7.7.10

மாறுதிசை

எங்கள் ப்ளாக் நண்பர்களின் மாறுதிசை தொடர்பதிவிற்காக




பகலில் இரவும்
இரவில் பகலும்

ஈசான்யத்தில் மேடும்
நைருதியில் பள்ளமும்

முன்பு கிழக்கு பார்த்த வீடுகள் விற்கப்படும்
மேற்கு பார்த்த வீடுகள் வாங்கப்படும்

முஸ்லீம்களின் தொழுகை திசை மாறும்

சம்பா, நவரை, குறுவை காலம் மாறும்

வடமேற்கு பருவக்காற்றும், தென்கிழக்கு பருவக்காற்றும் மழை தரும்.

பத்திரத்தில் நான்கெல்லைகள் மாறுவதால் அரசு அதிகாரிகள் வருமானம் பெறுவர்.

திசைகாட்டி தெற்கு நோக்கும்

நாட்காட்டியில் சூலங்கள் மாறும்





இப்பதிவை தொடர நான் அழைப்பது 
ஜெகநாதன்  
அஹமது இர்ஷாத் 







30 comments:

ஹேமா said...

அழகாச் சின்னதா சொல்லி முடிச்சிட்டீங்க விஜய்.ஆனா இருக்கிறதையே சமாளிக்க முடில.மாறுதல் வேண்டாம் !

ஸ்ரீராம். said...

ஓ...பாட்டாவே படிச்சிட்டீங்களா....?!

சுருக்கம்...அருமை.

தனி காட்டு ராஜா said...

:-)

கௌதமன் said...

நன்றாக உள்ளது விஜய். வாழ்க, வளர்க.

கௌதமன் said...

தொடர்வதற்கு யாரேனும் இருவரை அழைக்கவில்லையா?

Ahamed irshad said...

சூப்பர்...

ராமலக்ஷ்மி said...

நன்றாக உள்ளது விஜய்.

//பத்திரத்தில் நான்கெல்லைகள் மாறுவதால் அரசு அதிகாரிகள் வருமானம் பெறுவர்.//

சரியே.

Thenammai Lakshmanan said...

உண்மைதான் நாம வித்தாலும் வாங்கினாலும் அரசு அதிகாரிகளுக்கு வருமானம்தான்..சூலம் நமக்குத்தான்..

விஜய் said...

@ ஹேமா

ஆமாம் ஹேமா, நீங்க சொல்றது உண்மைதான்.

நன்றி

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

நன்றி முதலில் நம்ம ப்ளாகிற்கு

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ தனி காட்டு ராஜா

புன்னகை வாழ்த்துக்கு நன்றி தம்பி

விஜய்

விஜய் said...

@ kggouthaman

தங்கள் வருகையும் வாழ்த்தும் எனது பாக்கியம்.

நெஞ்சார்ந்த நன்றிகள்

விஜய்

விஜய் said...

@ kggouthaman

மறந்து விட்டேன். மன்னிக்கவும்.

தொடர இருவரை அழைத்திருக்கிறேன்.

விஜய்

விஜய் said...

@ அஹமது இர்ஷாத்

அன்பு தம்பிக்கு நன்றிகள்.

தொடர அழைத்துள்ளேன்.

விஜய்

விஜய் said...

@ ராமலக்ஷ்மி

நெஞ்சார்ந்த நன்றி அக்கா

விஜய்

விஜய் said...

@ தேனக்கா

அக்காவை பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது.

நலமா அக்கா?

நன்றி

விஜய்

Kala said...

விஜய் என் திசையையும்
மாற்ற விரும்புகிறேன் முடியுமா?

இம்புட்டு சோசியம் பாப்பிகளோ....
இதோ..இதோ கிளம்பிபுட்டேன்
ஏருப்பளேன் எடுக்கதான்

எம்புட்டு எதிர்பாக்கிறீக
சோசியத்துக்கு....

யுக கோபிகா said...

:-)

விஜய் said...

@ கலா

ஆமாங்க, சோதிடம் எனக்கு ஹாபிதான், எப்படி கண்டுபிடிச்சீக?

உடன் பறந்து வருக வெயிட்டான அமௌண்டுடன்

விஜய்

விஜய் said...

@ யுகா

புன்னகை வாழ்த்துக்கு நன்றி சகோ

விஜய்

Anonymous said...

சின்னதா அழகா ஒரு கவிதையாகவே எழுதிடீங்களே. நல்லா இருக்கு.

விஜய் said...

@ மீனாக்ஷி

நன்றி SPS

விஜய்

Nathanjagk said...

//ஓ...பாட்டாவே படிச்சிட்டீங்களா....?!//

Me toooooo :)))

Thanks for considering me!
மாறுதிசை - will write..! ill write..!! write..!! rite..!!!

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

அருமையான கவிதை!,.

அருகில் இருக்கும் குலதெய்வம் முழு அலங்காரத்துடன் இருப்பதால் என்ன தெய்வமென தெரியவில்லை!,.

சொல்வீர்களா!

- சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com

விஜய் said...

@ ஜெகன்

நன்றி நண்பா

ன்றி நண்பா

றி நண்பா


விஜய்

விஜய் said...

@ ஜெகதீஸ்வரன்

காரைக்கால் அருகில் கொட்டூர் என்ற ஊரிலிருக்கும் அங்காள பரமேஸ்வரி
(இயக்குனர் சிகரத்திற்கும் குலதெய்வம் இத்தாயே ஆகும்)

நன்றி நண்பா

விஜய்

அன்புடன் நான் said...

மாறுதிசையால் வருமானம் சிலருக்கு,
வறுமை சிலருக்கு,

கவிதை நச்ன்னு இருக்குங்க விஜய்.

விஜய் said...

@ அரசு

நன்றி நண்பா

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

எங்கள் ஊரில் கூட அங்காள பரமேஸ்வரி கோவில் இருக்கிறது. நன்றி நண்பரே!

Unknown said...

kottur angala parameswari ambal temple program : please watch
www.swasthiktv.com

for details contact : 99402 92777