7.5.13

இந்த நொடியில்
இந்த நொடியில் 

எங்கோ ஒரு உயிர் கபால மோட்சம் 
அடைந்திருக்கும் 

எங்கோ ஒரு உயிர் தொப்புள் கொடி அறுபட்டு
விழித்திருக்கும் 

எங்கோ ஒரு காதல் இதயம் ரணமாக 
பிரிந்திருக்கும் 

எங்கோ ஒரு காதல் பட்டாம்பூச்சியாய்  சிறகடித்து  
பறந்திருக்கும்  

எங்கோ ஒரு தற்கொலை கடனால் 
நிகழ்ந்திருக்கும் 

எங்கோ ஒரு வருமான வரித்துறையின் சோதனை 
நடந்திருக்கும் 

எங்கோ ஒரு முதிர்கன்னியின் பெருமூச்சு 
உஷ்ணமாகியிருக்கும் 

எங்கோ ஒரு அணு கருமுட்டையை 
துளைத்திருக்கும் 

எங்கோ ஒரு சொறிநாய் 
வண்புணர்ந்திருக்கும் 

எங்கோ ஒரு கொலை முறைகேடால் 
செய்யப்பட்டிருக்கும் 

எங்கோ ஒரு மரம் அரக்க மனதுடன் 
வெட்டபட்டிருக்கும் 

எங்கோ ஒரு விதை மண்ணில் 
விதைக்கப்பட்டிருக்கும்

எங்கோ ஒரு துளி மழை 
தெளிக்கப்பட்டிருக்கும் 

எங்கோ ஒருவரால் இந்த கவிதை 
படிக்கப்பட்டிருக்கும் 

4 comments:

ஸ்ரீராம். said...

'ஒருவரில்' ஒருவரால் இப்போது பின்னூட்டம் இடப்பட்டது! :)

திண்டுக்கல் தனபாலன் said...

இரண்டாவது...

வாழ்த்துக்கள்...

அப்பாதுரை said...

Smart.

Anonymous said...

வணக்கம் !
உலகிலேயே முதன்முதலாக தமிழ் கவிதைகளை தேடுவதெற்கென்றே கவிதை தேடல் www.kavithai.in என்ற தேடல் இணையதளத்தை உங்களுக்காக வழங்குவதில் பெருமைகொள்கிறோம். இந்த இணையதளம் முழுக்க முழுக்க கவிதை ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்த இணையதளத்தின் மூலம் இணையம் என்னும் கடலிலிருந்து கவிதைகளை மட்டும் தேடி பெற்றுக்கொள்ளலாம்.

கவிஞர்களுக்காக....
நீங்கள் இணையத்தில் கவிதை எழுதுபவரா? உங்கள் கவிதை இணையதளம் (அல்லது) வலைப்பூ கவிதை தேடல் பக்கத்தில் தெரியவில்லை என்றால், உங்கள் இணையதளத்தையும் கவிதை தேடல் பக்கத்தில் இணைக்கலாம். இணைக்க இங்கே கிளிக் செய்யவும் அல்லது help@kavithai.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும். மேலும் விவரங்களுக்கு பார்க்க www.kavithai.in !

நன்றிகளுடன்...
கவிதை தேடல் குழு,
www.kavithai.in