18.2.13

காதல் வர்ணங்கள்


விரல் பற்றி
இறுக அணைத்தபோது 

கண்களில் சூழ்ந்த 
கருமை 

தலையணைக்குள் ஒளித்த 
தாவணி தந்தபோது 
விம்மிய முகத்தின் 
செம்மை 

வழுக்கி விழுந்த காலின் 
சுளுக்கு நீவியபோது 
மின்னலடித்த கொலுசின் 
வெண்மை 

உலர்த்திய துணிகளில் 
என் சட்டைக்கு அருகே 
தொங்கிய உன் ரவிக்கையின் 
பசுமை 

எப்போதணைத்தாலும் 
அணையாத 
உன் பார்வையின் 
நீலம் 

மறக்க நினைத்தாலும் 
மறுநொடியே தோன்றுகிறது 
உன் நினைவுகள் 
வானவில்லாய் .......................

17.2.13

காம சாகரம்


பாவியர் குருதி கலக்கின்றனர்

ரோகியர் மரணிக்கிறார்கள்

போகியர் முத்தெடுக்கின்றனர்

யோகியர் கரையிலமர்ந்து சிரிக்கின்றனர்    

காமக்கடலில்................


அதர விதைகளின் 

முத்தப் பதியன்களால்  

வியர்வை பூக்கள் 

பூக்கிறது ...... 

14.2.13

குட்டிக்கவிதைகள் - 1


அளவிடமுடியா 

ஆச்சர்ய குறிகளினூடே

மறைந்தே இருக்கிறது 

வடிவமிழந்த கேள்விக்குறி !!!  


ஈருதடுகள் உற்பவித்த 

மின்சாரம் உயிருக்குள் 

ஊடுருவி 

பிரகாசிக்கிறது 

காம  விளக்கு ....

7.2.13

ஈரம்நிகழ்வுகளின் 

நிழலில் 

மனம் 

உலர்த்துகின்றது 

நனைந்த நினைவுகளை. 

உலர்ந்தபின் 

உணர்த்தும் 

உண்மை உறவுகள் ....

4.2.13

சில ஹைகூக்கள் - 3


சுதந்திர பறவையின் 
சிறகுகளில் 
மத சங்கிலி 

விதையின் 
தாய்ப்பால் 
மழை 

மறக்கவியலா நினைவுகளின் 
கல்லறை கல்வெட்டு 
டைரி