15.4.10

கற்றது காதலளவு



உன் சிணுங்கிய மொழி
தமிழ் பிடித்தது

உதிர்த்த சிரிப்பு
மின்னல் பிடித்தது

விசிறிய தாவணி
வேட்கை பிடித்தது

அசைந்த ரவிக்கை நூல்
காற்று பிடித்தது

ஒற்றிய உதடு
ஈரம் பிடித்தது

உன் பெயர்
கவிதை பிடித்தது

பற்றிய கைகள்
மின்சாரம் பிடித்தது

இறுக்கிய அணைப்பு
தியானம் பிடித்தது

நெஞ்சில் விரல் நகக்குறி
நிலா பிடித்தது

விழிகளின் ஊமை பாக்ஷை
மெளனம் பிடித்தது

எழுதிய கடிதங்கள்
கல்வெட்டு பிடித்தது

முத்துகளாய் வியர்வை
கடல் பிடித்தது

உச்சத்தில் உளறல்
காமம் பிடித்தது

ஆடையின் விடுதலை
கடவுள் பிடித்தது


18 comments:

Ahamed irshad said...

ரொமான்ஸ் ரகசியங்கள் கவிதையாய் அருமை..

தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே...

விஜய் said...

@ அஹமது இர்ஷாத்

தங்களின் தொடர்ந்த ஊக்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றி நண்பா

விஜய்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

கவிதை அருமை

பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்!

மோனி said...

..//ஒற்றிய உதடு
ஈரம் பிடித்தது//..

அருமை நண்பா...

Anonymous said...

மொத்தத்தில் உங்கள் கவிதையும் பிடித்தது விஜய்

Kala said...

விஜய்!
உங்கள் அனுபவக் கவிதையின்
வரிகள் பிடித்தது
எப்படிச் சொல்லலாமென
எண்ணுகையில் என்னை
வெட்கம் பிடித்தது

என் அன்பான தமிழ்ப் புத்தாண்டு
வாழ்த்துகள்

விஜய் said...

@ உலவு

நன்றி

விஜய் said...

@ மோனி

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ தமிழ்

படித்து பிடித்ததற்கு மிகுந்த நன்றி சகோதரி

விஜய்

விஜய் said...

@ கலா

வெட்கத்தில் எழுதிய வாழ்த்து பிடித்தது

விஜய்

சத்ரியன் said...

விஜய்,

படித்ததும் ‘கவிதை’மேல் பித்து பிடித்தது.

புத்தாண்டு வாழ்த்துகள்.

விஜய் said...

@ சத்ரியன்

நன்றி நண்பா

தங்களுக்கும் தங்கள் சுற்றத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

விஜய்

ஸ்ரீராம். said...

தினமும் இங்கு வந்து பார்க்கும் நேரம் பிடித்தது..
இன்றும் ஒன்றும் காணோமே என்றபோது ஏமாற்றம் பிடித்தது.
இப்போது இதைப் படித்ததும் கவிதை பிடித்து விட்டது.

விஜய் said...

@ ஸ்ரீராம்

கலக்குறீங்களே ஸ்ரீராம்

நன்றி நண்பா

விஜய்

சிவாஜி சங்கர் said...

தொடர்ந்து வித்யாசமான கவிதை..
உங்களிடமிருந்து..
கலக்குங்க.. அண்ணா :)

விஜய் said...

@ சிவாஜி சங்கர்

தம்பி நலமா ?

வாழ்த்துக்கு நன்றி தம்பி

விஜய்

அன்புடன் மலிக்கா said...

காதல் கவிதை கலக்கலாய் பிடித்தது.
அருமை..

விஜய் said...

@ மலிக்கா

மிகுந்த அன்பும் நன்றியும் சகோதரி

விஜய்