26.10.10

இழுகுணிசூரியத்துயில் மீளும் 
சேவலின் கொக்கரிப்பு 


ஓசோன் தேடும் 
வயோதிக நாசிகள் 


விநாயகனே வினைதீர்ப்பவனே
டீக்கடை


எட்டாவது படிக்க
நடப்பை எறியும் 
பேப்பர் பையன் 


இருட்டில் கறந்து 
பகலில் பாலூற்றும் 
பால்காரர் 


ஐந்து ரூபாயில்
அனைத்து விட்டமினும் 
கீரை கிழவி 


எட்டுமணிக்கும்
ஏஸி அறையில் 
போர்வையுடன் நான்............. 

33 comments:

மதுரை சரவணன் said...

ஐந்து ரூபாயில்
அனைத்து விட்டமினும்
கீரை கிழவி //


அருமை. வாழ்த்துக்கள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான கவிதை விஜய். உழைப்பே உயர்வை தரும். கவிதை ரொம்ப நல்லாருக்கு. வாழ்த்துகள்.

தேவா said...

எட்டாவது படிக்க
நடப்பை எறியும்
பேப்பர் பையன்

நான் படிக்கும்பொழுது பேப்பர் போட்ட ஞாபகம். அருமை பாஸ்

தேவா said...

எட்டாவது படிக்க
நடப்பை எறியும்
பேப்பர் பையன்

நான் படிக்கும்பொழுது பேப்பர் போட்ட ஞாபகம். அருமை பாஸ்

ஸ்ரீராம். said...

தலைப்பு பெயர்த் தெரிவு நல்லா இருக்கு. நல்ல கவிதை.

Anonymous said...

விடியலின் போதும்...
விடிந்தபின்னும்..வசதிக்கேற்ப வாழ்க்கை முறை...

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை விஜய்.

Raja said...

நல்ல கவிதை...நான் பத்து மணி வரைக்கும் பாஸ்...

கவிநா... said...

அண்ணா சூப்பர். கவிதைக்கு பொருத்தமான படம்.

சத்ரியன் said...

//ஐந்து ரூபாயில்
அனைத்து விட்டமினும்
கீரை கிழவி


எட்டுமணிக்கும்
ஏஸி அறையில்
போர்வையுடன் நான்...//

காசு பணம் வந்தா சோம்பலும் சேந்துக்குது போல.
வறுமையில நின்னா 5 மணிக்கே விடிஞ்சிடுது...!

வாஸ்தவம் தான் விஜய்!

விஜய் said...

@ மதுரை சரவணன்

நலமா நண்பா ?

மதுரை வரும்போது சந்திக்கிறேன்.

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ ஸ்டார்ஜன்

நண்பா ரொம்ப நாளாகி விட்டது பார்த்து ?

நலமா ?

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ தேவா

தம்பி, உண்மை உரைப்பது சிலபேர்தான், அவ்வரிசையில் தங்களும் உண்டு

நன்றி தம்பி

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

வாங்க நண்பா

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ தமிழ்

வாஸ்தவம் சகோ

நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ ராமலக்ஷ்மி

நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ ராஜா

ஒரு காலத்தில் நானும் பத்து மணிதான்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தம்பி

விஜய்

விஜய் said...

@ கவிநா

மிக்க நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ சத்ரியன்

ஆமாம் நண்பா, பணம் தான் தூக்கத்தை கூட நிர்ணயிக்கிறது

நன்றி நண்பா

விஜய்

Senthil said...

Iluguni endral Sombal endru arthama? Kavidhai Nidharsanathai solgirathu. Superb! ------- vidya Senthil, Madurai.

philosophy prabhakaran said...

கவிதை அருமையாக இருந்தது அண்ணா... படம் மட்டும் ஏனோ பொருத்தமாக தோன்றவில்லை... விடியற்காலை பொழுதை குறிப்பிடும்படியான படத்தை இணைத்திருக்கலாம்...

விஜய் said...

@ செந்தில்

நன்றி

விஜய்

விஜய் said...

@ பிரபாகரன்

நன்றி தம்பி

இழுகுணி என்றால் என்ன உடனே புரிந்து கொள்வதற்காக இந்த படத்தை போட்டேன்

விஜய்

வைகறை said...

இயற்கையும் நம் இடறலும் அருமையான ஒப்புமை!!

விஜய் said...

@ வைகறை

நெஞ்சார்ந்த நன்றி நண்பா

விஜய்

ஹேமா said...

அன்பு விஜய்...பிந்தின தீபாவளி வாழ்த்துகள்.சுகம்தானே.

அழுகுணி,புழுகுணி கேள்விப்பட்டிருக்கேன்.ம்ம்ம்..
இழுகுணியும் நல்லாத்தனிருக்கு !

தேனம்மை லெக்ஷ்மணன் said...

பேப்பரும் கீரையும் அருமை விஜய்..:))

விஜய் said...

@ ஹேமா

நன்றி ஹேமா

விஜய்

விஜய் said...

@ தேனக்கா

நலம்தானே அக்கா

நன்றி அக்கா

விஜய்

goma said...

கவிதையை வாசிக்கும் போதே, விடிகாலை ,நம் காலை ,வருடி எழுப்புகிறதே....

விஜய் said...

@ கோமதி

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி சகோ

விஜய்

அன்புடன் மலிக்கா said...

ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் அருமை சகோ. அதிலும்

ஐந்து ரூபாயில்
அனைத்து விட்டமினும்
கீரை கிழவி //

சூப்பர்..

விஜய் said...

@ மலிக்கா

மிகுந்த நன்றி சகோ

விஜய்