30.12.10

காதலாகு பெயர் 18+


பிரிவு நிசப்தத்தில் 
நினைவுகளின் உரப்பொலி


கொய்சக இடுக்குகளில் 
விரல்களின் தடங்கள்


இதழிட்ட 
முத்தத்தின் 
நளபாகத்தில் 
நடுங்கும் 
பாலிகை ரேகைகள் 


பத்தும் பற்றிய 
பிடரி மயிற்றின் 
வேர் நுனிகளில் 
டோபமைன் சுரப்பு 


அக்குள் வியர்வையில் 
ரவிக்கை நனைய 
அணையா அணங்கு 


கடிகார கடிகையின் 
கைக்கிளை கழல் 


விரக வெந்நீரின்
குழல்வழி பயணம்
குரல்வலியினூடே  


வகிட்டின் வெண்மையில்
சிவப்பாய் எனதுயிர் .........

18.12.10

திணையற்ற வெளிநீர்ச்சலனமற்ற தடாகத்தின் 
மண்டூகம்சூழ் பதுமம் 


நெகிழ்தலின் பிம்பங்கள் 
வெம்மைச்சூரிய கண்களில்


பாசியுண்ணும் வகுலிகளின்
பிராணத்தவிப்பு


மொட்டவிழ்ந்த கணமுதல் 
மகரந்தங்களேங்கும்  சூலுற


சுழி வட்டசுற்றலில்
விரிகிறெதென் மீள்விசை 


சுமைதாங்கி கொடிதேடும் 
சல்லிவேர் சம்போகம் 


இரவற்ற ஞாலமும் 
இருளற்ற நாளும் 
இறைவழி தேவை 
உற்றான்கை பற்றும்வரை 12.12.10

காம இலைச்சைசிவப்பு விளக்கிலெரியும் 
கட்டில் காட்சிகள் 


நீல இரவில் 
நீங்காத இந்திரிய மணம் 


பச்சை வசனத்தில் 
இச்சை சாசனங்கள் 


கருமனதோன் உபயம் 
கருவுக்கு சுரந்த மார்பு 


தீர்ந்து போன காமத்தால் 
வெள்ளைச்சேலை 30.11.10


இதயச்செடியின் 
முதல் பூ   


முளைத்த கவிதையின் 
முதல் கரு 


ஆண்மை அதிர்ந்த 
முதல் பார்வை 


பெருமெளனம் கலைத்த
முதல் சொல் 


சுழுமுனை தாக்கிய 
முதல் முறுவல் 


உதிரம் சுட்ட 
முதல் முத்தம் 


உயிர் மரித்த 
முதல் விலகல் 


சவக்குழியிலும் 
முதல் மண் உனதாய்  .....................

14.11.10

கைக்கிளை யாமம்உச்சங்கள் குடித்த
எச்சமாய் 
ஒச்ச நிலா 


உயிர் உருவும்
ஊதக் காற்று


தேக சுரப்பியில் 
உறைந்து போன 
விரக வேர்வை 


பாலைவனத்தில் 
நெளியும் பாம்பாய் 
கீறிய  நகக்குறிகள்  


தேகமே மஞ்சமாய் 
துடை தலையணையாய்
மாராப்பு போர்வையாய்


உறக்கம் தொலையும் கனவு 
கனவு பெருக்கும் காமம் 


கைக்கிளை கைவளை 
உருள்கிறது 
தலைவன் தேடி ..........
26.10.10

இழுகுணிசூரியத்துயில் மீளும் 
சேவலின் கொக்கரிப்பு 


ஓசோன் தேடும் 
வயோதிக நாசிகள் 


விநாயகனே வினைதீர்ப்பவனே
டீக்கடை


எட்டாவது படிக்க
நடப்பை எறியும் 
பேப்பர் பையன் 


இருட்டில் கறந்து 
பகலில் பாலூற்றும் 
பால்காரர் 


ஐந்து ரூபாயில்
அனைத்து விட்டமினும் 
கீரை கிழவி 


எட்டுமணிக்கும்
ஏஸி அறையில் 
போர்வையுடன் நான்............. 

20.10.10

அய்யா...................... தரும ராசாவேபசுமை புரட்சியின்னு 
வெடியுப்பு உரம் தந்தீக 


வெண்மை புரட்சியினு 
சீமைப்பசு தந்தீக 


கலப்பை கரைசேக்காதுன்னு
டிராக்டர் கொடுத்தீக 


ஏத்தம் எரைச்ச கையில 
மோட்டார் சுச்சு வைச்சீக


கொடுக்காபுளி காணலை
கொடம்புளி பாக்கல


சிட்டுக்குருவி சிக்கல 
ஊசித்தட்டான் சுத்தல நுண்ணுயிர் செத்து போச்சு 
மண்ணும் காஞ்சு போச்சு 


நூறுநாள் வேலையின்னு 
விவசாயிய உயிரோட கொன்னீங்க 


கிட்டி போட்டு எலிபுடிச்சு
வெட்டி சாப்பிட்டோமுங்க


உங்க விஞ்ஞானத்துல 
ஒரு அரிசி செய்யுங்க 


காலமெல்லாம் உங்க வீட்டில் 
கால்புடிச்சு நிப்போமுங்க............................. 9.10.10

கருட நிழல்


அதிமதுர இதழ்களின்
முத்தம் குடித்த உடல்


ஏறு அழிஞ்சில்
விதைகளாய்
ஒட்டிக்கொண்ட
நினைவுகள்


செல்லரித்த
நிழற்படம் கண்டு,
கருட நிழல்
கண்ட சர்ப்பமாய்
சிலிர்க்கும் மயிர்க்கால்கள்


சுணங்கி மார்பு
புதைத்த 
கேச சுகந்தம்


விரல்களால் 
இதயத்தில் 
வரைந்த 
உன் பெயர்  


கண்கள் குளமாகி 
கன்னத்தின் வீதியில்  
மழை வெள்ளம் 


தோற்ற காதல்
மரிக்காது
மரித்தாலும் நம் காதல்
தோற்காது..............

30.9.10

காமக்கடும்புனல் 18+வசனமற்ற படங்களின்
மூளைப்புணர்ச்சி


சாணிக்காகிதத்தின்
ஈன இலக்கியங்கள்


மதிய மழையில் 
வெள்ளை ரவிக்கை


குனிந்து போடும் கோலத்தில்
புழுதியாகும் மனது


இருக்கையற்ற பேருந்தின்
நெருக்கத்தில் மல்லிகை மணம்


காசுக்கு புணரும்
தாசியின் சிணுங்கல்


கார்ப்பரேட் பாட்டிகளின்
தொப்புள் தரிசனம்


எதிர்வீட்டு விதவையின்
அமாவாசை இரவுகள்


துடை தடவும்
ஹோமோ நண்பன்


ஆற்றங்கரையோர
வயோதிக வாயூரிசம் 


ஹன்சபந்த 
கோபுரக்கலவி


மயக்கும் மாந்திரீக 
மைதுனஸ்தம்பம்


சிந்தனை சீழ்களின் 
விந்தை ஔஷதம்
மனையாளை துய்ப்பதே ..............  

19.9.10

பிரேத சோதனைஆடி வந்தால் எண்பதென்றவள்
ஆனியில் அடங்கிப்போனாள் 
சலனமற்ற வீட்டில் 
ஓரமாய் வெற்றிலைபெட்டி
கொடியில் பறக்கும் 
கிழிசல் சேலையின் சாமரம் 
நசுங்கிய குவளையில் 
கடைசி தண்ணீர் 
சின்னவளுக்கு 
ஆத்தோர நிலம்பற்றியும் 
பெரியவனுக்கு பாம்படத்தில் 
அரக்கு இருக்குமோ என்ற
கவலையும் 
பிரேத நாற்றத்தில் 
மொய்க்கும் ஈக்களாய்  

31.8.10

கவிதைகளிரண்டு - 1
சிசு 


கருவறை 
நீச்சலறையில்
களித்து குளித்து 
கரைதட்டி 
சிரம் தூக்கியது 
சிசு 
ஆயிரமாயிரம் 
வல்லூறுகள் 
வட்டமடிக்க 
சடக்கென்று 
உள்ளிழுத்து 
வாயிலை மூடியது  


முதிர்கன்னி 


இருட்டறையில் 
ஒழுகும் மெழுகுவர்த்தி
நீளுமிரவுகளில் 
நிலவும் அவளும் 
மட்டும் தனிமையில் 
ஆயிரத்தோரிரவாக     
போர்வைக்கும் புழுங்கும் 
கிளிடோரிஸ் கனவுகள்  27.8.10

நன்றி நன்றி நன்றி


இன்றுடன் வலைப்பக்கம் ஆரம்பித்து ஒரு வருடமாகிறது.


பிரதிபலன் பாராத நட்புகளின் அன்பு என் மனக்குருதி கசிய வைக்கிறது.


பாராட்டுகளால் என்னை சீராட்டி வளர்க்கும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி


விஜய் 


22.8.10

பூப்படையா மழை

சிறார்களின் 
அனிச்சை ஆச்சர்யம் 


ஓவியர்களுக்கு 
செம்மண் காடுகளில் 
வான்துகள்களின்
வண்ணக்கலவை 
எம்பாசிங் 


கவிஞர்க்கு 
இலை நெற்றியில் 
நீர்ப்பொட்டு


தேவமாதுருக உழவர்க்கு 
ருண விமோசன அட்சயம் 


பாடகருக்கு 
சட்ஜமம்
சமைக்கும்
சங்கீதம் 

காதலர்க்கு 
மெல்லிய தூறல் 
மெல்லிசைக்காமம்

நடைபாதை வியாபாரிக்கு 
சனியன் தவளைக்கு 
சங்கீத மேடை 


எறும்புக்கு 
அறைச்சிறை


ஆழ்மட்டம் வற்றியோருக்கு 
ஆனந்த சேமிப்பு 


மழைத்திவலை 
மட்டுமுண்ணும்
சாதகப்பட்சிகள் 
சந்ததியழிந்தது


எச்சத்தின் மிச்ச 
விதைக்கு கொலஸ்ட்ரம்


நகர அழுக்குகள் 
துடைக்கப்பட்டு 
கிராம உள்வாங்கல் 


பக்க வாத்தியம் முழங்க 
பளிச்சென படமெடுக்க 
மண்ணும் மாரியும் 
பகிரங்க நிஷேகம் 


சில்வர் அயோடைட் தூவினால் 
கிட்டுமா இதெல்லாம் ?


ஆனாலும் 
பருவம் பொய்த்தே பெய்கிறது 
பூப்படையா மழை 
  

24.7.10

சகியே.....................


சகியே.....................


சூரியன் சுடும்
நிலவு தேயும்
மேகம் கருக்கும்
கடல் வர்க்கும்
மின்னல் மறையும்
பூக்கள் உதிரும்
புறா முனகும்
கயல் நாறும்
காற்று திசைமாறும்
தேன் மலம்
மழை வானத்தின் கண்ணீர்
எரிமலை பூமியின் கோழை
அருவி தண்ணீரின் தற்கொலை


பிறழ் பாடுபொருளால்
வர்ணித்தல் பிழை


ஆதலால்


தமிழ் நீ என்றேன் ..................
20.7.10

கவிதைகளிரண்டு
ஒன்று 


வான் கடலில் 
மேகக்கப்பல் 
வளிக்காதலனின் 
வலிந்த அணைப்பில் 
நட்சத்திர நங்கூரங்கள் 
தெறித்து 
தெளித்தது 
விரக மழை 


இரண்டு 


மூளை கருப்பையில் 
முளைக்கும் கவிதைகள் 
இதயத்தமனிகளில்
நுழைந்து பிறக்கிறது 
சுகப்பிரசவம் சிலருக்கு 
பிரசவ சுமை பலருக்கு 
கவிதையின் தொப்புள் கொடி
கவிஞனிடமிருந்து அறுக்கப்படும் 
விமர்சன கத்தி கொண்டு ........


7.7.10

மாறுதிசை

எங்கள் ப்ளாக் நண்பர்களின் மாறுதிசை தொடர்பதிவிற்காக
பகலில் இரவும்
இரவில் பகலும்

ஈசான்யத்தில் மேடும்
நைருதியில் பள்ளமும்

முன்பு கிழக்கு பார்த்த வீடுகள் விற்கப்படும்
மேற்கு பார்த்த வீடுகள் வாங்கப்படும்

முஸ்லீம்களின் தொழுகை திசை மாறும்

சம்பா, நவரை, குறுவை காலம் மாறும்

வடமேற்கு பருவக்காற்றும், தென்கிழக்கு பருவக்காற்றும் மழை தரும்.

பத்திரத்தில் நான்கெல்லைகள் மாறுவதால் அரசு அதிகாரிகள் வருமானம் பெறுவர்.

திசைகாட்டி தெற்கு நோக்கும்

நாட்காட்டியில் சூலங்கள் மாறும்

இப்பதிவை தொடர நான் அழைப்பது 
ஜெகநாதன்  
அஹமது இர்ஷாத் 30.6.10

காதல் வேள்வி


உலர்ந்த உதடொற்றி
மெளனக்குமிழிகளுடைத்து
வானவில் வளைக்கவா ?

ஆய்வுக்குடுவையொத்த
இடுங்கிய ஒக்கலையில்
நாடாத்தழும்புகளுக்கு
செங்காற்றாழை சோறிடவா?

வெட்டிய உகிர்களின்
பிறைநிலாக்களை சேகரித்து
ஆகர்ஷண அட்சரம்
ஜபிக்கவா ?

உயிரெனும் விதைப்பையில்
காதலென்னும் விருட்சம் வளர்க்கவா?

காலடித்துகள்களை
மணற்குடுவையிலூற்றி
உயிர் மரிக்கும் நேரம் குறிக்கவா ?
25.6.10

உரையாடல் கவிதை போட்டி விருதுகள்

உரையாடல் கவிதைபோட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறத்தக்க கவிதைகளை எழுதிய எனது நண்பர்களுக்கான பிரத்யேக விருது.
விருது பெறுபவர்கள் 


நேசமித்திரன் 
தேனம்மை லக்ஷ்மணன் 
கமலேஷ் 
சிவாஜி சங்கர் 
பாலா 
காயத்ரி 
ராமலக்ஷ்மி 
ஹேமா 
சத்ரியன் 
சந்தான சங்கர் 
தமிழரசி 


23.6.10

கந்தர்வம்


ஏழாம்  வீட்டில்
குரு இருப்பதால்
திருமணமே ஆகாதென்ற
சோதிடரிடம்
எட்டாம் வீட்டு ரமேஷுடன்
ஓடிப்போகவிருப்பதை
எப்படி சொல்வேன் நான் .................


21.6.10

கவிதை

கவிதையும் காக்கையும் 
கிழிந்த கீற்று 
குளிர்ந்த கூடு 
கெழவனும் கேள்வியும் 
கைதி 
கொளவியும் கோலமும் 
கெளதாரியும்

20.6.10

வரங்கள்

சூரியக்கதவு திறந்தபின்னும் 
துய்க்கும் தூக்கம் 


நிலவயர்ந்த நிசியிலும் 
நீளும் விழிப்பு 


சித்திரை மாதத்தில்
பத்தரை செமீ மழை 


பூசணிப்பூ மாத
ஓசோன் காலை 


புலன் நடுங்கும் 
பனிப்புல்லமர்ந்து
பச்சை தேநீர் 


முனகாத கழிவறை 


முந்தாத உச்சம் 


சில்டனபில் தேடாத பள்ளியறை 


தமிழன் சாகாத துப்பாக்கி 


சிலிக்கான் திருடும் 
எஸ்கவேட்டர் மூழ்குமளவு 
பொன்னி வெள்ளம்


கூட்டமில்லா கோவில் 


சுணங்காத புரோஸ்டேட்


கோலிலா முதுமை 


தோற்கும் காதல் 


நரைக்காத காமம் 


கனவிலாவது 
கடனில்லா வாழ்க்கை 


மறுகன்னம் காட்டும் நட்பு 


உயிர் உறையுமிசை 


கருமண் காடும் 
திமிலுள்ள பசுவும் 

12.6.10

நரம்


மதவாதிகள்
அறிவு சீப்பை ஒளித்து
சிந்தனையற்ற சிகைதனில் சிடுக்கெடுப்பீர்

மருத்துவர்
வைரல் சுரத்திற்கு
ஆண்ட்டிபயாடிக் அளிப்பீர்

அரசியல்வாதிகள்
எங்கள் வாக்கில் பற்றுவைத்து
உங்கள வங்கிக்கணக்கில் வரவு வைப்பீர்

அறிவியல்வாதிகள்
அண்டம் பிளக்குமறிவால்
பிண்டம் பிடிக்க முயல்வீர்

முதலாளிகள்
குளிர்வறையிலிருந்து
ஏழையின் வியர்வையை
எத்தனை லிட்டரென
அளந்து பார்ப்பீர்

சுயநலவாதிகள்
எரிக்கப்பட்ட எலும்புச்சாம்பலில்
சலித்து தங்கம் தேடுவீர்

ஒருநாளேனும்
புனிதராயல்ல
மனிதராவேனும்
மாறிப்பாருங்கள்.......

8.6.10

முத்துக்குளித்த வைரம்செயற்கை ஓய்ஸ்டருலகிலுதித்த
இயற்கை முத்து

கரித்த கார்பன் பூமியில்
உயிர்த்த ஜாகர் வைரம்


தத்தகாரத்தில் 
தனி 'ழ'கரம் படைத்தவன் நீ
 

என் நிலவில் தெரியும் வானம் நீ
மூளையின் முதல் (க)விதை நீ

காற்று கிழிபட நடக்கவும்
சிங்கப்பாலை தங்ககிண்ணத்தில் வைக்கவும்
பெருமுடா முக்கோண சூட்சுமமும்
தெளிய வைத்தவன் நீ

ஊனுருக்கும் உன்னத மொழி
தேனூற்ற, தீருமென் பேரிச்சை

உன்கவித்திறம்
எங்ஙனம் சாத்தியம்?
யோசிக்குமென்மனம்

சந்திரன் மனோகாரகன்
சுக்கிரன் கலாகாரகன்

இவ்விருவரும் சேர்ந்த பெயராலா ?

வெண்ணுடையுடுத்தி
வெண்பா படைப்பதாலா ?

முறுக்கிய  வானம் நோக்கும்
மீசை கவிதை ரீசீவரா ?

இல்லை


புறத்தோற்றம் புனைவுகளே
அகத்தினுளிருக்கும் அறிவுச்சட்டையென
ஆகத்தெளிந்தேன்.

காமக்களிப்பை
காசீந்து பெறலாம்

கவிக்களிப்பை ?

வாய்ப்பில்லை

அது குண்டலினி குலுக்கி
மூலாதாரம் முத்தமிடும்
ஆன்ம ஸ்பரிஸம்

எழில் கவிதைகளுடன்
தெரிக்கும் உனதுச்சரிப்பை
எங்கோ ஒரு மூலையில்
தமிழ்த்தாய் ஆனந்த நீர் சொரிய
ராம காதை கேட்ட அனுமனாய்..............

25.5.10

கர்ப்பாதானம்

 
தூரிகைத்தொட்டிலில் 
தவம் கிடந்தது 
வந்துதிக்கும் 
வர்ண சிசுக்கள் 


கோல் முனை மாறி 
நக நுனியில் விழும் 
வெண்திரை போர்த்திய
வீர்யவரி  சிசுக்கள் 


மகரக்கட்டுடைந்து 
சப்தஸ்வர சப்தத்தில் 
லயபேதமற்று
உட்கொல்லும்
இதய சிசுக்கள் 


சதுர செம்மண்களில்
சாம்ராஜ்ய ஆசைகள் 
கருங்கற்களில் குருதிக்கறையொழுக
காவிய சிசுக்கள் 


சதையுளி செதுக்கிய 
காமக்கூடத்தில்
பிளந்துதித்த 
பெருஞ்சிற்ப சிசுக்கள் 

ஆரஞ்சு சுளைகளுக்குள்
ஆப்பிள் சுவையும் 
ஆதாம் ஏவாளின் 
இடுப்பளவில் இரு சிசுக்களும்

19.5.10

காமம் + (மனிதக்)கடவுள்பிரம்ம முஹுர்த்தத்தில்
பிரணாயாமம்
 

சூர்யோதயத்தில்
சூர்ய நமஸ்காரமும்
அக்னிஹோத்திரமும்
 

ஒருமணி நேரம்
மந்திரங்கள்  ஜெபித்து
 

ஆலயம் சென்று
எதிர்வரிசை பெண்ணின்
விலகிய முந்தானையில்
மனம் விலகவில்லை
 

கடவுள் தோற்று
காமம் ஜெயிக்கிறது  


(அன்பு தோழி கலாவின் கையால் தலையில் குட்டு வாங்கியதால் தலைப்பு மாற்றம்)

9.5.10

இயலும் அயலும்


சுக்கில சுரோணித
ஸ்தம்பிக்கும் பரியங்கம்

லிங்கநீட்சியின் நீட்டிப்பில்
திரவ லிக்னோகைன்

மூலாதாரம் முழிக்க
அகம் பிரம்மாஸ்மி

மரித்த பாம்பினனுக்கு
கார்ப்பரேட் காவிகள்

உச்சத்தின் எச்சத்தில்
உயிர்க்கும் சூல்கள்

இரவல் உயிரணு
இயந்திர கருப்பை

கருக்கல் வெளிர்க்கும்
பஞ்சவடி விருட்சங்கள்

சனங்களீர்க்கும்
ஜவுளிகடை பைபர்ஆப்டிக் மரங்கள்

பஞ்சகவ்யமும் துழாய்தீர்த்தமும்
பிரசாத மருந்தாக

இறைவனடி சேர்க்கும்
காலாவதி மருந்துகள்

சுற்றும் புவியின்
சுழற்சியில் சூடு

மானாவாரி வயலால்
அடுப்புறங்கும் வீடு

செயற்கை மானுடத்தால்
இயற்கையழிக்கும்
உலகையொருநாள்.....................

 

2.5.10

ஹேமா, தேனக்கா மற்றும் பலர் - 50வது பதிவுஎட்டு மதங்களுக்கு முன் Monotonous lifeல் Freezeஆகி நின்றபோது திடீரென்று கண்ணில் பட்டது வலையுலகம். நாமும் கவிதை எழுதி பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதே எழுதிப்பார்ப்போம் என்று எழுத ஆரம்பித்தேன்.

முதல் ஊக்குவிப்பாக ஹேமாவின் பின்னூட்டம் என்னை அங்கீகரித்தது. தொடர்ந்து எழுதினால் உங்கள் எழுத்தும் மிளிரும் என்று ஹேமாவின் அறிவுரை, இன்று நானும் ஒரு வலைபதிவராக ஆகமுடிந்து ஐம்பதாவது பதிவு போடமுடிகிறதென்றால் முதல் காரணம் ஹேமாதான்.

அதன்பின் தேனக்காவின் பாராட்டு, சின்ன சின்ன வரிகளில் அற்புதமாக எழுதுகிறீர்கள் என்று. மிக பெரிய அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சி என்னுள். என் சகோதரியாக அவ்வப்போது எனை வழிநடத்துவதில் முதல் நபராக இருப்பது தேனக்காதான்.

குறையுள்ள கவிதைகளை கூட விவரித்து நிறைவுற்ற பிறையாக மாற்ற  முனையும் நண்பர் நேசமித்திரன்.

யதார்த்தத்தின் மறுபெயராய் நான் கோவித்தால் கூட சிறு குழந்தைக்கு நிலவு காட்டுவது போல் என் மனதிருக்குள் நுழையும் பா.ரா.

வலிய வந்து பாராட்டி மகிழும் அன்புச்சகோதரி தமிழரசி

பின்னூட்டத்தை கூட கவிதையாய் பொழியும் அன்பு நண்பர் சந்தானசங்கர்

எனக்கு முதன் முதல் விருது தந்த எனதருமை தம்பி புலவன் புலிகேசி

இரண்டாவது விருது தந்து எனை அன்பு சகோதரனாய் பாவிக்கும் மலிக்கா

எனது அகசூல் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து உதவிய ஜீவன்

வலைச்சரத்தில் எனது கவிதை தளத்தை அறிமுகம் செய்த சகோதரி இயற்கை,
அ.மு.செய்யது, வானம்பாடிகள்,அக்பர்
தொடர்ந்து ஊக்குவிக்கும் ஜோதிட ஓஷோ சித்தூர்.முருகேசன்

தொடர்ந்து வாசித்து வாழ்த்தும் ராமலக்ஷ்மி அக்கா

ரசித்து வாழ்த்தும் எங்கள் ஸ்ரீராம்

வித்தியாச கவிதைகளால் வியக்கவைக்கும் சிவாஜி சங்கர்

எப்பொழுதும் வாழ்த்தும் பாலா

வாழ்த்தியே கலாய்க்கும் அன்பு நண்பன் சத்ரியன்

தவறாமல் வாழ்த்தும் நண்பர் கருணாகரசு

பின்னூட்ட புயலாக அறியப்படும் ஜெகநாதன்

பின்னூட்ட சுனாமியாக அறியப்படும் கலா

வாய்ப்பு தந்திருப்பேன் என்று சொன்ன இயக்குனர் செல்வக்குமார்

ஆரம்பத்தில் தொடர்ந்து ஆதரவு தந்து வாழ்த்திய ரசிகை

கவிநண்பன் கமலேஷ்

எங்க ஊர் புபட்டியன்

மனது நிரம்பி வாழ்த்தும் பலா பட்டறை ஷங்கர்

அன்புச்சகோதரி ஜலீலாக்கா

அன்புச்சகோதரி காயத்ரி

மற்றும்

கலகலப்ரியா, காரூரன், வாணிநாதன், ஜெரி ஈசானந்தா, பின்னோக்கி, நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார், ஊடகன், கவிக்கிழவன், விக்னேஷ்வரி, வேல்ஜி

உழவன், க.பாலாசி, ராஜலக்ஷ்மி பக்கிரிசாமி, சந்ரு, தியாவின் பேனா

பாலா கவிதைகள், யாத்ரா, முகமூடியணிந்த பேனா, S.A. நவாஸுதீன்

பிரியமுடன்...வசந்த், பூங்குன்றன்.வேவிதூஷ், ரிஷபன், சிங்கக்குட்டி

சுந்தரா, ஆ.ஞானசேகரன், பத்மா, அண்ணாமலை�@����<��nE0��், ஆர்.கே.சதீஷ்குமார்

மதுரை சரவணன், பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி, .. பனித்துளி சங்கர் ....

பிரியா, ரோஸ்விக்,யாதவன், திவ்யாஹரி, அஹமது இர்ஷாத், சக்தி

People call me "Paul"..., மோனி, +யோகி+, சிவன், சுதாகர் குமார் LK

திருஷ், ஸ்டார்ஜன், ஜில்தண்ணி, பவி, nige k,பித்தனின் வாக்கு, மன்னார் அமுதன்,

றமேஸ், தமிழினிமை...செந்தில் நாதன், விழியில் விழுந்தவன்

தேவன் மாயம், விவேக் நாராயண், Jayaprakash Sundarraj, zoooo, Lee

இவர்களுக்கு எல்லாம் நன்றி என்று ஒற்றை வார்த்தையை மட்டும் எப்படி காணிக்கை ஆக்குவது என்று தெரியவில்லை.

என்ன கைம்மாறு இவர்களுக்கு செய்யபோகிறேன் எனது கவிதைகளை படிக்கும் தண்டனை தருவது தவிர !!!!!!