தடயவியல் பொடிகளை
தூவினால் தெரியும் என்னுடல்
முழுக்க உன் ரேகைகள்
மெம் டிஎன்ஏக்களில் உனது
மூலக்கூறு முளைக்கும்
பிளேட்லெட்டுகளில் உன்
பெயர் தெரியும்
கண்ணிமை மூடினாலும்
கருவிழிக்குள் நீ இருப்பாய்
ஆக்சிஜனும் மணக்கும்
உன் சுகந்தத்தால்
கவிதைக்கு கருவாய்
சிலிர்ப்பிற்க்கு ஸ்பரிசமாய்
புன்னகைக்கு பொருளாய்
உணவிற்கு சுவையாய்
உணர்விற்கு உயிராய்
எல்லாமும் நீயே
நீயே தான் நான் .......................
3 comments:
இனிமையான சுகந்தமான வரிகள்...
வாழ்த்துக்கள்...
விஞ்ஞானக் கவிதை.
எல்லாமும் நீயே... அருமை.
Post a Comment