8.6.12

பகல் இரவு



காரிருள் மறைக்கும் நிலவிரவு 


வீசும் காற்றில் கொடியின் 
முந்தானை விலக்கும் கிளைகள் 


அரவமற்ற சாலையில் 
ஆண் நாயின் ஊளை


மின்கம்பியிலமர்ந்த 
கோட்டானின் கொக்கரிப்பு 


பறக்கும் விண்மீனாய் 
மின்மினிகள் 


எங்கோ ஒரு ஈர முனகலும்
ஏக்க பெருமூச்சும் 


நள்ளிரவு நளினங்களை 
துயிலாமல்  ரசித்தேன் 


புலர் பொழுது சூரியனும்


பால்காரனின் மிதிவண்டி மணியும் 


பேப்பர் பையனின் "சார்"  


காய்கறிக்காரியின் "மாங்காய்" 


எதுவும் என்னுள் நுழையாதபடி 


சுகித்துறங்கினேன்


நள்ளிரவின் எச்சங்களை 
சுமந்தபடி........................

13 comments:

விஜய் said...

புதிய டெம்ப்ளேட் மாறியதால் யாரும் கமென்ட் போட முடியாமல் போயிற்று. தம்பி பிரேம் சொல்லிய பிறகுதான் தெரிந்து கொண்டேன். திருத்தி விட்டேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

மாலதி said...

மிகவும் சிறப்பான பதிவு இரவின் வெளிச்சங்களை அழகாக பதிவு செய்து உள்ளமை பாராட்டுதலுக்குரியது

விஜய் said...

@ மாலதி

நன்றி சகோ

விஜய்

Unknown said...

arumai anna

ஸ்ரீராம். said...

இரவு நெடுநேரம் கண்விழித்துக் காலையில் நேரம் கழித்து எழுந்திருப்பது போல நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கவிதை. அருமை விஜய். பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே வந்தேன். என் கமெண்ட்டை ஏற்றுக் கொள்ள மறுத்து நீங்கள் உள் வட்டத்தில் இல்லை என்று சொல்லி, என் பெயரில் நான் இருந்தாலும் உள் வட்டப் புதிய பெயரில் 'லாக் இன்' செய்யச் சொல்லி.... படுத்தி விட்டது!

Suji... said...

nice anna.

பரிதியன்பன் said...

அருமை விஜய் வாழ்த்துகள்

பரிதியன்பன் said...

அருமை விஜய் வாழ்த்துகள்

மோ.சி. பாலன் said...

நன்று.

எங்கள் ஊரில் மின்மினிப் பூச்சிகளைப் பார்த்து வருடங்கள் பல ஆகிறது..எங்கே போயின அவை?

விஜய் said...

வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

விஜய்

pkanniyappan said...

பகல் இரவு - என்ற தலைப்பில் நான் படித்த முதல் கவிதையே மிக அருமையாக இருந்தது.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்... பாராட்டுக்கள்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/5.html) சென்று பார்க்கவும்...

நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…

பால கணேஷ் said...

வலைச்சரத்தில் ‘எங்கள்’ மூலம் உங்களைப் பற்றி அறிந்து இங்கு வந்தேன். நல்லதொரு கவிதையை ரசிக்க முடிந்ததில் மிகத் திருப்தி எனக்கு. மீண்டும் வருகிறேன். நன்றி.