25.11.15

பேராசைகளின் புத்தர்


பெருங்கவிதை எனக்கு
ஹைக்கூ உனக்கு
காரிருள் வேண்டுமெனக்கு
பேரொளி வேண்டுமுனக்கு
பெருமழை வேணுமெனக்கு
சிறு தூறல் போதுமுனக்கு
மாடமாளிகை வேண்டுமெனக்கு
குடிசையே கோபுரமுனக்கு
பேரினிப்பு வேண்டுமெனக்கு
சீரக மிட்டாய் போதுமுனக்கு
மெய்ம்முயக்கம் வேணுமெனக்கு
மயிலிறகு தீண்டல் போதுமுனக்கு
ஈரிதழ் விடுவிக்க வேண்டாமெனக்கு
உச்சி மோர்தல் போதுமுனக்கு
காற்று புகா தழுவலெனக்கு
விரல் தொடா ஸ்பரிசமுனக்கு
சின்ன சின்ன ஆசை மதுபாலா நீ
பேராசைகளின் புத்தர் நான்.................

18.11.15

இம்சைநீதான்
எனது இம்சை .........
கண் சிமிட்டல்களில்
இதயக்கதவு திறக்கிறாய்
உதட்டு சுளிப்பில்
உயிரை உருவுகிறாய்
செல்லப் பெயர் சொல்லி
சிகை கலைக்கிறாய்
மெல்லிய கிள்ளலில்
மனம் பிறள
மஞ்சள் சுகந்தம்
உளம் அதிர
முந்தானைக்காற்றில்
முகமுலர்த்தி
உந்திச்சுழி கண்டு
உன்மத்தம் கொண்டு
உன்னில்
முயங்கினேன்
மழைதுளியொத்த
வியர்வையே
எனக்கு
அமிர்தமாகும்..........