19.5.10

காமம் + (மனிதக்)கடவுள்பிரம்ம முஹுர்த்தத்தில்
பிரணாயாமம்
 

சூர்யோதயத்தில்
சூர்ய நமஸ்காரமும்
அக்னிஹோத்திரமும்
 

ஒருமணி நேரம்
மந்திரங்கள்  ஜெபித்து
 

ஆலயம் சென்று
எதிர்வரிசை பெண்ணின்
விலகிய முந்தானையில்
மனம் விலகவில்லை
 

கடவுள் தோற்று
காமம் ஜெயிக்கிறது  


(அன்பு தோழி கலாவின் கையால் தலையில் குட்டு வாங்கியதால் தலைப்பு மாற்றம்)

23 comments:

ஸ்வாமி ஓம்கார் said...

திரு விஜய்,

உங்கள் கவிதையின் கருத்து புரிகிறது.

சந்தத்துக்காக எதுகை மோனையுடன் எழுதி இருந்தாலும் சூரிய நமஸ்காரத்திற்கு பின்பே நாம் ப்ராணாயாமம் செய்ய வேண்டும் என்கிறது யோக சாஸ்திரம்.

ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும் நாட்கள் செல்ல செல்ல சரியாகிவிடும். நான் கவிதையைச் சொல்லவில்லை..!

Balu said...

I think it depends on (kamam) stock you have in you. I think there are other technique to over come these.

விஜய் said...

வருக சுவாமிஜி

தங்கள் முதல் வருகைக்கு மிகுந்த நன்றி

விஜய்

விஜய் said...

@ பாலு

அய்யோ இப்பிரச்சினை எனக்கில்ல

பொதுவான ஒரு சிந்தனை

தங்கள் வருகைக்கு நன்றி

விஜய்

padma said...

காமமும் கடவுள் தான்

விஜய் said...

@ பத்மா

உண்மைதான் சகோதரி

நன்றி சகோதரி

விஜய்

கமலேஷ் said...

இந்த கவிதைக்கு எப்படி கமெண்ட்ஸ் போட்ரதுன்னே தெரியல...

விஷயம் அப்படி.,

ஆனால் கவிதை நல்லா இருக்கு..

நியோ said...

நிச்சயமாய் கடவுள் தோற்கவில்லை ...
இல்லாத ஒருவர் எவ்வாறு தோற்க முடியும் ...
நல்ல கவிதை விஜய் ...
// காமமும் கடவுள் தான் //
கண்டிப்பாக பத்மா ...
இரண்டிலும் நாம் நிதானம் இழந்து விடுகிறோம்...

--------------------------------------
advt.
தமிழக நிகர்நிலை பல்கலைகழகங்கள் குறித்த டாண்டன் குழுவினர் அறிக்கைக்கு ...
http://neo-periyarist.blogspot.com/2010/05/blog-post_19.html

விஜய் said...

@ கமலேஷ்

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ நியோ

தங்களின் முதல் வருகைக்கு நன்றி தம்பி

விஜய்

ஹேமா said...

விஜய்..அதானே சொல்லி வச்சாங்க மனம் ஒரு குரங்குன்னு !

விஜய் said...

@ ஹேமா

மருந்து சாப்பிடும் போது குரங்கை நினைக்காதே என்பார்கள்

நன்றி ஹேமா

விஜய்

கா.பழனியப்பன் said...

உண்மையை இப்படி பொசுக்குனு சொல்லிபுட்டிங்க.
நல்லா இருந்துச்சுங்க.

ஸ்ரீராம். said...

மனம் பக்குவப் படவில்லை என்றல்லவா ஆகிறது...? விடுங்க விஜய்..பத்மா கருத்தை வழி மொழிகிறேன்...

விஜய் said...

@ கா.பழனியப்பன்

சில உண்மைகள் வலிக்கும் நண்பா

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

நன்றி நண்பா

விஜய்

Kala said...

ஜய்யய்யோ....விஜய்!
இப்படி எல்லோர் முன்பும் போட்டு
உடைக்கலாமா?முறையா?
இருந்தாலும்....
இந்த அடியேனின் சொல்லுக்கு
இவ்வளவு மதிப்பளித்தமைக்கு
மிக்க,மிக்க நன்றி.


அப்பாடா,கடவுள் இந்தப் பாதகமான
செயலின் குற்றச்சாட்டில் இருந்து
தப்பிவிட்டார்.
தப்ப வைத்தமைக்கு நன்றி
வழக்கறிஞரே!

விஜய் said...

@ கலா

நன்றி நன்றி நன்றி

விஜய்

Sivaji Sankar said...

:)
புன்னகை அண்ணா..
:)

விஜய் said...

@ சிவாஜி சங்கர்

:}

நன்றி தம்பி

விஜய்

ஜெகநாதன் said...

ரசிக்க வைக்கிற சொல்லாண்மை! சொல்லிய நயத்தில் தர்க்கங்கள் மடியலாம்!
கலா கலகமும் நன்மையில்தான் முடியும் போல!!
பேரைச் சொன்னேன்!
வாழ்த்துக்கள் நண்பா!

விஜய் said...

@ ஜெகன்

நெஞ்சார்ந்த நன்றி நண்பா

பின்னூட்ட புயலும் (ஜெகன்) பின்னூட்ட சுனாமியும் (கலா)
என் பக்கத்தில் இருப்பதால் யாருக்கும் பயமில்லை

விஜய்

விஜய் said...

50வது Follower நண்பர் ஜெகன்

நன்றி நண்பா

விஜய்