31.8.10

கவிதைகளிரண்டு - 1
சிசு 


கருவறை 
நீச்சலறையில்
களித்து குளித்து 
கரைதட்டி 
சிரம் தூக்கியது 
சிசு 
ஆயிரமாயிரம் 
வல்லூறுகள் 
வட்டமடிக்க 
சடக்கென்று 
உள்ளிழுத்து 
வாயிலை மூடியது  


முதிர்கன்னி 


இருட்டறையில் 
ஒழுகும் மெழுகுவர்த்தி
நீளுமிரவுகளில் 
நிலவும் அவளும் 
மட்டும் தனிமையில் 
ஆயிரத்தோரிரவாக     
போர்வைக்கும் புழுங்கும் 
கிளிடோரிஸ் கனவுகள்  18 comments:

ஹேமா said...

இரண்டு கவிதைகளின் சிந்தனைகளுமே அருமை விஜய் !

ஸ்ரீராம். said...

வழக்கம் போல கவிதைகள் அழகா இருக்கு.
இரண்டாவது புரிந்தாலும் முதல் கவிதை...

விஜய் said...

@ ஹேமா

நலமா ?

நன்றி ஹேமா

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

முதல் கவிதை ஏற்க்க முடியாததுதான்

இருந்தாலும் ஒரு உலக உன்மத்தங்களின் உணர்த்தல்

நன்றி நண்பா

விஜய்

அஹமது இர்ஷாத் said...

Second one... சான்சே இல்லை.. ரியலி சூப்பர்ப்..

கவிநா... said...

அண்ணா சொன்னபடியே அற்புதமா 1 இல்ல, 2 கவிதை எழுதிட்டீங்க...
ரொம்ப நல்லா இருக்கு இரண்டுமே....

அதிலும்

//ஆயிரமாயிரம்
வல்லூறுகள்
வட்டமடிக்க
சடக்கென்று
உள்ளிழுத்து
வாயிலை மூடியது //

//போர்வைக்கும் புழுங்கும்
கிளிடோரிஸ் கனவுகள் //

இந்த வரிகள் ரொம்ப அருமை... வாழ்த்துக்கள் அண்ணா...

Anonymous said...

SHORT AND CUTE ONE VIJAY

விஜய் said...

@ அஹமது இர்ஷாத்

மனதார்ந்த வாழ்த்துக்கு மிகுந்த நன்றி எனதருமை தம்பி

விஜய்

விஜய் said...

@ கவிநா

எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை சகோ, என்மீது தங்களை போன்றோர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு,

நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ தமிழ்

குறுக சொன்னாலும் நிறைவாக வாழ்த்தியமைக்கு நன்றி சகோ

விஜய்

Kala said...

ஆயிரமாயிரம்
வல்லூறுகள்
வட்டமடிக்க
சடக்கென்று
உள்ளிழுத்து
வாயிலை மூடியது \\\\\\\

கற்பனையில்..கவிதையில்
நுழையலாம்...
நடைமுறையில் இவ்வதிசயப்
படைப்பை கடவுள் படைக்கவில்லையே!
படைத்திருந்தால் ஈழத்தில்...இன்னல்கள்
இல்லையே விஐய்!!

வித்தியாசமான கற்பனைதான்
நன்றி

கமலேஷ் said...

இரண்டுமே திடுக்கிட வைக்கின்ற கவிதை.

ரொம்ப நல்லா இருக்கு..

ப்ளாக் ஆரம்பிச்சி ஒரு வருஷம் ஆகிடிட்சா..வாழ்த்துக்கள் அண்ணா

பூப்படையா மழை - ரொம்ப பிடிட்சிருன்தது.

நீங்க கவிதை புத்தகம் வெளியிடும் போது புத்தகத்திற்கு இதையே தலைப்பாய் வைத்து விடலாம் போல.

அவ்வளவு அழகான தலைப்பு..

விஜய் said...

@ கலா

சாத்தியமில்லைதான், நானும் ஈழம் நினைத்துதான் எழுதினேன்.

நீங்கள் திறமையான மனோதத்துவ டாக்டர் என்பதை ஒத்து கொள்கிறேன்

நன்றி

விஜய்

விஜய் said...

@ கமலேஷ்

புத்தகம் வெளியிடும் அளவிற்கு என்னுடைய கவிதைகள் தகுதியானவையா ? என்று தெரியவில்லை.

தங்களின் அதீத அன்பிற்கு நெஞ்சார்ந்த நன்றி தம்பி

விஜய்

சத்ரியன் said...

கவிதைகள் இரண்டும் அருமை விஜய்.

விஜய் said...

@ சத்ரியன்

நண்பா நலமா

நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பா

விஜய்

தேனம்மை லெக்ஷ்மணன் said...

//சடக்கென்று
உள்ளிழுத்து
வாயிலை மூடியது //

//போர்வைக்கும் புழுங்கும்
கிளிடோரிஸ் கனவுகள் //

அப்படியா வாழ வழியற்றுப் போனது விஜய்..

விஜய் said...

வாழ்த்துக்கும் வருத்தத்திற்கும் நன்றி தேனக்கா

விஜய்