26.3.10

அச்சச்சுவை
நிசப்த பின்னிரவின்
சூன்ய சுழிநிலை

கிளை முறிக்கும்
நெட்டிகள் பைசாசமாய் 

சில்வண்டின் சிணுங்கலொடுக்கும் 
ஆந்தையின் துணையறியுமலறல்

வெண்புகை மேகரூபம் 
நிறம் பிரித்தரியா நாயின் ஓலம்

செவிபுகவில்லை எதுவும் 
தன்னை மாய்க்கமுனைந்த 
ஒருவனுக்கு............13.3.10

கடவுச்சொல்


நீ கடத்திய
உதடழுத்த மின்சாரம்
உயிர் நிரப்புமெரிபொருள்

தடாகத்தாமரைக்கு
தாவணி வேலி

சுக்ரரேகையில்
ஓடுமெனது பெயர்

உச்சிவெயிலில்
உன்னுளடங்கும்
வெயிலாய்

உன்னுள் கலந்த
எனதாண்மை
பூனைமுடிகளாய்

கணிணிக்கு மட்டுமல்ல
என் வாழ்க்கைக்கும்
உன் பெயரே கடவுச்சொல்

மடியில் கிடத்தி
மயிர்களைக் கோதி
இடு ஒரு முத்தம்
கன்னக்கதுப்பில்
உய்வேன் நானும்
ஒருநொடியேனும்........................