20.7.10

கவிதைகளிரண்டு




ஒன்று 


வான் கடலில் 
மேகக்கப்பல் 
வளிக்காதலனின் 
வலிந்த அணைப்பில் 
நட்சத்திர நங்கூரங்கள் 
தெறித்து 
தெளித்தது 
விரக மழை 


இரண்டு 


மூளை கருப்பையில் 
முளைக்கும் கவிதைகள் 
இதயத்தமனிகளில்
நுழைந்து பிறக்கிறது 
சுகப்பிரசவம் சிலருக்கு 
பிரசவ சுமை பலருக்கு 
கவிதையின் தொப்புள் கொடி
கவிஞனிடமிருந்து அறுக்கப்படும் 
விமர்சன கத்தி கொண்டு ........


22 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமையான கவிதைகள் ....

பாராட்டுக்கள்

தமிழ் அமுதன் said...

கவிதைகள் உயர் தரம் ...! அருமை..!

பத்மா said...

நட்சத்திர நங்கூரமும்

விமர்சன கத்தியும் அருமை

ஹேமா said...

விஜய் ... இரண்டாவது கவிதை எப்போதுமே உண்மை !

ஸ்ரீராம். said...

நல்ல கவிதைகள்..

//"சுகப்பிரசவம் சிலருக்கு
பிரசவ சுமை பலருக்கு"//

எனக்குக் கவிதைகள் பிறப்பதேயில்லை...!! அபார்ஷன் ஆகி விடுகின்றன!!.

Kala said...

ஸ்ரீராம், காலதாமதம் செய்யாமல்
ஒரு சிறந்த மகப்பேறு மருத்துவரை
அணுகி,,ஆலோசணை பெறவும்
“கரு”ச் சிதைவை
“கரு” த் தரிக்க வைக்க!!

Kala said...

விஐய்,
இயற்கையும்,கவியும்
உங்கள் எண்ணப் பரவசத்தால்
பிரசவித்து விழுந்த சொல்
அழகான ஆழம்.

நன்றி விஐய்.

கமலேஷ் said...

இரெண்டும் ரொம்ப நல்லா இருக்குன்னே...

விஜய் said...

@ உலவு

மிகுந்த நன்றி

விஜய்

விஜய் said...

@ ஜீவன்

உயர்தர வாழ்த்துக்கு நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ பத்மா

வாழ்த்துக்கு நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

ஒருநாள் நிச்சயம் பிறக்கும் நண்பா

நன்றி

விஜய்

விஜய் said...

@ கலா

டாக்டர். கலா . எம்.பி.பி.எஸ்., டி.ஜி.ஓ

விஜய்

விஜய் said...

@ கலா

பரவசம்
பிரசவம்

எப்பிடிங்க உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் தோணுது

நன்றி

விஜய்

விஜய் said...

@ கமலேஷ்

நெஞ்சார்ந்த நன்றி தம்பி

விஜய்

பனித்துளி சங்கர் said...

கவிதைகளும் , புகைப்படமும் அருமை . ஆனால் முதல் கவிதையில் ///வளிக்காதலனின் /// என்பது இங்கு சரிதானா என்பதில் எனக்கு சிறு சந்தேகம் சரி பாருங்கள் . பகிர்வுக்கு நன்றி

விஜய் said...

@ ஷங்கர்

வளி என்றால் காற்று நண்பா

நன்றி

விஜய்

சிவாஜி சங்கர் said...

அண்ணாவோட ஃப்ளேவர்... ரெண்டும் நல்லாருக்கு..

Thenammai Lakshmanan said...

ரொம்ப அருமை விஜய் இது...ரசித்தேன்..

சுகப்பிரசவம் சிலருக்கு
பிரசவ சுமை பலருக்கு
கவிதையின் தொப்புள் கொடி
கவிஞனிடமிருந்து அறுக்கப்படும்
விமர்சன கத்தி கொண்டு ........


...

விஜய் said...

@சிவாஜி சங்கர்

நன்றி தம்பி

நலமா ?

விஜய்

விஜய் said...

@ தேனக்கா

அக்கா பிஸிக்கு நடுவில் வாழ்த்தியமைக்கு நன்றி

விஜய்

Unknown said...

Simply superb! Best wishes! ---- Vidya Senthil, Madurai.