26.6.11

குட்டிக்கவிதைகள்
எல்லை 

தெருவோரம்
சிறுநீர் கழித்து 
எல்லையறிகிறார்கள்
மாக்கள் சாம்பல் 

ஆஷ்ட்ரே 
நிரப்புகிறது 
காதல் 
சாம்பல் 


23.6.11

தனித்திருகவிதைஎழுத 
கருப்பொருள் தேடினேன் 

உருவாக்கிய எந்தை

கருவாக்கிய யாய்

திருவாகிய இறை   

தருவுறை வன்னி 

கிட்டவில்லையெதுவும்

உன் மணவாழ்விற்கு   
எருவாகிய எனது காதல்

கொட்டியது 
கண்களில் 
கவிதைகள் 
துளித்துளியாய் .........   

7.6.11

நாணயம்கோயில் வாசல் 
பார்வையற்றோனின் 
கிழிசல் துண்டில் 
புண்ணியம் தேடும் 
பொய் முகங்கள் 
சிதறிக்கிடக்கின்றன 
நாணயமற்று........