30.12.10

காதலாகு பெயர் 18+


பிரிவு நிசப்தத்தில் 
நினைவுகளின் உரப்பொலி


கொய்சக இடுக்குகளில் 
விரல்களின் தடங்கள்


இதழிட்ட 
முத்தத்தின் 
நளபாகத்தில் 
நடுங்கும் 
பாலிகை ரேகைகள் 


பத்தும் பற்றிய 
பிடரி மயிற்றின் 
வேர் நுனிகளில் 
டோபமைன் சுரப்பு 


அக்குள் வியர்வையில் 
ரவிக்கை நனைய 
அணையா அணங்கு 


கடிகார கடிகையின் 
கைக்கிளை கழல் 


விரக வெந்நீரின்
குழல்வழி பயணம்
குரல்வலியினூடே  


வகிட்டின் வெண்மையில்
சிவப்பாய் எனதுயிர் .........

18.12.10

திணையற்ற வெளிநீர்ச்சலனமற்ற தடாகத்தின் 
மண்டூகம்சூழ் பதுமம் 


நெகிழ்தலின் பிம்பங்கள் 
வெம்மைச்சூரிய கண்களில்


பாசியுண்ணும் வகுலிகளின்
பிராணத்தவிப்பு


மொட்டவிழ்ந்த கணமுதல் 
மகரந்தங்களேங்கும்  சூலுற


சுழி வட்டசுற்றலில்
விரிகிறெதென் மீள்விசை 


சுமைதாங்கி கொடிதேடும் 
சல்லிவேர் சம்போகம் 


இரவற்ற ஞாலமும் 
இருளற்ற நாளும் 
இறைவழி தேவை 
உற்றான்கை பற்றும்வரை 12.12.10

காம இலைச்சைசிவப்பு விளக்கிலெரியும் 
கட்டில் காட்சிகள் 


நீல இரவில் 
நீங்காத இந்திரிய மணம் 


பச்சை வசனத்தில் 
இச்சை சாசனங்கள் 


கருமனதோன் உபயம் 
கருவுக்கு சுரந்த மார்பு 


தீர்ந்து போன காமத்தால் 
வெள்ளைச்சேலை