27.8.09

தமிழர்

அதிகாலை நடை
சுடசுட காபி
நாளிதழ் மேய்வு
ஈழ துன்பியல் நிகழ்வுகள்
பன்றி காய்ச்சல் பலிகள்
பருப்பு விலை ஏற்றம்
மேய்ந்த பின் காலைகடன்
வேகமாய் ஆபீஸ்
சாயுங்காலம் திரும்புதல்
மனைவியின் ஊடல்
ஊடக உள்வாங்கல்
கூடலுக்கு பின் சயனம்
சலிக்கவில்லை தமிழனுக்கு
இனம் அழிந்தால் நமக்கென்ன
தினம் நூறு கிடைத்தால் போதும்
வீரம் விளைந்த தமிழ் மண்ணில்
ஈரம் காய்ந்தது   எப்போது

8 comments:

Eagle said...

ஈரம் காய்ந்தது எப்போது?

அதிகாலை நடை
சுடசுட காபி
நாளிதழ் மேய்வு
ஈழ துன்பியல் நிகழ்வுகள்
பன்றி காய்ச்சல் பலிகள்
பருப்பு விலை ஏற்றம்
மேய்ந்த பின் காலைகடன்
வேகமாய் ஆபீஸ்
சாயுங்காலம் திரும்புதல்
மனைவியின் ஊடல்
ஊடக உள்வாங்கல்
கூடலுக்கு பின் சயனம்

என்று ஆன பின்னர் தானே!?

விஜய் said...

அதுவும்தான் நண்பரே

Chittoor Murugesan said...

தலை !
இது கவிதை இல்லை க "உதை" . தூங்கும் தமிழினம் இனியேனும் கண் விழித்தால் சரி

விஜய் said...

தேங்க்யு தலை

ஹேமா said...

விஜய்,கவிதை உறைக்கிறது.ஆனால் எல்லாரும் இப்படியில்லை.எங்களுக்காக தீயில் உயிர் விட்ட தியாகச் செம்மல்களை மறப்போமா.எங்கோ ஈரொருவர் சுயநலவாதிகளாய்.

விஜய் said...

நான் தமிழ்நாட்டு தமிழர்களை தான் சொன்னேன் ஹேமா. இலங்கையில் இருக்கும் தமிழர்களை அல்ல.

ஹேமா said...

தமிழ்நாட்டுத் தமிழர்களையும் சேர்த்துத்தான் நான் சொன்னேன்.

விஜய் said...

தமிழர்கள் மானமுள்ளவர்களாக இருந்திருந்தால் காங்கிரஸ்க்கு வாக்களித்திருக்க மாட்டார்கள் ஹேமா.