26.1.12

சில ஹைகூக்கள் - 1பட்டாம் பூச்சிகள் 
பள்ளி செல்கின்றன 
சிறகுகள் உதிர்க்க 

உண்டியலில் 
சேர்கிறது
அனுபவியா ஆசைகள் 

பாலுக்கேங்கும் குழந்தையின் 
நாவை நனைக்கும் 
தாயின் கண்ணீர்


பி. கு : எனது பிறந்தநாளான (27.01.2012) இன்று வாழ்த்திய, வாழ்த்திக்கொண்டிருக்கிற, வாழ்த்தப்போகின்ற அனைத்து அன்பு சொந்தங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.  

8 comments:

Ramani said...

அருமையான கவிதை மனமார்ந்த வாழ்த்துக்கள்
பல்லாண்டு பல்லாண்டு சீரு சிறப்புமாக வாழ
இனிய மனம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

மூன்றாம் கவிதை மனதை நனைத்தது.

பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய்.

sasikala said...

சேமிப்பின் புது அர்த்தம் அருமை

ரேவா said...

முதலில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோ..
மூன்று கவிதையும் அழகாய் இருந்தது..எதார்த்தம் பிளஸ் வாழ்வியல் ஏமாற்றம் கலந்து... எனக்கு இரண்டாம் கவிதை மிகவும் பிடித்தது............. வாழ்த்துக்கள்...

அரசன் said...

முத்துக்களான வரிகளுக்கு வாழ்த்துக்கள் ..
உங்களுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

Thanks anna really superb anna

ramyasblog said...

"அனுபவியா ஆசைகள்" என்ன ஒரு சிந்தனை???

dhanasekaran .S said...

பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய்.

அழகான கவிதைக்கு வாழ்த்துகள்