30.11.10


இதயச்செடியின் 
முதல் பூ   


முளைத்த கவிதையின் 
முதல் கரு 


ஆண்மை அதிர்ந்த 
முதல் பார்வை 


பெருமெளனம் கலைத்த
முதல் சொல் 


சுழுமுனை தாக்கிய 
முதல் முறுவல் 


உதிரம் சுட்ட 
முதல் முத்தம் 


உயிர் மரித்த 
முதல் விலகல் 


சவக்குழியிலும் 
முதல் மண் உனதாய்  .....................

31 comments:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கவிதை ரொம்ப நல்லாருக்கு.. யதார்த்தமான உண்மை.

ஹேமா said...

கவிதை நல்லாயிருக்கு வியஜ்.

"க" என்றால்.....?
படைப்பு என்று பொருள் படுமா ?

philosophy prabhakaran said...

நல்ல கவிதை அண்ணா...

க For...???

மிகவும் அரிதாக கவிதை எழுதுகிறீர்களே... ஏன்...?

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்லாயிருக்கு சகோ.

விஜய் said...

@ஸ்டார்ஜன்

வருக நண்பா

நலமா ?

நெஞ்சார்ந்த நன்றி

விஜய்

விஜய் said...

@ ஹேமா

நன்றி ஹேமா

க என்றால் முதல்

விஜய்

விஜய் said...

@ பிரபாகரன்

நன்றி எனதருமை தம்பி

அலுவல் கொஞ்சம் அதிகம் அதனால்தான்

க என்றால் முதல் என்று அர்த்தம் (வ என்றால் கால் போல )

விஜய்

விஜய் said...

@ புவனேஸ்வரி ராமநாதன்

மிகுந்த நன்றி சகோ

விஜய்

Anonymous said...

அடேங்கப்பா.. சிறுசிறு வார்த்தைகளின் தொகுப்பில் கூட அழகான கவிதை வரிகள்.. அருமையோ அருமை.

Anonymous said...

அது என்ன “க“?

கவிநா... said...

இதயத்தில் தொடங்கி இதயம் (உயிர்) வரை இயல்பான நிகழ்வுகளைக் கொண்ட அழகான கவிதை...
தலைப்பு மிக அருமை... (க - என்றால் முதல், எனக்கு புதிய விஷயம் கிடைத்தது)

/உயிர் மரித்த
முதல் விலகல்
சவக்குழியிலும்
முதல் மண் உனதாய் ..................... //

இறுதி வரிகள் இதயம் தொட்டது.... வாழ்த்துக்கள் அண்ணா.....

ஸ்ரீராம். said...

அருமை...

அந்தக் கடைசி வரியை மாற்றி வேறு விதமாக - சந்தோஷ வரிகளாக - மாற்ற முடியும் என்றால் என்ன எழுதலாம்? (ஏன் மாற்ற வேண்டும் என்கிறீர்களா)

பத்மா said...
This comment has been removed by the author.
பத்மா said...

பிடிச்சுருக்கு

சத்ரியன் said...

உனதாய் இருக்கட்டும்..!

விஜய் அருமையான வரி’கள்’!

சிவகுமாரன் said...

மிக அருமையான கவிதைகள்.
நன்று நன்று நன்று

விஜய் said...

@ இந்திரா

வாங்க சகோ

உங்கள் மனந்திறந்த பாராட்டுதலுக்கு மிகுந்த நன்றி

க என்றால் முதல் சகோ

விஜய்

விஜய் said...

@ கவிநா

தங்கையின் வாழ்த்துக்கு மிகுந்த நன்றி

விஜய்

விஜய் said...

@ பத்மா

மெய்யாகவா ?

நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

நன்றி நண்பா

( சமத்துவ காதலை
சமைப்போம் சமமாக )

சந்தோஷமா நண்பா

விஜய்

விஜய் said...

@ சத்ரியன்

வாங்க நண்பா

நலம்தானே

வாழ்த்துக்(கள்)ளுக்கு நன்றி

விஜய்

விஜய் said...

@ சிவகுமாரன்

வாங்க நண்பா

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

நன்றி நன்றி நன்றி

விஜய்

Anonymous said...

ella nelaiyilum muthalai...nalla iruku vijay

தேனம்மை லெக்ஷ்மணன் said...

வரிக்கு வரி அருமை விஜய்.. சிம்பிள் அண்ட் ஸ்வீட் ..:))

விஜய் said...

@ தமிழ்

மிகுந்த நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ தேனக்கா

நலமா அக்கா ?

மிகுந்த நன்றி அக்கா

விஜய்

hemikrish said...

கவிதை அருமை..

அரசன் said...

நல்லா இருக்குங்க..

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

விஜய் said...

@ ஹேமிக்ரிஷ்

மிகுந்த நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ அரசன்

மிகுந்த நன்றி நண்பா

விஜய்