30.6.10

காதல் வேள்வி


உலர்ந்த உதடொற்றி
மெளனக்குமிழிகளுடைத்து
வானவில் வளைக்கவா ?

ஆய்வுக்குடுவையொத்த
இடுங்கிய ஒக்கலையில்
நாடாத்தழும்புகளுக்கு
செங்காற்றாழை சோறிடவா?

வெட்டிய உகிர்களின்
பிறைநிலாக்களை சேகரித்து
ஆகர்ஷண அட்சரம்
ஜபிக்கவா ?

உயிரெனும் விதைப்பையில்
காதலென்னும் விருட்சம் வளர்க்கவா?

காலடித்துகள்களை
மணற்குடுவையிலூற்றி
உயிர் மரிக்கும் நேரம் குறிக்கவா ?
22 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

ஹேமா said...

காதல் வேள்வி என்றும் சொல்லிவிட்டு இத்தனை கேள்விகளையும்
அடுக்கினால் எப்படி விஜய் !

நேசமித்ரன் said...

//ஆய்வுக்குடுவையொத்த
இடுங்கிய ஒக்கலையில்
நாடாத்தழும்புகளுக்கு
செங்காற்றாழை சோறிடவா?//

நல்லா இருக்குங்க நண்பா

யுக கோபிகா said...

அருமை.........

//வெட்டிய உகிர்களின்//

அப்படினா என்னங்க ?

விஜய் said...

@ உலவு

நன்றி

விஜய்

விஜய் said...

@ ஹேமா

கேள்விகளால் வேள்வி

நன்றி

விஜய்

விஜய் said...

@ நேசன்

நெஞ்சார்ந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ யுக கோபிகா

நகங்கள் சகோ

நன்றி

விஜய்

ஸ்ரீராம். said...

எங்கே பிடிக்கிறீர்கள் இந்த வார்த்தைகள் எல்லாம்...? ஒக்கலை, உகிர்கள்...! உகிர்கள் என்றால் நகமா? சரியான வேள்விதான் விஜய்...

விஜய் said...

@ ஸ்ரீராம்

நம்மாலான தமிழ் வளர்ப்பு நண்பா

வாழ்த்துக்கு நன்றி

விஜய்

Sivaji Sankar said...

கிளாஸ் கவிதை..... :)
நல்லாருக்கு அண்ணா..

அஹமது இர்ஷாத் said...

super Lines...

Kala said...

நான் இப்பதான் ஒண்ணாங் கிளாஸ்
இப்புட்டுக் கேள்விகளையும் ...
எங்கிட்டக் கேட்டா ???

ஹேமாவே{கவிஞரே} தப்பினேன் பிழைத்தேனென
சாக்குப் போக்கு சொல்லி ஓடிவிட்டார்

விஜய் கவிக் கட்டு அருமை நன்றி

விஜய் said...

@ சிவாஜி சங்கர்

நன்றி எனதருமை தம்பி

விஜய்

விஜய் said...

@ அஹமது இர்ஷாத்

நெஞ்சார்ந்த நன்றிகள் தம்பிக்கு

விஜய்

விஜய் said...

@ கலா

ஒரு முனைவர் இப்படி சொல்லலாமா?

வாழ்த்துக்கு நன்றி

விஜய்

rk guru said...

kavithai...arumai

விஜய் said...

@ rk guru

நன்றி நண்பா

விஜய்

பா.ராஜாராம் said...

//காலடித்துகள்களை
மணற்குடுவையிலூற்றி
உயிர் மரிக்கும் நேரம் குறிக்கவா?//

அபாரமான பகுதி, பங்கு!

விஜய் said...

@ பா.ரா

நன்றி பங்கு

விஜய்

கமலேஷ் said...

வர வர விஜய் அண்ணனை ஒன்னும் பண்ணிக்க முடியாது போல..
கற்பனை நீண்டு கொண்டே போகிறது...
வாழ்த்துக்கள் அண்ணா ரொம்ப நல்லா வந்திருக்கு..

விஜய் said...

@ கமலேஷ்

நெஞ்சார்ந்த நன்றி தம்பி

விஜய்