நிலவைத்தேடும் நினைவு
என் கவிதையின் விதை நீ
வாழ்க்கைக் கதையின் கரு நீ
எந்தன் யுகத்தின் சுகம் நீ
என் வாழ்வில் சுவைத்திராத சுவை நீ
சுகித்திராத சுகந்தம் நீ
துறவறம் கலைத்த தேவதை நீ
உன் பிரிவு
அமிர்தமும் அமிலமானது
நினைவுகள் நித்திரை கலைத்தது
உன் தழுவல்கள் உணவு தொலைந்தது
உன் சிரிப்புகள் அழ வைத்தது
உன் நினைவில், கனவில்
என் நெஞ்சம் எனை மறந்து
உனை தஞ்சம் புக எதிர்பார்க்கின்றது
வருவாயா ?
விரைவில்.........
(சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் எழுதியது )
15 comments:
நல்லாருக்கு விஜய்.
சொற்ப நேரமே வாய்க்கிறது.அப்படி,நம் மக்களின் பெயர் பார்த்து விட்டாலே வந்துவிடுவேன்தான்.உங்களையும் சேர்த்துதான் விஜய்,'இந்த நம் மக்கள்' என்பது. சரியா? :-)
எழுதிக் கொண்டே இருங்கள் மக்கா.
நல்லாருக்கு விஜய்
:)
விஜய்,
பத்தாண்டுகளுக்கு முன்பே எழுதியதா...?
அப்படின்னா ‘இப்ப’ மலரும் நினைவுகளா...!
ஆமா, தெரியாமத்தான் கேக்குறேன். “காதல்” நல்லதா? கெட்டதா? விஜய்.
@ பா.ரா
நன்றி மக்கா
விஜய்
@ நேசன்
நன்றி நண்பா
விஜய்
@ சத்ரியன்
தெரியலையேப்பா (நாயகன் கமல் மாடுலேஷனில் படிக்கவும்)
நன்றி நண்பா
விஜய்
கவிதை நல்லாயிருக்குங்க விஜய்.
உங்களுக்கு எனது மே தின வாழ்த்துக்கள்
காதலின் பரவசமும், பிரிவின் வேதனையும்...
கவிதை அருமை விஜய்...
@ அரசு
நன்றி நண்பா
உங்களுக்கும் மே தின வாழ்த்துக்கள்
விஜய்
@ அரசு
நன்றி நண்பா
உங்களுக்கும் மே தின வாழ்த்துக்கள்
விஜய்
@ ஸ்ரீராம்
நன்றி நண்பா
விஜய்
நினைவுகள் நித்திரை கலைத்தது
உன் தழுவல்கள் உணவு தொலைந்தது//
:)
aaavvvvvvv
(சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் எழுதியது )
அப்போவேவா..
அண்ணா கொஞ்சம் பயணத்தில் இருந்ததால் வலை இல்லத்திற்கு வர முடியவில்லை.. :( Sry..
அப்பாடி...விஜய் அப்பவேயா.
காதல் ஐஸ் கொட்டுது !
ஓ..எங்கிட்டயும் பழைய கவிதைகள் நிறைய கவிதைகள் இருக்கு.நீட்டுக் கவிதைகள்.போட்டா எங்க வந்து உதைப்பீங்களோன்னு பேசாம இருக்கேன்.இப்பிடி நோஸ்டால்ஜிக் கவிதைகள்ன்னு போடலாமோ !
@ சிவாஜி சங்கர்
நலம்தானே தம்பி ?
நன்றி
விஜய்
@ ஹேமா
அவசியம் பழைய கவிதைகள் போடுங்கோ
படிக்க சுவையாக இருக்கும் பழைய நினைவுகள்
நன்றி
விஜய்
Post a Comment