30.11.10


இதயச்செடியின் 
முதல் பூ   


முளைத்த கவிதையின் 
முதல் கரு 


ஆண்மை அதிர்ந்த 
முதல் பார்வை 


பெருமெளனம் கலைத்த
முதல் சொல் 


சுழுமுனை தாக்கிய 
முதல் முறுவல் 


உதிரம் சுட்ட 
முதல் முத்தம் 


உயிர் மரித்த 
முதல் விலகல் 


சவக்குழியிலும் 
முதல் மண் உனதாய்  .....................

14.11.10

கைக்கிளை யாமம்உச்சங்கள் குடித்த
எச்சமாய் 
ஒச்ச நிலா 


உயிர் உருவும்
ஊதக் காற்று


தேக சுரப்பியில் 
உறைந்து போன 
விரக வேர்வை 


பாலைவனத்தில் 
நெளியும் பாம்பாய் 
கீறிய  நகக்குறிகள்  


தேகமே மஞ்சமாய் 
துடை தலையணையாய்
மாராப்பு போர்வையாய்


உறக்கம் தொலையும் கனவு 
கனவு பெருக்கும் காமம் 


கைக்கிளை கைவளை 
உருள்கிறது 
தலைவன் தேடி ..........