25.5.10

கர்ப்பாதானம்

 
தூரிகைத்தொட்டிலில் 
தவம் கிடந்தது 
வந்துதிக்கும் 
வர்ண சிசுக்கள் 


கோல் முனை மாறி 
நக நுனியில் விழும் 
வெண்திரை போர்த்திய
வீர்யவரி  சிசுக்கள் 


மகரக்கட்டுடைந்து 
சப்தஸ்வர சப்தத்தில் 
லயபேதமற்று
உட்கொல்லும்
இதய சிசுக்கள் 


சதுர செம்மண்களில்
சாம்ராஜ்ய ஆசைகள் 
கருங்கற்களில் குருதிக்கறையொழுக
காவிய சிசுக்கள் 


சதையுளி செதுக்கிய 
காமக்கூடத்தில்
பிளந்துதித்த 
பெருஞ்சிற்ப சிசுக்கள் 

ஆரஞ்சு சுளைகளுக்குள்
ஆப்பிள் சுவையும் 
ஆதாம் ஏவாளின் 
இடுப்பளவில் இரு சிசுக்களும்

22 comments:

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

ஹேமா said...

வர்ண சிசுக்கள்,வீர்ய சிசுக்கள்,
இதய சிசுக்கள்,காவிய சிசுக்கள்,
பெருஞ்சிற்ப சிசுக்கள்,ஆதாம் ஏவாளின் இடுப்பளவில்
இரு சிசுக்கள்.

எத்தனை சிசுக்கள் விஜய் !
நானே சிசுவாகிவிட்டேன்.
ரசித்தேன்.

padma said...

எனக்கு புரில விஜய் .ஆனா படிக்க அழகா இருக்கு

விஜய் said...

@ ஹேமா

நன்றி ஹேமா

விஜய்

விஜய் said...

@ பத்மா

பெரிய விஷயம் ஏதுமில்லை.

வாழ்த்துக்கு நன்றி

விஜய்

ஸ்ரீராம். said...

இயற்கை (நிஜ) சிசுக்கள், வரையப் பட்ட சிசுக்கள், புனையப் பட்ட சிசுக்கள்...?

நல்லா இருக்கு விஜய்.

விஜய் said...

@ ஸ்ரீராம்

புரிதலுக்கு நன்றி நண்பா

விஜய்

Kala said...

தூரிகைத்தொட்டிலில்
{தவம் கிடந்தது }
வந்துதிக்கும்
வர்ண சிசுக்கள் \\\\\

தவம் கிடந்தது? கிடந்தன வருமென நினைக்கிறேன்

எது சரியோ தெரியாது நான் கவிஞரல்ல!என் ஊகம்தான்
ஹேமா இலகிவாய் பின்னோட்டம் போட்டுவிட்டார்
ஆனால் சில குழப்பங்கள் எனக்கு!

1: ஓவியங்கள் என நினைக்கிறேன்கோல் முனை மாறி
நக நுனியில் விழும்
வெண்திரை போர்த்திய
வீர்ய சிசுக்கள் \\\\

என்னது விஜய்?


மகரக்கட்டுடைந்து
சப்தஸ்வர சப்தத்தில்
லயபேதமற்று
உட்கொல்லும்
இதய சிசுக்கள் \\\\

மகரக்கட்டு:சிறுவனிலிருந்து வாலிபனாக...
குரல் உடைந்து மாறுவது சரிதானே?

உட்கொல்லும் இதயசிசுகள்????
இது என்ன?


சதுர செம்மண்களில்
சாம்ராஜ்ய ஆசைகள்
கருங்கற்களில் குருதிக்கறையொழுக
காவிய சிசுக்கள் \\\\
மண் பொம்மைகள்.
கருங்கல்லில் வடிக்கும் சிலைகள்

சதையுளி செதுக்கிய
காமக்கூடத்தில்
பிளந்துதித்த
பெருஞ்சிற்ப சிசுக்கள் \\\\
இது குழந்தை

ஆரஞ்சு சுளைகளுக்குள்
ஆப்பிள் சுவையும்
ஆதாம் ஏவாளின்
இடுப்பளவில் இரு சிசுக்களும்\\\\\

ம்ம்ம்ம்ம்....,,......

விஜய்,எழுமையான சொற்களால்....
எழுதியும் ..
சில குழப்பம்

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

கவிதைகள் அனைத்தும் அருமை . பகிர்வுக்கு நன்றி !

விஜய் said...

@ கலா

பின்னூட்ட சுனாமி என்பதை நிரூபித்து விட்டீர்கள்

ஓவியம், கவிதை, சங்கீதம், கட்டிடக்கலை, மனிதம், டெக்னாலஜி

நன்றி

விஜய்

விஜய் said...

@ பனித்துளி ஷங்கர்

நன்றி நண்பா

விஜய்

buruhaniibrahim said...

நல்ல ரசனையுடன் எழுதி உள்ளீர்கள்

விஜய் said...

@ buruhaniibrahim

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி

விஜய்

அஹமது இர்ஷாத் said...

அருமையான கவிதைங்க விஜய் நல்லாயிருக்கு..

Sivaji Sankar said...

கொஞ்சம் சிரமப்பட்டேன்.. :)

விஜய் said...

@ அஹமது இர்ஷாத்

மிகுந்த நன்றி தம்பி

விஜய்

விஜய் said...

@ சிவாஜி சங்கர்

தம்பியை விடவா நான் கடினமாக எழுதுகிறேன்

நன்றி தம்பி

விஜய்

விஜய் said...

test

சி. கருணாகரசு said...

கவிதை... இன்னும் கொஞ்சம் இலகுவாக்க மிடியுமான்னு பாருங்க விஜய்.

ஏன்னா எனக்கெல்லம் ஆராச்சி அறிவு குறைவுங்கோ!

சி. கருணாகரசு said...

கலா சொல்வது உண்மையா?
எனக்கும் அப்படித்தான் தெரியுது... வஜய்.

சி. கருணாகரசு said...

சொற்கலெல்லாம் மிக தெளிவுங்க.... கவிதைத்தான்... ஒரு கட்டுக்கு வரல!

விஜய் said...

@ அரசு

இணைப்பு அறுந்து விட்டதால் வரமுடியவில்லை.

கலாவே எல்லாவற்றிற்கும் விளக்கம் தந்துவிட்டார்களே நண்பா

நன்றி நண்பா

விஜய்