சூரியன் சுடும் நிலவு தேயும் மேகம் கருக்கும் கடல் உவர்க்கும் மின்னல் மறையும் பூக்கள் உதிரும் புறா முனகும் கயல் நாறும் காற்று திசைமாறும் தேன் மலம் மழை வானத்தின் கண்ணீர் எரிமலை பூமியின் கோழை அருவி தண்ணீரின் தற்கொலை
வான் கடலில் மேகக்கப்பல் வளிக்காதலனின் வலிந்த அணைப்பில் நட்சத்திர நங்கூரங்கள் தெறித்து தெளித்தது விரக மழை
இரண்டு
மூளை கருப்பையில் முளைக்கும் கவிதைகள் இதயத்தமனிகளில் நுழைந்து பிறக்கிறது சுகப்பிரசவம் சிலருக்கு பிரசவ சுமை பலருக்கு கவிதையின் தொப்புள் கொடி கவிஞனிடமிருந்து அறுக்கப்படும் விமர்சன கத்தி கொண்டு ........