

கவியில் புதுவித வார்த்தைகளை நான் உங்களிடம் நிறைய கற்றுள்ளேன்.

தொடர்ந்து எழுதுங்கள் தொடர்ந்துவருகிறோம்..

விஜய் said...

@ மலிக்கா

மிகுந்த நன்றி சகோதரி.

தங்களின் வாழ்த்தும் அறிவுரைகளும் என்னை மேம்பட்ட நிலைக்கு கொண்டுசெல்ல உதவும்

நெஞ்சார்ந்த நன்றிகள்

விஜய்

PPattian said...

வாழ்த்துக்கள் விஜய். உங்கள் எழுத்து மென்மேலும் சிறக்கட்டும்.

//எனது கவிதைகளை படிக்கும் தண்டனை தருவது தவிர !!!!!!//

சுகமான தண்டனைதான் :)

விஜய் said...

@ புபட்டியன்

தங்களின் வாழ்த்தும் ஆசியும் நல்ல எழுத்துகளை பெற வைக்கும்

நன்றி நண்பா

விஜய்

புலவன் புலிகேசி said...

அன்ணே உங்க 50 ஐ மிஸ் பண்ணிட்டேனே..சரி தமதமானாலும் தம்பியின் வாழ்த்துக்கள்...

விஜய் said...

@ புலவன் புலிகேசி

மிகுந்த நன்றியும் அன்பும் தம்பி

விஜய்

பா.ராஜாராம் said...

வாழ்த்துகள் சகோதரா,மக்கா,பங்காளி...

அப்புறம்,

என் இனிய கவிஞனே.. :-)

விஜய் said...

@ பா.ரா

லேட்டா வந்தாலும் குசும்பு குறையவில்லை பங்காளிக்கு

சிரம் தாழ்ந்த நன்றி

விஜய்

விஜய் said...

வாழ்த்திய அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகளை காணிக்கை ஆக்குகிறேன்

விஜய்

சுந்தரா said...

என்னுடைய வாழ்த்துக்களும் விஜய்!

விரைவில் நூறாவது பதிவுக்கும் வாழ்த்திட விழைகிறேன்.

விஜய் said...

@ சுந்தரா

நெஞ்சார்ந்த நன்றியும் அன்பும் சகோதரி

விஜய்

அன்புடன் நான் said...

இப்பதான் படித்தேன்... மாறுப்பட்ட கோணத்தில் ஒரு 50 தாவது பதிவு..... வாழ்த்துக்கள்

தொடருங்கள்....
தொடர்கிறோம்.

விஜய் said...

@ அரசு

நெஞ்சார்ந்த நன்றி எனதருமை நண்பா

விஜய்

alex paranthaman said...

இன்னும் பல ஆக்கங்கள் படைக்க வாழ்த்துக்கள் தோழரே

விஜய் said...

@ மன்னார் அமுதன்

மிகுந்த நன்றியும் அன்பும் நண்பா

விஜய்

Nathanjagk said...

எல்லா விஜய்-களும் 50 ​கொண்டாடும் வாரம் போல இது!

சுறாவாக சுணங்காமல் புறாவாக பறக்கிறது உங்களின் 50!

வாழ்த்துக்கள் கவிதை தளபதியே :))))

விஜய் said...

@ ஜெகா

மிகுந்த நன்றி நண்பா

தங்களை போன்றோரின் பாராட்டுகளும், விமர்சனங்களுமே என்னை சற்று செதுக்கி கொள்ள முடியும்.

பட்டம் வேற கொடுத்துட்டீங்க, தளபதின்னாலே சிக்கல்தான்

விஜய்