23.12.11

சோறுவாய்
இறைக்கப்பட்ட அரிசிக்கு 
சுரைக்காய் விதை தெளித்த 
தவக்கட்டான் குருவி


வீதியில் கொட்டிய 
பழைய சோற்றுக்கு 
நாள் முழுதும் காவல் 
காக்கும் தெருநாய் 


பிண்ட உணவுக்கு 
ஆத்மா விசாரம் 
செய்யும் காகம் 


மண்ணை அகழ்ந்து 
மட்குரமாக்கும் 
மண்புழு 


இன்று காலை செய்த
உதவியை 
மதியமே மறக்கும் 
ஆறறறிவு மத்தியில் 


ஐந்தறிவினங்கள்
செஞ்சோற்று கடனை
எப்பொழுதும் 
மறப்பதே இல்லை ...............15 comments:

Prabu Krishna said...

உண்மைதான் அண்ணா. மனிதன் மட்டுமே நன்றி மறக்கிறான்.

அரசன் said...

வணக்கம் சார் ...
நெடு நாட்களுக்கு பிறகு சிறந்த படைப்பை வழங்கிய உங்களுக்கு நன்றிகள்

ramyasblog said...

அருமையான மற்றும் உண்மையான வரிகள்.

ஸ்ரீராம். said...

ஐந்தறிவுகளுக்கு சார்ந்து வாழும் கட்டாயம் இருக்கிறது! :))

Anonymous said...

நன்றாக இருக்குது

sasikala said...

ஐந்தறிவினங்கள்
செஞ்சோற்று கடனை
எப்பொழுதும்
மறப்பதே இல்லை ...............

உண்மையான வரிகள் நன்றி .

சத்ரியன் said...

’அட’ போட வைக்கும் வரிகள், விஜய்.

senthilkumar said...

superb lines anna

ராமலக்ஷ்மி said...

கவிதை அருமை.


இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

சி.கருணாகரசு said...

கவிதை மிக கம்பீரம் ... வாழ்த்துக்கள் நண்பா.

சி.கருணாகரசு said...

வணக்கம்... விஜய்... உங்களுக்கும் உறவினர் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

PREMKUMAR.S said...

அன்பரே உங்கள் தளத்தை எனது தளத்தில் பரிந்துரைத்துள்ளேன் பார்க்கவும்
சிறந்த கவிதை தளங்கள்

Rishvan said...

அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

Anonymous said...

Execellent anna

Anonymous said...

Execellent anna