சகியே.....................
சூரியன் சுடும்
நிலவு தேயும்
மேகம் கருக்கும்
கடல் உவர்க்கும்
மின்னல் மறையும்
பூக்கள் உதிரும்
புறா முனகும்
கயல் நாறும்
காற்று திசைமாறும்
தேன் மலம்
மழை வானத்தின் கண்ணீர்
எரிமலை பூமியின் கோழை
அருவி தண்ணீரின் தற்கொலை
பிறழ் பாடுபொருளால்
வர்ணித்தல் பிழை
ஆதலால்
தமிழ் நீ என்றேன் ..................
28 comments:
வணக்கம் விஜய் நல்லாயிருக்கிங்களா?
சகி.... மிக பழமையானவங்கன்னு சொல்ல வறிங்க....?
கவிதை மிக அழகு.
அருமை நண்பரே..
இனித்திருக்குமே !
விஜய் உங்கள் கடைசி புகைப்படத்திற்கு பின்னால் பாட்டியும் குழந்தையும், கவிதை போல இருக்கிறது
@ அரசு
நலம்தான் நண்பா
காந்தக்கண் அழகனை வேறு காணோம்
வாழ்த்துக்கு நன்றி நண்பா
விஜய்
@ பத்மா
வாழ்த்துக்கு நன்றி சகோ
எக்ஸ்ரே பார்வை சகோ உங்களுக்கு
நன்றி
விஜய்
@ வெறும்பய
நெஞ்சார்ந்த நன்றி தம்பி
பேர்தான் வெறும்பய என்றாலும் விஷய ஞானம் நிரம்பியபய என்று நினைக்கிறேன்
நன்றி
விஜய்
ம்ம்..தமிழ் தமிழாய் இருக்கும் வரை அழ்குதான் விஜய்.
டமில் ஆனால்தான் ....!
விஜய்..உங்களில்
ஏதோ ஒரு சோர்வு தெரிகிறது.சுகம்தானே ?
பத்மா said...
இனித்திருக்குமே !
விஜய் உங்கள் கடைசி புகைப்படத்திற்கு பின்னால் பாட்டியும் குழந்தையும், கவிதை போல இருக்கிறது
July 24, 2010 10:43 AM //
உங்க தொலை நோக்கு பார்வையை!!!!
வியக்கிறேன்.
@ ஹேமா
கலா போல் நீங்களும் டாக்டராகி விட்டீர்களே !
மூன்று நாட்களாக COLD
வேறொன்றுமில்லை
அன்புக்கு நன்றி
விஜய்
@ அரசு
தங்களின் பின்னூட்ட சொல்லாடல் கவர்ந்தது நண்பா
நன்றி
விஜய்
தமிழுக்கு மரியாதை.
"அவளுக்கும் தமிழ் என்று பேர்..."
@ ஸ்ரீராம்
அட ! இதையே கவிதை தலைப்பா வச்சிருக்கலாம் போல
நன்றி நண்பா
விஜய்
உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)
அகத்தின் பொருளானபின்
யுகத்தின் பொருள் எதற்கு?
அன்பை சொல்லும் மொழியாய்
அவளை சொல்ல நீயாய்....
என் தமிழே!
//கடல் துவர்க்கும்..//
துவர்ப்புக்கும் உவர்ப்புக்கும் வேறுபாடு இருக்குன்னு நினக்கிறேன் விஜய்.
அதனால கடல் உவர்க்கும்-னு வரணும்.
அவள்... தமிழ் = என்றும் இளமையானவள்!
@ சங்கர்
நன்றி நண்பா
விஜய்
@ சத்ரியன்
வாங்க நண்பா
நலமா
உவர்க்கும் என்று தான் யோசித்திருந்தேன்
தட்டச்சும்போது மாறிவிட்டது
நன்றி நண்பா
விஜய்
எல்லாமே உண்மை இது அருமை தம்பி..
//தமிழ் நீ என்றேன் ..................//
@ தேனம்மை
மிகுந்த நன்றி அக்கா
விஜய்
மிக அருமை விஜய்.
@ ராமலக்ஷ்மி
நலமா சகோ
மிக்க நன்றி
விஜய்
ம்ம்..தளமும் கவிதையும் புதுசா இருக்கு..
ரொம்ப நல்லா இருக்குன்னே.
@கமலேஷ்
மிகுந்த நன்றி தம்பி
விஜய்
அழகான கவிதை விஜய்!
@ SPS
நெஞ்சார்ந்த நன்றி SPS
விஜய்
கவிதையும் தமிழ்
சகியும் தமிழ்
குறிப்பு:- தமிழ் = அழகு...
நன்று சகோ....
@ கவிநா
நெஞ்சார்ந்த நன்றி சகோ
விஜய்
Post a Comment