28.8.09

வெளுக்காத (விவ)சாயம்

வெண்மை புரட்சி
நாட்டுகாளைகளுக்கு  காயடித்தது

பசுமை புரட்சி
விவசாயிகளுக்கு நோயடித்தது

உலகப்போரின் மீதம்
உரமானது

மண்ணின் மேனி
ரணமானது

சோறுடைத்த உழவன்
உயிர் மாய்த்தது வரலாறு

அம்பது கிலோ யூரியா
நாற்பது  மூட்டை விளைச்சல் அறிவியல்

காரில் உழவன்
கான்வென்ட்டில் அவன் குழந்தை
இது எனது கனவியல்.
 

27.8.09

தமிழர்

அதிகாலை நடை
சுடசுட காபி
நாளிதழ் மேய்வு
ஈழ துன்பியல் நிகழ்வுகள்
பன்றி காய்ச்சல் பலிகள்
பருப்பு விலை ஏற்றம்
மேய்ந்த பின் காலைகடன்
வேகமாய் ஆபீஸ்
சாயுங்காலம் திரும்புதல்
மனைவியின் ஊடல்
ஊடக உள்வாங்கல்
கூடலுக்கு பின் சயனம்
சலிக்கவில்லை தமிழனுக்கு
இனம் அழிந்தால் நமக்கென்ன
தினம் நூறு கிடைத்தால் போதும்
வீரம் விளைந்த தமிழ் மண்ணில்
ஈரம் காய்ந்தது   எப்போது