18.12.10

திணையற்ற வெளிநீர்ச்சலனமற்ற தடாகத்தின் 
மண்டூகம்சூழ் பதுமம் 


நெகிழ்தலின் பிம்பங்கள் 
வெம்மைச்சூரிய கண்களில்


பாசியுண்ணும் வகுலிகளின்
பிராணத்தவிப்பு


மொட்டவிழ்ந்த கணமுதல் 
மகரந்தங்களேங்கும்  சூலுற


சுழி வட்டசுற்றலில்
விரிகிறெதென் மீள்விசை 


சுமைதாங்கி கொடிதேடும் 
சல்லிவேர் சம்போகம் 


இரவற்ற ஞாலமும் 
இருளற்ற நாளும் 
இறைவழி தேவை 
உற்றான்கை பற்றும்வரை 26 comments:

philosophy prabhakaran said...

நல்ல கவிதை அண்ணா... ப்ரோபைல் படத்தைப் பார்க்கும்போது பாரதிதாசன் நினைவுக்கு வருகிறார்...

விஜய் said...

@ பிரபா

நன்றி தம்பி

தம்பி இதெல்லாம் ரொம்ப ஓவரு !!!

விஜய்

Anonymous said...

நல்ல கவிதை விஜய்..

விஜய் said...

@ தமிழ்

நன்றி சகோ

விஜய்

ஸ்ரீராம். said...

விஜய்....

விஜய் said...

@ ஸ்ரீராம்

நண்பா திட்றீங்களா ?

ஹேமா said...

விஜய்...
நேசன் கவிதை போல இருக்கு !

விஜய்..எங்க காணோம் என் பக்கத்தில.

போன கவிதையில வர்ணம்ன்னு வந்திருக்கணும்.தப்பா எழுதிட்டேன் !

கவிநா... said...

அண்ணா.. நான் எங்கேயாவது தமிழ் அகராதி தான் தேடிப்பிடிக்கணும்.
விமர்சனம் எல்லாம் இல்லை. வருகையை மட்டும் பதிவு செஞ்சுக்கறேன்.

விஜய் said...

@ ஹேமா

உங்க பக்கம் வந்தேனே

நன்றி ஹேமா

விஜய்

விஜய் said...

@ கவிநா

ரொம்பவா புரியாம இருக்கு சகோ

தொடர் ஊக்கத்திற்கு நன்றி தங்காய்

விஜய்

தேனம்மை லெக்ஷ்மணன் said...

பாசியுண்ணும் வகுலிகளின்
பிராணத்தவிப்பு


மொட்டவிழ்ந்த கணமுதல்
மகரந்தங்களேங்கும் சூலுற
//

அட ரொம்ப அருமை விஜய்..

விஜய் said...

@ தேனக்கா

வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா

விஜய்

சத்ரியன் said...

//இரவற்ற ஞாலமும்
இருளற்ற நாளும்
இறைவழி தேவை
உற்றான்கை பற்றும்வரை //

விஜய்,

அழகுச் சொற்களும், அடக்கமான ஆசைகளும்...!

விஜய் said...

@ சத்ரியன்

நன்றி நண்பா

விஜய்

வைகறை said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com

விஜய் said...

@ கவிஞர்.வைகறை

நன்றி நண்பா

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

விஜய்

Senthil said...

kavidhayai vimarcikka enakku thagudhi illai endru ninaikkiren! Ungal whole familykku heartfelt "HAPPY AND PROPSPEROU NEWYEAR 2011"----Vidya, Senthil, Varsha, Deeksha, Madurai.

hemikrish said...

நல்ல தமிழில் அழகான ஒரு கவிதை..
congratssss...

வலைச்சரம் said...

அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...

அன்புடன்,

வலைச்சரம் நிர்வாகம்.
www.valaicharam.com

விஜய் said...

@ செந்தில்

நன்றி

விஜய் said...

@ ஹேமிகிருஷ்

நெஞ்சார்ந்த நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ வலைச்சரம்

இணைப்பிற்கு மிகுந்த நன்றி

விஜய்

சி. கருணாகரசு said...

நானும் சொல்ல நினைத்தேன்.... உங்க படம் பாவேந்தரின் உருவத்தை நினைவு படுத்துகிறது.... விஜய்.

கவிதை நல்லாயிருக்கு.... ஆனா சில சொற்கள் எனக்கு பிடிப்படவில்லை நண்பா.

விஜய் said...

@ அரசு

மிகுந்த நன்றி நண்பா

விஜய்

Anonymous said...

சட்டென்று புரியவில்லை. நிதானமாக மீண்டும் படித்தேன். புரிந்தது. அருமையாக இருக்கிறது.

விஜய் said...

@ SPS

நலமா ?

புரிந்து கொண்டதற்கு நன்றி SPS

விஜய்