30.9.10
காமக்கடும்புனல் 18+
வசனமற்ற படங்களின்
மூளைப்புணர்ச்சி
சாணிக்காகிதத்தின்
ஈன இலக்கியங்கள்
மதிய மழையில்
வெள்ளை ரவிக்கை
குனிந்து போடும் கோலத்தில்
புழுதியாகும் மனது
இருக்கையற்ற பேருந்தின்
நெருக்கத்தில் மல்லிகை மணம்
காசுக்கு புணரும்
தாசியின் சிணுங்கல்
கார்ப்பரேட் பாட்டிகளின்
தொப்புள் தரிசனம்
எதிர்வீட்டு விதவையின்
அமாவாசை இரவுகள்
துடை தடவும்
ஹோமோ நண்பன்
ஆற்றங்கரையோர
வயோதிக வாயூரிசம்
ஹன்சபந்த
கோபுரக்கலவி
மயக்கும் மாந்திரீக
மைதுனஸ்தம்பம்
சிந்தனை சீழ்களின்
விந்தை ஔஷதம்
மனையாளை துய்ப்பதே ..............
19.9.10
பிரேத சோதனை
ஆடி வந்தால் எண்பதென்றவள்
ஆனியில் அடங்கிப்போனாள்
சலனமற்ற வீட்டில்
ஓரமாய் வெற்றிலைபெட்டி
கொடியில் பறக்கும்
கிழிசல் சேலையின் சாமரம்
நசுங்கிய குவளையில்
கடைசி தண்ணீர்
சின்னவளுக்கு
ஆத்தோர நிலம்பற்றியும்
பெரியவனுக்கு பாம்படத்தில்
அரக்கு இருக்குமோ என்ற
கவலையும்
பிரேத நாற்றத்தில்
மொய்க்கும் ஈக்களாய்
31.8.10
கவிதைகளிரண்டு - 1
சிசு
கருவறை
நீச்சலறையில்
களித்து குளித்து
கரைதட்டி
சிரம் தூக்கியது
சிசு
ஆயிரமாயிரம்
வல்லூறுகள்
வட்டமடிக்க
சடக்கென்று
உள்ளிழுத்து
வாயிலை மூடியது
முதிர்கன்னி
இருட்டறையில்
ஒழுகும் மெழுகுவர்த்தி
நீளுமிரவுகளில்
நிலவும் அவளும்
மட்டும் தனிமையில்
ஆயிரத்தோரிரவாக
போர்வைக்கும் புழுங்கும்
கிளிடோரிஸ் கனவுகள்
27.8.10
நன்றி நன்றி நன்றி
இன்றுடன் வலைப்பக்கம் ஆரம்பித்து ஒரு வருடமாகிறது.
பிரதிபலன் பாராத நட்புகளின் அன்பு என் மனக்குருதி கசிய வைக்கிறது.
பாராட்டுகளால் என்னை சீராட்டி வளர்க்கும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி
விஜய்
22.8.10
பூப்படையா மழை
சிறார்களின்
அனிச்சை ஆச்சர்யம்
ஓவியர்களுக்கு
செம்மண் காடுகளில்
வான்துகள்களின்
வண்ணக்கலவை
எம்பாசிங்
கவிஞர்க்கு
இலை நெற்றியில்
நீர்ப்பொட்டு
தேவமாதுருக உழவர்க்கு
ருண விமோசன அட்சயம்
பாடகருக்கு
சட்ஜமம்
சமைக்கும்
சங்கீதம்
காதலர்க்கு
மெல்லிய தூறல்
மெல்லிசைக்காமம்
நடைபாதை வியாபாரிக்கு
சனியன்
தவளைக்கு
சங்கீத மேடை
எறும்புக்கு
அறைச்சிறை
ஆழ்மட்டம் வற்றியோருக்கு
ஆனந்த சேமிப்பு
மழைத்திவலை
மட்டுமுண்ணும்
சாதகப்பட்சிகள்
சந்ததியழிந்தது
எச்சத்தின் மிச்ச
விதைக்கு கொலஸ்ட்ரம்
நகர அழுக்குகள்
துடைக்கப்பட்டு
கிராம உள்வாங்கல்
பக்க வாத்தியம் முழங்க
பளிச்சென படமெடுக்க
மண்ணும் மாரியும்
பகிரங்க நிஷேகம்
சில்வர் அயோடைட் தூவினால்
கிட்டுமா இதெல்லாம் ?
ஆனாலும்
பருவம் பொய்த்தே பெய்கிறது
பூப்படையா மழை
Subscribe to:
Posts (Atom)




