20.10.10

அய்யா...................... தரும ராசாவேபசுமை புரட்சியின்னு 
வெடியுப்பு உரம் தந்தீக 


வெண்மை புரட்சியினு 
சீமைப்பசு தந்தீக 


கலப்பை கரைசேக்காதுன்னு
டிராக்டர் கொடுத்தீக 


ஏத்தம் எரைச்ச கையில 
மோட்டார் சுச்சு வைச்சீக


கொடுக்காபுளி காணலை
கொடம்புளி பாக்கல


சிட்டுக்குருவி சிக்கல 
ஊசித்தட்டான் சுத்தல நுண்ணுயிர் செத்து போச்சு 
மண்ணும் காஞ்சு போச்சு 


நூறுநாள் வேலையின்னு 
விவசாயிய உயிரோட கொன்னீங்க 


கிட்டி போட்டு எலிபுடிச்சு
வெட்டி சாப்பிட்டோமுங்க


உங்க விஞ்ஞானத்துல 
ஒரு அரிசி செய்யுங்க 


காலமெல்லாம் உங்க வீட்டில் 
கால்புடிச்சு நிப்போமுங்க............................. 36 comments:

தமிழ் அமுதன் said...

உங்கள் சிறந்த படைப்புகளில் ஒன்று
இந்த கவிதை...!

ஸ்ரீராம். said...

அருமை...

நம்மாழ்வார் சார்....கொஞ்சம் வந்து வழி காட்டுங்க...

சுந்தரா said...

அரிசியும் செய்வாங்க...அரிசியும் பருப்புமாய்க் கலந்த காப்ஸ்யூலும் செய்வாங்க.

கூடிய சீக்கிரம்,விவசாயம் செய்யவே நிலமில்லாம போயிடும்போலிருக்குதே :(

ஆதங்கத்தை அருமையா வெளிப்படுத்தியிருக்கீங்க.

பாராட்டுக்கள் விஜய்!

thiyaa said...

ஆகா ரொம்ப நல்லாயிருக்கு

Anonymous said...

விவசாயத்தின் நிலை கூர்வாளால் சொல்லப்பட்டிருக்கு....

ஆனால் கல்லுக்கு வலிக்காது விஜய்

Deepan Mahendran said...

விஜய், ரொம்ப அத்தியாவசயமான ஒரு உண்மையை அழகான வரிகள்ல சொல்லி இருக்கீங்க...
கவிதையின் வரிகள் அற்புதம்...

Kala said...

ஏய்..அப்பு அப்புட்டு நெசத்த இப்புடி கொட்டிப்
போட்டிகளே! இத படிச்சுப்புட்டு பழசை பத்தி நினைச்சுக்கிட்டு....
ராசா எப்புட்டு சந்தோசம் .
ம்ம்ம்ம..... பெருமூச்சுதான் விட முடியுதப்பு

எப்புட்டு அழகுராசா உன் கவித

Raja said...

உங்க விஞ்ஞானத்துல
ஒரு அரிசி செய்யுங்க
காலமெல்லாம் உங்க வீட்டில்
கால்புடிச்சு நிப்போமுங்க....

பிரமாதம்...செருப்புல அடிச்சமாதிரி இருக்குங்க...வாழ்த்துக்கள்...

Unknown said...

ஒரு விவசாயியின் ஏக்கம் கன்னத்தில் அறைகிறது!! கவிதை அருமை!!

VJR said...

ரொம்ப நல்லா இருக்குங்க. கலக்கிட்டீங்க.

Unknown said...

Simply Superb! Nachchnnu irukku! -------- Vidya Senthil, Madurai.sr

விஜய் said...

@ ஜீவன்

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

நன்றி நண்பா

யார் வழி காட்டினாலும் இந்த இலவச அரசு விரும்பாது

விஜய்

விஜய் said...

@ சுந்தரா

ஆமாம் சகோ

நிலமில்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது

நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ தியா

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ தமிழ்

ஆமாம் சகோ. இதையெல்லாம் யார் கண்டு கொள்ள போகிறார்கள்

நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ சிவன்

வாங்க நண்பா நலமா ?

வாழ்த்துக்கு மிகுந்த நன்றி

விஜய்

விஜய் said...

@ கலா

வாங்க அம்மிணி

எப்பிடி இப்பிடி

விஜய்

விஜய் said...

@ ராஜா

முதல் வருகைக்கு நன்றி நண்பா

செருப்புல அடிச்சாலும் காறித்துப்பினாலும் யாரும் கவலை கொள்வதில்லை நண்பா

விஜய்

விஜய் said...

@ வைகறை

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ VJR

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ senthil

Thanks sis

vijay

சத்ரியன் said...

நண்பா,

நறுக்கென்ற கவிதை.ஆனால், யாருக்கிங்கே உரைக்குது?

இந்த கவிதையப் (படிச்சிட்டு) படிக்கிறவங்கள்ள எத்தனையோ பேரு விளை நிலங்களை வாங்கி வீட்டு மனை போட்டு விக்கிறதுக்கு கிளம்ப போறாங்க.

நம்ம புலம்ப மட்டுந்தான் முடியுது...!

ஆனாலும்,சுட்டி காட்டியதற்கு கை கொடு நண்பா.

கவிநா... said...

நச்சென்று ஆணியடித்தது போலிருக்கிறது கவிதை. என் மனசில் அடிக்கடி எட்டிப்பார்க்கும் அர்த்தமுள்ள இந்த பயம், உங்கள் விரல் வழியே விளைந்துவிட்டது கவிதையாய்.
அருமை எனச்சொல்லத் தடுக்கிறது அண்ணா, கவிதையின் கரு.... வரிகள் வாளாய் வெட்டுகிறது....

vasan said...

பசுமை புரட்சியின்னு (M.S சுவாமி ஆனார்)
வெடியுப்பு உரம் தந்தீக (ஸ்பிக்/டெளவ் உய‌ர்ந்த‌து)
வெண்மை புரட்சியினு (
சீமைப்பசு தந்தீக (நம்மூர் மாடு அடிமாடான‌து)
கலப்பை கரைசேக்காதுன்னு
டிராக்டர் கொடுத்தீக (பொட்ரோல் வாங்கியே சுறுவாடு சுருங்கிருச்சி)
ஏத்தம் எரைச்ச கையில
மோட்டார் சுச்சு வைச்சீக (ப‌வ‌ர்க‌ட் வ‌ந்து பாதி வ‌ய‌ல் கருகிறிச்சு)
கொடுக்காபுளி காணலை
கொடம்புளி பாக்கல (உட‌ம்புல துளி உர‌மில்ல‌)
சிட்டுக்குருவி சிக்கல
ஊசித்தட்டான் சுத்தல (செல் ட‌வ‌ரு ம‌ட்டும் நிக்கில்ல?)
நுண்ணுயிர் செத்து போச்சு
மண்ணும் காஞ்சு போச்சு (குப்பைக‌ளைப் போடாம‌ல் க‌ண்ட‌ குப்பைக‌ள‌ப் போட்டா?)
நூறுநாள் வேலையின்னு
விவசாயிய உயிரோட கொன்னீங்க (பாதி உனக்கு, மீதி அவ‌னுக‌ளுக்கு)
கிட்டி போட்டு எலிபுடிச்சு
வெட்டி சாப்பிட்டோமுங்க (எலி புடிச்ச‌ பாம்புத் தோலை உரிச்சு வித்தாச்சு)
உங்க விஞ்ஞானத்துல
ஒரு அரிசி செய்யுங்க (அரிசிக்கு உழுவாங்க‌!)
காலமெல்லாம் உங்க வீட்டில்
கால்புடிச்சு நிப்போமுங்க..(இப்ப‌டியே நிக்க‌த்தானே அப்ப‌டிச் செய்தாக‌..இன்னுமா?)

Jaleela Kamal said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள் . ரொம்ப நாள் கழிச்சு இப்ப தான் இங்கு வரேன், பசுமையாக பிளாக் நல்ல இருக்கு. தாத்தா பாட்டி போட்டோ அழகா இருக்கு.

விஜய் said...

@ சத்ரியன்

மிக்க நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ கவிநா

தொடரும் தங்கள் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் மிகுந்த நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ வாசன்

முதல் வருகைக்கு நன்றி

நீங்க என்ன திட்றீங்களா ?
பாராட்டுறீங்களா ?

புரியலை

விஜய்

விஜய் said...

@ Jaleela

வாங்க சகோ, நலமா ?

பாராட்டுக்கு நன்றி சகோ

விஜய்

Thenammai Lakshmanan said...

மிகச் சிறந்த நச்சென்ற கவிதை.. விஜய்.. மாஸ்டர் பீஸ்..

விஜய் said...

கை நலமா அக்கா ?

மிகுந்த நன்றி அக்கா

விஜய்

arasan said...

அருமையான கவிதை சார்..

விஜய் said...

@ அரசன்

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா

விஜய்

Asiya Omar said...

http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_22.html
இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.மிக்க நன்றி.

Ranjani Narayanan said...

வலைச்சரம் மூலம் உங்க கவிதை படிக்க வந்தேன்.
விவசாயிகளின் உள்ளத்தைப் படம் பிடிச்சுக் காட்டிவிட்டீங்க!
கவிதையை ரசிக்கும் அதே வேளையில் உண்மை மனதை பதற வைக்கிறது.
எப்போ வரும் விடியல்?