18.2.13

காதல் வர்ணங்கள்


விரல் பற்றி
இறுக அணைத்தபோது 

கண்களில் சூழ்ந்த 
கருமை 

தலையணைக்குள் ஒளித்த 
தாவணி தந்தபோது 
விம்மிய முகத்தின் 
செம்மை 

வழுக்கி விழுந்த காலின் 
சுளுக்கு நீவியபோது 
மின்னலடித்த கொலுசின் 
வெண்மை 

உலர்த்திய துணிகளில் 
என் சட்டைக்கு அருகே 
தொங்கிய உன் ரவிக்கையின் 
பசுமை 

எப்போதணைத்தாலும் 
அணையாத 
உன் பார்வையின் 
நீலம் 

மறக்க நினைத்தாலும் 
மறுநொடியே தோன்றுகிறது 
உன் நினைவுகள் 
வானவில்லாய் .......................

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசிக்கும் வர்ணங்கள்...

s suresh said...

அழகியல் மிளிரும் அழகிய கவிதை! நன்றி!

ஸ்ரீராம். said...

வண்ணம் சூடிய எண்ணங்கள்!

தியாவின் பேனா said...

நல்ல குட்டிக் கவிதைகள்