26.1.12

சில ஹைகூக்கள் - 1பட்டாம் பூச்சிகள் 
பள்ளி செல்கின்றன 
சிறகுகள் உதிர்க்க 

உண்டியலில் 
சேர்கிறது
அனுபவியா ஆசைகள் 

பாலுக்கேங்கும் குழந்தையின் 
நாவை நனைக்கும் 
தாயின் கண்ணீர்


பி. கு : எனது பிறந்தநாளான (27.01.2012) இன்று வாழ்த்திய, வாழ்த்திக்கொண்டிருக்கிற, வாழ்த்தப்போகின்ற அனைத்து அன்பு சொந்தங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.