24.7.10

சகியே.....................


சகியே.....................


சூரியன் சுடும்
நிலவு தேயும்
மேகம் கருக்கும்
கடல் வர்க்கும்
மின்னல் மறையும்
பூக்கள் உதிரும்
புறா முனகும்
கயல் நாறும்
காற்று திசைமாறும்
தேன் மலம்
மழை வானத்தின் கண்ணீர்
எரிமலை பூமியின் கோழை
அருவி தண்ணீரின் தற்கொலை


பிறழ் பாடுபொருளால்
வர்ணித்தல் பிழை


ஆதலால்


தமிழ் நீ என்றேன் ..................




20.7.10

கவிதைகளிரண்டு




ஒன்று 


வான் கடலில் 
மேகக்கப்பல் 
வளிக்காதலனின் 
வலிந்த அணைப்பில் 
நட்சத்திர நங்கூரங்கள் 
தெறித்து 
தெளித்தது 
விரக மழை 


இரண்டு 


மூளை கருப்பையில் 
முளைக்கும் கவிதைகள் 
இதயத்தமனிகளில்
நுழைந்து பிறக்கிறது 
சுகப்பிரசவம் சிலருக்கு 
பிரசவ சுமை பலருக்கு 
கவிதையின் தொப்புள் கொடி
கவிஞனிடமிருந்து அறுக்கப்படும் 
விமர்சன கத்தி கொண்டு ........


7.7.10

மாறுதிசை

எங்கள் ப்ளாக் நண்பர்களின் மாறுதிசை தொடர்பதிவிற்காக




பகலில் இரவும்
இரவில் பகலும்

ஈசான்யத்தில் மேடும்
நைருதியில் பள்ளமும்

முன்பு கிழக்கு பார்த்த வீடுகள் விற்கப்படும்
மேற்கு பார்த்த வீடுகள் வாங்கப்படும்

முஸ்லீம்களின் தொழுகை திசை மாறும்

சம்பா, நவரை, குறுவை காலம் மாறும்

வடமேற்கு பருவக்காற்றும், தென்கிழக்கு பருவக்காற்றும் மழை தரும்.

பத்திரத்தில் நான்கெல்லைகள் மாறுவதால் அரசு அதிகாரிகள் வருமானம் பெறுவர்.

திசைகாட்டி தெற்கு நோக்கும்

நாட்காட்டியில் சூலங்கள் மாறும்





இப்பதிவை தொடர நான் அழைப்பது 
ஜெகநாதன்  
அஹமது இர்ஷாத்