4.2.13

சில ஹைகூக்கள் - 3


சுதந்திர பறவையின் 
சிறகுகளில் 
மத சங்கிலி 

விதையின் 
தாய்ப்பால் 
மழை 

மறக்கவியலா நினைவுகளின் 
கல்லறை கல்வெட்டு 
டைரி 

22.1.13

நிகழ்காலம்


கோவிலுக்கு போனால் 
செருப்பு நினைவு 

சினிமாவுக்கு சென்றால் 
பூட்டின் சந்தேகம் 

சுற்றுலா வந்தால் 
அடுத்த மாத கடன் 

நேற்றோ நாளையோ 
எண்ணி 
நிகழ்காலத்தை 
தொலைக்கிறது 
மனது 

17.1.13

சில ஹைகூக்கள் - 2



ரோஜாக்கள் 
பள்ளி செல்கின்றன 
முட்களை சுமந்து..

பௌர்ணமி 
மறைவில் காதலர்கள் 
கறைபட்டு 
தேய்கிறது நிலா

நவரத்னங்கள் 
வெட்கின 
உன் நகரத்னம் 
கண்டு ........... 

27.12.12

போட்டிக்கு அனுப்பிய பாடல்

நான் படத்தில் தப்பெல்லாம் தப்பே இல்லை பாட்டுக்காக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி போட்டி வைத்திருந்தார். அதற்காக நான் எழுதிய சரணங்கள்.




1)
பாயும் புது ரத்தமிங்கு 
சாயும் பல சிங்கமிங்கு 
உடல்மொழி உருவத்தை உயர்த்திவிடு 

பாடும் கிளி வண்ணச்சிந்து
தேடும் இள நெஞ்சைக்கண்டு 
இலைமறை இதயங்கள் இணைத்துவிடு 

பூக்காடே வாழ்வென்றும் தீக்காடே 
பாரெங்கும் சீக்காடே  
சாகட்டும் சாக்காடே 

தேனூற்றி  மூளைக்குள் தீமூட்டி 
பூமிக்குள் நீரூற்றி
செய்யட்டும் அரசாட்சி ...........

2)
பூமி பல வண்ணப்பந்து
வாநீ புது எண்ணம் சிந்து
விரல்நுனி அசைவினில் சுருக்கிவிடு  
நாளை விடியட்டும் நல்ல
வேளை திசையெட்டும்  வெல்ல
உனதுயிர் உதிரத்தை உசுப்பிவிடு

நானல்ல நானன்றி நீயல்ல 
நீயன்றி நானல்ல 
நாமன்றி வேறல்ல 

காம்பல்ல பூவுக்குள் தேனல்ல
கீழோடும் வேரல்ல
வித்தன்றி வாழ்வேது ............

26.12.12

ஆறாம் விரல்


ஜனித்த நாள்முதல் தனது ஆறாம் விரலாய் என்னை இணைத்து
மரிக்கும் நொடி  வரை எனக்கு ஏழாம் அறிவை போதித்த
அயோத்யா ராமனாகவும்
துவாரகை கிருஷ்ணனாகவும்
விளங்கிய
எனது ஆருயிர் தந்தைக்கு
இந்த நூறாவது பதிவை
கண்ணீருடன் சமர்ப்பிக்கின்றேன்.