22.8.10

பூப்படையா மழை





சிறார்களின் 
அனிச்சை ஆச்சர்யம் 


ஓவியர்களுக்கு 
செம்மண் காடுகளில் 
வான்துகள்களின்
வண்ணக்கலவை 
எம்பாசிங் 


கவிஞர்க்கு 
இலை நெற்றியில் 
நீர்ப்பொட்டு


தேவமாதுருக உழவர்க்கு 
ருண விமோசன அட்சயம் 


பாடகருக்கு 
சட்ஜமம்
சமைக்கும்
சங்கீதம் 

காதலர்க்கு 
மெல்லிய தூறல் 
மெல்லிசைக்காமம்

நடைபாதை வியாபாரிக்கு 
சனியன் 



தவளைக்கு 
சங்கீத மேடை 


எறும்புக்கு 
அறைச்சிறை


ஆழ்மட்டம் வற்றியோருக்கு 
ஆனந்த சேமிப்பு 


மழைத்திவலை 
மட்டுமுண்ணும்
சாதகப்பட்சிகள் 
சந்ததியழிந்தது


எச்சத்தின் மிச்ச 
விதைக்கு கொலஸ்ட்ரம்


நகர அழுக்குகள் 
துடைக்கப்பட்டு 
கிராம உள்வாங்கல் 


பக்க வாத்தியம் முழங்க 
பளிச்சென படமெடுக்க 
மண்ணும் மாரியும் 
பகிரங்க நிஷேகம் 


சில்வர் அயோடைட் தூவினால் 
கிட்டுமா இதெல்லாம் ?


ஆனாலும் 
பருவம் பொய்த்தே பெய்கிறது 
பூப்படையா மழை 




  

24 comments:

பத்மா said...

எப்படி பெய்தால் என்ன? மழை மழை தான் .
அழகாய் இருக்கிறது கவிதை ..

விஜய் said...

@ பத்மா

நன்றி சகோ

விஜய்

Thenammai Lakshmanan said...

தேவமாதுருக உழவர்க்கு
ருண விமோசன அட்சயம் //


இது ரொம்ப அற்புதம் விஜய்

விஜய் said...

@ தேனக்கா

நெஞ்சார்ந்த நன்றிகள் அக்கா

விஜய்

சத்ரியன் said...

//காதலர்க்கு
மெல்லிய தூறல்
மெல்லிசைக்காமம்//

எப்போதும் காதலுடன் இருப்பதால் இதுவும்,


//ஆழ்மட்டம் வற்றியோருக்கு
ஆனந்த சேமிப்பு //

விவசாய வம்சத்தைச் சார்ந்தவன் என்பதாலோ என்னவோ இந்தவரிகள் ரொம்ம்ம்ம்ம்ப பிடிச்சிருக்கு விஜய்.

பா.ராஜாராம் said...

பங்காளி,

ரொம்ப பிடிச்ச கவிதை இது. முக்கியமா, தலைப்பு.

விஜய் said...

@ சத்ரியன்

நன்றி நண்பா

விவசாயம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது இன்னும் சில வருடங்களில் தெரிந்து விடும்.

விஜய்

விஜய் said...

@ பங்கு

நலமா ?

ஏதோ சிலசமயம் எனக்கும் சில நல்ல வார்த்தை கோர்வை கிடைக்கிறது பங்கு

நன்றி பங்கு

விஜய்

கவிநா... said...

மழை அழகு... மழைக்கவிதை பேரழகு....
குளிர்கிறது படத்தைப் பார்த்தாலே...
அற்புதமான படத்தேர்வு.... ஆனால் பாவம் அந்த சிறுவர்கள்... மொத்தத்தில் ஒரு உணர்வு மழை....
அருமை தோழரே....

Kala said...

ஆனாலும்
பருவம் பொய்த்தே பெய்கிறது
பூப்படையா மழை \\\\\\\\

இது முற்றிலும் உண்மை நண்பரே!

இப்போது காலநிலையிலிருந்து ....
எல்லாமே மாறிவிட்டது,மாறிவருகின்றது
நல்ல சிந்தனை நன்றி.

ஆமா,மழை ஆராட்சி செய்யத்தான்
இவ்வளவு நாளும் விடுப்பா?

தலைப்பு அழகு விஐய்

ஹேமா said...

விஜய் சுகம்தானே !

தலைப்பே அழகு விஜய்.
மழைபோலக் குளிர்ச்சி...கவிதை.

நேசமித்ரன் said...

அழகாய் இருக்கிறது தலைப்பு! கவிதை இன்னும் கொஞ்சம் நகாசு செய்யுங்களேன் :)

விஜய் said...

@ கவிநா

தொடர் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிகுந்த நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ கலா

சிந்தனை வாழ்த்திற்கு நன்றி

அலுவல் சுமை

ஆராய்ச்சி எல்லாம் ஒன்றுமில்லை

விஜய்

விஜய் said...

@ ஹேமா

சுகம்தான் ஹேமா

நீங்கள் சுகம்தானே ?

நெஞ்சார்ந்த நன்றி

விஜய்

விஜய் said...

@ நேசன்

நம்ம பரம்பரை தொழிலே நகாசுதான்

ஆனா கவிதையில் கைகூடவில்லை

முயல்கிறேன்

நன்றி நண்பா

விஜய்

Unknown said...

பூப்படையாத மழை... பூப்படைந்த கவிதை! அருமை!

விஜய் said...

@ வைகறை

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பா

விஜய்

ஸ்ரீராம். said...

காலம் தாழ்த்தி வந்தாலும் என்றுமே அழகுதான் .... மழையும், விஜயின் கவிதையும்...!

விஜய் said...

@ ஸ்ரீராம்

நலம் தானே நண்பா ?

காலம் தாழ்த்தி வந்தாலும் ஏற்றுகொண்டதற்க்கு நன்றி நண்பா

விஜய்

கவி அழகன் said...

கடைசி வரி வலிக்கிறது

விஜய் said...

@ யாதவன்

மிகுந்த நன்றி நண்பா

விஜய்

ராமலக்ஷ்மி said...

கவிதை அழகு, மழை போலவே.

விஜய் said...

@ ராமலக்ஷ்மி

நெஞ்சார்ந்த நன்றி சகோ

விஜய்