31.12.09

Happy New Year

 
எனது இனிய வலையுலக நண்பர்கள் 
அனைவருக்கும் 
எனது இதயம் நிறைந்த 
புத்தாண்டு வாழ்த்துக்கள் 


விஜய்

25.12.09

முரணுலகுஉறை விந்தின்
தந்தையறியா சிசு 

சாதிஒழிப்பு கூட்டம் 
பிள்ளை மண்டபத்தில் 

இருபாலர் கழிவறை 
முப்பாலின் முகாரி 

உடைந்த கருவில் 
விளையாத உயிர்கள் 

புரியாத மொழியில் 
தமிழர் விவாஹம் 

ராத்தங்காத
ரிஷி கர்ப்பம் 

சரிவிகித சமன்பாடு 
33 சதவிகிதம் 

ஏரியில் கட்டிடங்கள் 
மழை நீர் சேகரிப்பு 

வெற்றிக்கூட்டணி 
பணபேர தோல்வி 

சந்தன வியாபாரி 
சாக்கடைத் தொழிலாளி 

சிவப்புக்கரப்பானின் 
வெள்ளை ரத்தம் 

ஈழ படுகொலை 
ஈன அறிக்கைகள் 

காதல் மரித்தபின் 
கல்லறைக்கவிதைகள் 

நிர்வாண உலகத்தின் 
கெளபீன மனிதன் 

19.12.09

வறுமைக்கோடுபிய்ந்த பிரமிட் கூரையின்
காய்ந்த காகித கதவு

பெருக்கல் குறிகளின்
செவ்வக இணைப்பு

கதிர் மறுக்கும்
புங்கச் சாமரம்

நெளிந்த உலோகத்தில்
நெத்திலி கயல்

இயைந்த வாழ்வு
திரிந்தது

பாசத்துடன் பாஸ்மதி
குறைவிலா குவார்ட்டர்
பட்டா பெட்டி அறையில்
சிரிக்கும் காந்திகள்

இடைத்தேர்தல்
இடையிடையே வராமல்
அடிக்கடி வரணும்........

8.12.09

காதல் எக்ஸ்டஸிபிரமச்சரியம் குலைத்ததுனது 
முதல் பார்வை 

நிதம் சுழன்றதுன்
நினைவுத் திகிரி 

நாக்குலர்ந்து நடுங்கி 
வாக்குரைத்த  காதல்  
 

குரும்பூடலுக்கு பிறகு 
குனிந்து நவின்ற குறுஞ்சிரிப்பு 

லட்சண சாத்திரத்தின்
உச்ச பாத்திரம் நீ


இருவிழி தியானத்தில் 
அடங்கியதெனது ஆழ்மனம்

அரவப்பின்னல் அசைய 
படமெடுத்தாடுமெனது குண்டலினி 

சுளிக்கிய சிரிப்பை 
க்ளிக்கிய அகப்படம் 
நெஞ்சப்பைதனில்

காற்சதங்கை  மணி 
எனதுயிரிசையின் ஜி மேஜர் 

காற்று திறந்த கதவில் 
உன் வருகை 
சுகந்த ஆக்சிஜன் 
நுரையீரல் நிரப்பியபடி 


தழுவ கரம் பிடிக்க,
வேண்டும் என்றே விலக்கினாய்


திமிங்கலச் சந்தையில்  
அயிரை மீன்கள் அபூர்வம் 

உச்சத்தின் மிச்சத்தில் 
குழந்தைகளாய் நாம் 

பெருமழைக்கு பின் 
இலைநுனி கசியும் 
துளிநீராய் நாசியில் 
குங்கிலிய குமிழ்நீர் 

நாநுனி கலந்து 
பிரிப்பது எவனென்றேன்

கடவுளொருவன் இருப்பது 
தெரியாமலேயே................... உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ 
நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது.1.12.09

விஞ்ஞிய ஞானம்
ராட்சத சிறகுகளின் 
ரகசிய உற்பத்தி

சதுரப்பெட்டியின்னூடே
சமைக்கும் நட்பு

விரல்நகவில்லையில்
விண் தொடர்பு

ஆழியினாழத்தில் 
அகலப் பாதை

கதிரோனின் கற்றைகள் 
கரும் சேமிப்பறையில்

அகவணுச்சிதைவை
அறுக்கும் கருக்கொடி திசுக்கள்

அட்டையின் உரசலில் 
ஆயிரமாயிரம்

மரபணு மாற்றத்தால் 
மலடான கத்தரி

கருவரைக்காமம் 
கண் மூடிய கடவுள்

ஞானம் விஞ்ஞியதால்.......................