25.12.09

முரணுலகுஉறை விந்தின்
தந்தையறியா சிசு 

சாதிஒழிப்பு கூட்டம் 
பிள்ளை மண்டபத்தில் 

இருபாலர் கழிவறை 
முப்பாலின் முகாரி 

உடைந்த கருவில் 
விளையாத உயிர்கள் 

புரியாத மொழியில் 
தமிழர் விவாஹம் 

ராத்தங்காத
ரிஷி கர்ப்பம் 

சரிவிகித சமன்பாடு 
33 சதவிகிதம் 

ஏரியில் கட்டிடங்கள் 
மழை நீர் சேகரிப்பு 

வெற்றிக்கூட்டணி 
பணபேர தோல்வி 

சந்தன வியாபாரி 
சாக்கடைத் தொழிலாளி 

சிவப்புக்கரப்பானின் 
வெள்ளை ரத்தம் 

ஈழ படுகொலை 
ஈன அறிக்கைகள் 

காதல் மரித்தபின் 
கல்லறைக்கவிதைகள் 

நிர்வாண உலகத்தின் 
கெளபீன மனிதன் 

33 comments:

பலா பட்டறை said...

இயற்கையாய் பிறந்து
செயற்கையான மனிதர்கள் ..

அருமை விஜய் ரசித்தேன்...::))

பாலா said...

முரண்களால் நிரம்பியது உலகு
கவிதைகளில் மட்டுமே முரண் அழகு

பா.ராஜாராம் said...

அருமையாய் வந்திருக்கு விஜய்.சந்தோசமாய் இருக்கு பரிணாமங்கள்!

Sivaji Sankar said...

அழகாய் வரிகள்.. உங்கள் கவிதையில் சமுதாய சிந்தனையும்,
இயற்கைஅழிப்பும், முன்நிற்கிறது.. வரவேற்கிறேன் அண்ணா... ;)

Anonymous said...

சமூக அவலம் கவிதை வடிவில் அம்பலப்பட்டுள்ளது.. நாகரீக வார்த்தையில்....முரணுலக்குக்கே இங்கு முன்னுரிமை போல நடைமுறையில் நாளுக்கு நாள் இவை அதிகரித்துக் கொண்டுள்ளது...

சந்தான சங்கர் said...

முரண்பாடுடைய
முரண்களில்
உடன்பாடில்லா
நிலையும்
கலையுமோ..!!வாழ்த்துக்கள் நண்பா...

ரிஷபன் said...

முரண்களின் ரசனையான தொகுப்பு வாசிக்கும் போதும்..

சி. கருணாகரசு said...

முரண்கள் அத்தனையும் மிக அழகாய் வந்திருக்குங்க.... விஜய்.

கவிக்கிழவன் said...

முரண்பாடுகள் அருமை வார்த்தைகள் கடுமை

கவிதை(கள்) said...

@ பலா பட்டறை

ரசித்ததிற்கு மிக்க நன்றி நண்பா

விஜய்

கவிதை(கள்) said...

@ பாலா

ஆமாம் பாலா கவிதையில் மட்டுமே முரண் இருந்தால் அழகு

வாழ்க்கையில் அது கவலை தரும் நிகழ்வுதான்

நன்றி

விஜய்

கவிதை(கள்) said...

@ பா.ரா

நன்றி மக்கா

உங்கள் எளிமை நடை வரமாட்டேங்குதே

விஜய்

கவிதை(கள்) said...

@ சிவாஜி சங்கர்

நன்றி எனதருமை தம்பி

ஊக்க வார்த்தைகள் எனை சற்றேனும் மேம்படுத்தும்

விஜய்

கவிதை(கள்) said...

@ தமிழரசி

நன்றி சகோதரி

ஆம் சகோதரி சமூக அவலங்கள் பெருக பெருக நமக்கு கவிதைக்கரு கிடைப்பது சுலபமாகிறது

வருத்தப்படவேண்டிய விஷயம்

விஜய்

கவிதை(கள்) said...

@ சங்கர்

பின்னூட்டக்கவி நண்பா

நன்றி எப்பொழுதும்

விஜய்

கவிதை(கள்) said...

@ ரிஷபன்

மிக்க நன்றி நண்பா

தங்களின் தொடர் வாசிப்பிற்கும் ஊக்கத்திற்கும்

விஜய்

கவிதை(கள்) said...

@ அரசு

வாழ்த்துக்கு தலை வணங்குகிறேன் நண்பா

விஜய்

கவிதை(கள்) said...

@ கவிக்கிழவன்

என்ன செய்வது நண்பா

சமூக அவலங்களின் அடர்த்தி அதிகமாகும்போது வார்த்தை கடுமையாக வெளிப்படுகிறது

நன்றி

விஜய்

புலவன் புலிகேசி said...

எத்தனை முரண்..இதோ என் பங்கிற்கு

"கொள்ளை அடித்த பணம்
பங்காக கோவில் உண்டியலில்"

ஸ்ரீராம். said...

கடைசி வரிகள்...

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பான வரிகள்...

கவிதை(கள்) said...

@ புலவன் புலிகேசி

கருப்பு பணம்
கடவுளின் பங்கு

நன்றி

விஜய்

கவிதை(கள்) said...

நன்றி ஸ்ரீராம்

தங்களின் வெளிப்படையான விமர்சனம் எப்பொழுதும் எனக்கு ஒரு சரியான வழிகாட்டுதலாக இருக்கிறது

மிக்க நன்றி

விஜய்

Kanchi Murali said...

நண்பனே
நீ படைத்த ...........

"முரணுலகு"க்குள்
முதல்முதலாய்
நுழைந்தேன்.....

"சாதிஒழிப்பு கூட்டம்
பிள்ளை மண்டபத்தில்"
என்ற வரிகள்........

சமூக அக்கறை -
சமூகச் சாடல் கொண்ட வரிகள்....

விஜய்யே
வியப்புடன்...
வாழ்த்துக்கள்..............

நட்புடன்.....
காஞ்சி முரளி.............

Kanchi Murali said...

நண்பனே
நீ படைத்த ...........

"முரணுலகு"க்குள்
முதல்முதலாய்
நுழைந்தேன்.....

"சாதிஒழிப்பு கூட்டம்
பிள்ளை மண்டபத்தில்"
என்ற வரிகள்........

சமூக அக்கறை -
சமூகச் சாடல் கொண்ட வரிகள்....

விஜய்யே
வியப்புடன்...
வாழ்த்துக்கள்..............

நட்புடன்.....
காஞ்சி முரளி.............

கவிதை(கள்) said...

@ காஞ்சி முரளி

நண்பா மனம் மிகவும் நெகிழ்ந்தே போனது உனது அன்பினால்

மிக்க நன்றி

விஜய்

ஹேமா said...

வாழ்க்கையே முரண்பாடுகளால் ஆனதுதான்.இதில் எங்கு நாங்கள் முரண்படுகிறோம் அல்லது அனுசரிக்கிறோம் என்பதில்தான் வாழ்வின் அமைதி.

கவிதை(கள்) said...

சரியாய் சொன்னீங்க ஹேமா

மிக்க நன்றி

விஜய்

kamalesh said...

அழகு...மிக நன்றாக இருக்கிறது....
புத்தாண்டு வாழ்த்துக்கள்...

விஜய் said...

நன்றி கமலேஷ்

எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

விஜய்

thenammailakshmanan said...

விஜய் முரணுலகு... முரணழகு

அருமைவிஜய் ...சிவப்புக்கரப்பானின் வெள்ளை ரத்தம்

துள்ளி வருது வார்த்தைகள்...

புத்தாண்டு வாழ்த்துக்கள் விஜய்

விஜய் said...

நன்றி அக்கா

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

விஜய்

Kala said...

உலகமே! தொங்குகின்றன
முரண்பாட்டுக் கயிற்றில்!!
நல்ல சிந்தனை எடுத்துக் காட்டு
நன்றியுடன், உங்களுக்கும்,
உங்கள் குடும்பத்தார்
அனைவருக்கும் என் இனிய...
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

விஜய் said...

@ கலா

தங்களின் தொடர் வருகைக்கும் ஆதரவுக்கும் மிகுந்த நன்றி சகோதரி

தங்களுக்கும் தங்களது சுற்றத்தாருக்கும் இதயம்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

விஜய்