13.11.11

லிகிதம்

மையில் துளிர்க்கும் 
ஒவ்வொரு எழுத்தும் 
மனதணுக்களின் சாரம் 


சிறுவயதில் பழகிய 
அகர உகரங்கள் 
சற்று கோணலாகவே இருந்தது 


விடுமுறை விண்ணப்பங்கள்  
மகிழ்வின் வடிவாகவே இருந்தது


தந்தைக்கு எழுதிய 
கடிதங்களில் 
எழுத்துகள் சற்று 
குனிந்தே இருக்கும் 


காதலிக்கு எழுத 
ஆரம்பித்த போது 
புள்ளிகளில் இதயம் தெரியும் 


வேலைக்கு விண்ணப்பித்தபோது 
பணிவாய் இடைவெளி 
நிரப்பியது 
குடும்ப பொறுப்பு 


ஆனால்


அம்மா உனக்கெழுதும்போது
மட்டும் 
எழுத்துகள் கலங்கி 
கரைந்தே போகிறது ....................

26 comments:

சி.பிரேம் குமார் said...

//அம்மா உனக்கெழுதும்போது
மட்டும்
எழுத்துகள் கலங்கி
கரைந்தே போகிறது//கலக்கல் அன்பரே

சி.பிரேம் குமார் said...

வலைதளத்தின் புது வடிவம் அருமை

ஹேமா said...

விஜய்...கனகாலத்திற்குப் பிறகு பாசம் சொல்லும் அருமையான வரிகளோடு.சந்தோஷம் !

ஸ்ரீராம். said...

ஹேமா அவதானித்தது போல நீண்ட நாட்களுக்குப் பிறகு பாசம் சொல்லும் கவிதை. அருமை. எங்கள் எழுத்துகளில் நட்பு தெரிகிறதா?!

அரசன் said...

கொஞ்சம் பொறுமையா வந்தாலும் பெருமையான படைப்பு அண்ணே ..
மிக ரசித்தேன் ..

Puppykutty :) said...

எளிமையான வார்த்தைகள்ல மனதை தொடும் உணர்வுகள் தருவது ரொம்ப அழகு ... உங்களுக்கு அது ரொம்பவே இருக்கு . வாழ்த்துக்கள் அண்ணா :)

Prabu Krishna said...

இந்த நவீன உகத்தில் அம்மாவுக்கு கவிதை எழுத முடியவும் இல்லை. எழுதியதும் இல்லை இதுவரை. இந்தக் கவிதை அதை உணர வைக்கிறது.

Lakshmi said...

அம்மாவி பாசம் அழகான கவிதையாய் சொல்லி இருக்கீங்க. நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

Prabu Krishna said...

வலைச்சரத்தில் உங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க

கவிதை பந்தலில் இளைப்பாறலாம்

Prabu Krishna said...

என்னுடைய முந்தைய கமெண்டில்

//அம்மாவுக்கு கவிதை எழுத //

இது "அம்மாவுக்கு கடிதம் எழுத" என்று சொல்ல வேண்டியது.

நம்பிக்கைபாண்டியன் said...

என்றும் இனிமையானவை அம்மாவின் நினைவுகள்!

சம்பத் குமார் said...

வணக்கம் நண்பரே.. தளத்தில் முதல் வருகை..

நண்பர் பலேபிரபு மூலம்..

//அம்மா உனக்கெழுதும்போது
மட்டும்
எழுத்துகள் கலங்கி
கரைந்தே போகிறது //


கடைசி வரி டச்சிங்..

அருமை..

நட்புடன்
சம்பத்குமார்

சத்ரியன் said...

அன்பின் சுவடு, அருமை விஜய்.

Anonymous said...

unga blog nalla iruku friend

Life is beautiful, the way it is...
90 ரூபாய் பூஸ்டர் பேக் போடுங்க 30 நாட்களுக்கு நான் ஸ்டாப் ஆ பேசுங்க மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க 365 Days Free Unlimited Calls Click Here

விஜய் said...

@ சி.பிரேம் குமார்

மிகுந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ ஹேமா

நன்றி ஹேமா

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

நன்றி நண்பா

"எங்கள்" எப்பொழுதும் நட்புதான்

விஜய்

விஜய் said...

@ அரசன்

நெஞ்சார்ந்த நன்றி தம்பி

விஜய்

விஜய் said...

@ puppykutty

நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ

விஜய்

விஜய் said...

@ பிரபு

நன்றி தம்பி

விஜய்

விஜய் said...

@ லக்ஷ்மி

நன்றி அம்மா

விஜய்

விஜய் said...

@ நம்பிக்கைபாண்டியன்

மிகுந்த நன்றி நண்பரே

விஜய்

விஜய் said...

@ சம்பத் குமார்

மிகுந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ சத்ரியன்

நண்பா நலமா

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ மஞ்சு

தேங்க்ஸ் சகோ

விஜய்

Anonymous said...

Unmaiya irukku ovvoru ezhuthum