2.5.10

ஹேமா, தேனக்கா மற்றும் பலர் - 50வது பதிவு



எட்டு மதங்களுக்கு முன் Monotonous lifeல் Freezeஆகி நின்றபோது திடீரென்று கண்ணில் பட்டது வலையுலகம். நாமும் கவிதை எழுதி பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதே எழுதிப்பார்ப்போம் என்று எழுத ஆரம்பித்தேன்.

முதல் ஊக்குவிப்பாக ஹேமாவின் பின்னூட்டம் என்னை அங்கீகரித்தது. தொடர்ந்து எழுதினால் உங்கள் எழுத்தும் மிளிரும் என்று ஹேமாவின் அறிவுரை, இன்று நானும் ஒரு வலைபதிவராக ஆகமுடிந்து ஐம்பதாவது பதிவு போடமுடிகிறதென்றால் முதல் காரணம் ஹேமாதான்.

அதன்பின் தேனக்காவின் பாராட்டு, சின்ன சின்ன வரிகளில் அற்புதமாக எழுதுகிறீர்கள் என்று. மிக பெரிய அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சி என்னுள். என் சகோதரியாக அவ்வப்போது எனை வழிநடத்துவதில் முதல் நபராக இருப்பது தேனக்காதான்.

குறையுள்ள கவிதைகளை கூட விவரித்து நிறைவுற்ற பிறையாக மாற்ற  முனையும் நண்பர் நேசமித்திரன்.

யதார்த்தத்தின் மறுபெயராய் நான் கோவித்தால் கூட சிறு குழந்தைக்கு நிலவு காட்டுவது போல் என் மனதிருக்குள் நுழையும் பா.ரா.

வலிய வந்து பாராட்டி மகிழும் அன்புச்சகோதரி தமிழரசி

பின்னூட்டத்தை கூட கவிதையாய் பொழியும் அன்பு நண்பர் சந்தானசங்கர்

எனக்கு முதன் முதல் விருது தந்த எனதருமை தம்பி புலவன் புலிகேசி

இரண்டாவது விருது தந்து எனை அன்பு சகோதரனாய் பாவிக்கும் மலிக்கா

எனது அகசூல் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து உதவிய ஜீவன்

வலைச்சரத்தில் எனது கவிதை தளத்தை அறிமுகம் செய்த சகோதரி இயற்கை,
அ.மு.செய்யது, வானம்பாடிகள்,அக்பர்
தொடர்ந்து ஊக்குவிக்கும் ஜோதிட ஓஷோ சித்தூர்.முருகேசன்

தொடர்ந்து வாசித்து வாழ்த்தும் ராமலக்ஷ்மி அக்கா

ரசித்து வாழ்த்தும் எங்கள் ஸ்ரீராம்

வித்தியாச கவிதைகளால் வியக்கவைக்கும் சிவாஜி சங்கர்

எப்பொழுதும் வாழ்த்தும் பாலா

வாழ்த்தியே கலாய்க்கும் அன்பு நண்பன் சத்ரியன்

தவறாமல் வாழ்த்தும் நண்பர் கருணாகரசு

பின்னூட்ட புயலாக அறியப்படும் ஜெகநாதன்

பின்னூட்ட சுனாமியாக அறியப்படும் கலா

வாய்ப்பு தந்திருப்பேன் என்று சொன்ன இயக்குனர் செல்வக்குமார்

ஆரம்பத்தில் தொடர்ந்து ஆதரவு தந்து வாழ்த்திய ரசிகை

கவிநண்பன் கமலேஷ்

எங்க ஊர் புபட்டியன்

மனது நிரம்பி வாழ்த்தும் பலா பட்டறை ஷங்கர்

அன்புச்சகோதரி ஜலீலாக்கா

அன்புச்சகோதரி காயத்ரி

மற்றும்

கலகலப்ரியா, காரூரன், வாணிநாதன், ஜெரி ஈசானந்தா, பின்னோக்கி, நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார், ஊடகன், கவிக்கிழவன், விக்னேஷ்வரி, வேல்ஜி

உழவன், க.பாலாசி, ராஜலக்ஷ்மி பக்கிரிசாமி, சந்ரு, தியாவின் பேனா

பாலா கவிதைகள், யாத்ரா, முகமூடியணிந்த பேனா, S.A. நவாஸுதீன்

பிரியமுடன்...வசந்த், பூங்குன்றன்.வேவிதூஷ், ரிஷபன், சிங்கக்குட்டி

சுந்தரா, ஆ.ஞானசேகரன், பத்மா, அண்ணாமலை�@����<��nE0��், ஆர்.கே.சதீஷ்குமார்

மதுரை சரவணன், பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி, .. பனித்துளி சங்கர் ....

பிரியா, ரோஸ்விக்,யாதவன், திவ்யாஹரி, அஹமது இர்ஷாத், சக்தி

People call me "Paul"..., மோனி, +யோகி+, சிவன், சுதாகர் குமார் LK

திருஷ், ஸ்டார்ஜன், ஜில்தண்ணி, பவி, nige k,பித்தனின் வாக்கு, மன்னார் அமுதன்,

றமேஸ், தமிழினிமை...செந்தில் நாதன், விழியில் விழுந்தவன்

தேவன் மாயம், விவேக் நாராயண், Jayaprakash Sundarraj, zoooo, Lee

இவர்களுக்கு எல்லாம் நன்றி என்று ஒற்றை வார்த்தையை மட்டும் எப்படி காணிக்கை ஆக்குவது என்று தெரியவில்லை.

என்ன கைம்மாறு இவர்களுக்கு செய்யபோகிறேன் எனது கவிதைகளை படிக்கும் தண்டனை தருவது தவிர !!!!!!











29.4.10

நோஸ்டால்ஜிக் கவிதை - 3

 நிலவைத்தேடும்  நினைவு
 

என் கவிதையின் விதை நீ
வாழ்க்கைக் கதையின் கரு நீ
எந்தன் யுகத்தின் சுகம் நீ
என் வாழ்வில் சுவைத்திராத சுவை நீ
சுகித்திராத சுகந்தம் நீ
துறவறம் கலைத்த தேவதை நீ
உன் பிரிவு
அமிர்தமும் அமிலமானது
நினைவுகள் நித்திரை கலைத்தது
உன் தழுவல்கள் உணவு தொலைந்தது
உன் சிரிப்புகள் அழ வைத்தது
உன் நினைவில், கனவில்
என் நெஞ்சம் எனை மறந்து
உனை தஞ்சம் புக எதிர்பார்க்கின்றது
வருவாயா ?
விரைவில்.........


(சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் எழுதியது )



28.4.10

நோஸ்டால்ஜிக் கவிதை - 2



பெண்கள் வருங்கால இந்தியாவின்
வளர்ச்சி தூண்கள்
 

விளக்கில் விழும் விட்டில்களல்ல
உலகின் நாகரீகத் தொட்டில்கள்
 

மின்னி மறையும் நட்சத்திரங்களல்ல
ஒளிர்ந்து வரும் நெருப்புக்கோளங்கள்
 

வர்ணிக்கப்படும் கவிதைகளல்ல
வாசிக்கப்படும் செய்தித்தலைப்புகள்
 

கண்கள் காதலுக்கு மட்டுமல்ல
சாதீயினக் கொடுமைகளின் சாடலுக்கும்தான்
 

சமுதாயப்பார்வையில் கோழைகளல்ல
சமூகத்தை சீர்திருத்தும் தங்கப்பேழைகள்
 

ஆண்டாண்டு காலமாய் பேசப்படும்
பதுமைப்பெண்களல்ல
நூற்றாண்டு கவிஞன் கண்ட
புதுமைப்பெண்கள்
 

முகவரியற்ற முகாரிகளல்ல
முகத்தைக்காட்டும் முத்துச்சிப்பிகள்
 

இழிவு செய்தால் நலிவு கொள்பவர்களல்ல
ஏழுலகம் ஏத்தும் கலியுக கவசங்கள்
 

கண்ணீர் எங்களுக்கு ஆயுதமல்ல
நாங்கள் நிராயுதபாணிகள்
 

ஏக்கங்கள் எங்களுக்கல்ல
ஆக்கத்தின் தாக்கங்கள் மட்டும்
 

நல்ல பொழுதில்
சூளுரைகளெனும் வாளுரைகளை எடுப்போம்
ஏங்கிய காலத்தை வேம்பாய் மறப்போம்
தூங்கிய காலத்தையும் தூக்கி எறிவோம்
வரதட்சிணையை வாகாய் ஒழிப்போம்
வருங்காலத்தை வளமாக்குவோம்
அடுப்பறையை விட்டு ஏடு
எடுப்பறைக்கு வருவோம்
எழுத்தறிவு பெற்று எதையும் சாதிப்போம்
பெண் சிசுக்களை திசுக்களைப்போல் காப்போம்
பெண்கள் வருங்கால இந்தியாவின்
வளர்ச்சி  தூண்கள்


( 17 ஆண்டுகளுக்கு முன் 18.04.1993 அன்று திருச்சி வானொலியில் ஒலிபரப்பான கவிதை )

 

26.4.10

உலகின் முதல் தொழில் 18+




குதப்பிய  வெற்றிலையும்
குழம்பிய மாராப்பும் 
வட்ட பொட்டும் 
வாசனை பவுடரும் 
காப்புரிமை பெற்ற 
காம தெய்வங்கள் 

முலைப்பால் கட்டியும் 
தலைப்பு விளக்கி 
தாகமடக்கும் 
தரும மகள்கள் 

சந்திரன் வன்புணர்ந்த 
கருவானமிருட்டிலும் 
இந்திரிய நெடி 
இதயம் முழுதும் 

சுருட்டி பெற்ற பணத்தில் 
மூத்தவளுக்கு முக்கா சைஸ் நோட்டும் 
சின்னவனுக்கு சுரமருந்தும் 

அவளின் வேண்டுதல் 
ஆண்டவனிடம் 
அடுத்து வர்ரவனாவது 
ஆணுரையோடு வரவேண்டும்..........

21.4.10

நோஸ்டால்ஜிக் கவிதை - 1


எங்கிருந்து வந்தாய்
என் இதயம் எனக்காக துடிக்க மறுத்து
என் நினைவு எனக்காக சிந்திக்க மறுத்து
என் வார்த்தை எனக்காக பேச மறுத்து
எல்லாம் உனக்காக என்றான போது
நீ என் இதயத்தை விட்டு
மூளையை ஆக்கிரமித்தாய்
உடலை விட்டு உயிரை சேகரம் செய்தாய்
உன்னிடம்
குழந்தையின் குறும்பு கண்டேன்
குமரியின் குழறல் கேட்டேன்
உனக்காக
உணவு மறந்து தூக்கம் தொலைந்து
கனவுகளில் நிஜமாகி போனேன்
காத்திருக்கிறேன்
நினைவுகளில் நிதர்சனமாய் வா ...


(12 வருடங்களுக்கு முன் எழுதிய கவிதை)