பெட்டிக்கடை ஐந்து பைசா
எலந்த வடை
மூணாங்கிளாசில் அனு தந்த
கொடுக்காப்புளி
ஐஸ்மணி கன்னம் கிள்ளி தரும்
சேமியா ஐஸ்
வாய் மணக்கும்
சூட மிட்டாய்
சாலிடரில் பார்த்த
ஒலியும் ஒளியும்
நேஷனல் பேனாசோனிக்கில் கரைந்த
இது ஒரு பொன் மாலைப்பொழுது
பதினெட்டு பொக்கிஷமடங்கிய
TDK- 90
தெரு அதிர்ந்த
பானை ஸ்பீக்கர்
இளமைக்கால கனவு ஹீரோ
இரும்புக்கை மாயாவி
விறகடுப்பில் சமைத்த
வெண்பொங்கல்
மின்வெட்டின் ஆபத்பாந்தவன்
சிம்னி விளக்கு
தென்றல் தவழும்
பனையோலை விசிறி
நிழற்படம் கற்ற
Yashika - Electro 35
பத்திரப்படுத்திய அன்பு
பொங்கல் வாழ்த்து
பரவச நிலை தரும்
தியேட்டர் முன்பெஞ்சு
கரை தொடும்
காவிரி
இரைச்சல் இல்லா
மண் சாலை
கெமிக்கல் கற்பூரமில்லா
கருவறை
உன்னால் அழகான
தாவணி
இறந்த அன்று மட்டும்
அப்பாவை எழுப்பாத
டைம் பீஸ்
திரும்பக்கிடைக்குமா ......................................
5 comments:
அருமை விஜய்.
ஆனால் கடைசி வரி வலி..
நினைவுகளை மீட்டெடுத்த கவிதை. மிக அருமை.
அன்புள்ள அறிஞரே! தங்களுக்கென வலைப்பதிவர் விருது பகிரப்பட்டுள்ளது. அதனைத் தங்கள் தளத்திலும் பதிந்து உதவுமாறு விரும்புகின்றேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்வையிடுக.
வலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா?
http://wp.me/pTOfc-b9
இளமையின் எழில் கவிதையாக பளிச்சிடுகிறது. நன்று
அருமை
Post a Comment