19.9.10

பிரேத சோதனை



ஆடி வந்தால் எண்பதென்றவள்
ஆனியில் அடங்கிப்போனாள் 
சலனமற்ற வீட்டில் 
ஓரமாய் வெற்றிலைபெட்டி
கொடியில் பறக்கும் 
கிழிசல் சேலையின் சாமரம் 
நசுங்கிய குவளையில் 
கடைசி தண்ணீர் 
சின்னவளுக்கு 
ஆத்தோர நிலம்பற்றியும் 
பெரியவனுக்கு பாம்படத்தில் 
அரக்கு இருக்குமோ என்ற
கவலையும் 
பிரேத நாற்றத்தில் 
மொய்க்கும் ஈக்களாய்  

26 comments:

Unknown said...

simply superb. Good Job ---- Vidya Senthil.

செந்தில்குமார் said...

ம்ம்ம்ம்....வலிகள் வரிகளாய்

விஜய் said...

@ Senthil

Thanks

vijay

விஜய் said...

@ செந்தில்குமார்

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி நண்பா

விஜய்

Anonymous said...

maranathuku pin enna enbathai nachunu naaluvariyil....

விஜய் said...

@ தமிழ்

நன்றி சகோ

விஜய்

சிவாஜி சங்கர் said...

ரைட்டு ண்ணே...

Thenammai Lakshmanan said...

உண்மை விஜய் .. யதார்த்தம் நச் சென்று இருக்கிறது

விஜய் said...

@ சிவாஜி சங்கர்

தம்பி நலமா ?

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தம்பி

விஜய்

விஜய் said...

@ தேனக்கா

நன்றி அக்கா

விஜய்

ஸ்ரீராம். said...

மனதைச் சுடும் கவிதை. படம் தேடிப் பிடித்துப் போட்டிருக்கிறீர்கள் விஜய்.

Kousalya Raj said...

யதார்த்தம் உணரவைக்கும் கவிதை...!!

wishes.

விஜய் said...

@ ஸ்ரீராம்

நன்றி நண்பா

ஆமாம் நண்பா இந்த படம் இக்கவிதைக்கு பொருத்தம்

விஜய்

விஜய் said...

@ கௌசல்யா

வாங்க சகோ

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

விஜய்

Anonymous said...

கவிதை வரிகளும், அதேற்கேற்ப அந்த மூதாட்டியின் படமும் மனதை கலங்கடித்து விட்டது விஜய்.

விஜய் said...

@ மீனாக்ஷி

நன்றி SPS

இன்னும் இதுபோன்ற நிகழ்வுகள் பற்றிய செய்திகள் காதுகளில் விழுந்துகொண்டுதான் இருக்கிறது

விஜய்

thiyaa said...

அருமையான கவிதை

விஜய் said...

நலமா நண்பா

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா

விஜய்

ஹேமா said...

விஜய் சுகம்தானே !

பாசமா வயோதிபமா என்று ஒரு தாயவளோடு போட்டி போடும் தருணங்களாய் கவிதை.

விடுமுறை நேரத்தில் தவறவிட்டிருக்கிறேன் இக்கவிதையை விஜய்.

விஜய் said...

@ ஹேமா

வாங்க ஹேமா

நலம் தான்

வாழ்த்துக்கு நன்றி ஹேமா

விஜய்

vasan said...

உண்ட‌ இட‌த்திலேயே 'ரெண்ட‌'கம் செய்யும் ஈக்க‌ள். மிக‌ச் சரியான‌ உவ‌மைதான்.

விஜய் said...

@ வாசன்

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி நண்பா

விஜய்

தமிழ் said...

வலி

விஜய் said...

@ திகழ்

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா

விஜய்

அன்புடன் மலிக்கா said...

யதார்தங்கள் வரிகளாய் தெறிக்கிறது சகோ..

விஜய் said...

@ மலிக்கா

நலமா சகோ

நெஞ்சார்ந்த நன்றி சகோ

விஜய்