31.10.11

திறக்காத கதவுகள்


அய்யர் பங்களாவுக்கு 
காஞ்சிபுரத்திலிருந்து
குடி வந்தது ஒரு குடும்பம்

வந்த நாள் முதல் 
கதவுகளும் ஜன்னல்களும் 
மூடப்பட்டே இருந்தன

எதிர்வீட்டு பையன் பாபு 
சைக்கிளில் விழுந்து 
காலுடைந்தபோதும் 

கடைசி வீடு 
மாரி வாத்தியார் 
மாரடைப்பால் 
போன போதும் 

கூரை வீட்டு லட்சுமி 
பனிக்குடமுடைந்து
தலைப்பிரசவத்திற்கு 
ஓலமிட்ட போதும் 

கதவுகளும் ஜன்னல்களும் 
மூடியே இருந்தன

அந்த வீட்டு கிழவி 
செத்தபோது மட்டும் 
தெருவே அங்கு போய் 
ஓவென 
அழுதுவிட்டு வந்தது...............  

12 comments:

ஹேமா said...

விஜய் சுகம்தானே !

நல்ல அயலோடு சேர்ந்து வாழ்வேணுமென்பார்கள்.
அதுவா கவிதை !

ஸ்ரீராம். said...

ஏன் என்ற கேள்வி வந்தது. ஹேமாவின் பின்னூட்டம் பதிலளிக்கிறது!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

நல்ல மனிதர்கள் ஊரோடு ஒத்து வாழ்வார்கள் விஜய்..

சத்ரியன் said...

தெரு
அந்த குடும்பத்துக்கு பாடம் நடத்தியிருக்கு...!

Anonymous said...

இடாதவங்களுக்கு இட்டு காட்டு என்பது போல்..

விஜய் said...

@ ஹேமா

மிகவும் நலம் ஹேமா

அதேதான்

நன்றி

விஜய்

விஜய் said...

@ ஸ்ரீராம்

நன்றி நண்பா

எனக்கு பதில் ஹேமா பதில் அளித்து விட்டார்கள்

விஜய்

விஜய் said...

@ தேனக்கா

அக்கா நலம்தானே ?

நன்றி அக்கா

விஜய்

விஜய் said...

@ சத்ரியன்

ஆமாம் நண்பா

நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ தமிழ்

நலமா சகோ

நன்றி சகோ

விஜய்

நம்பிக்கைபாண்டியன் said...

அருகில் இருப்பவர்களின் நல்ல இயல்புகளை சொல்லும் கவிதை!

Che said...

அட நாசம போன பின்னூட்டல் காறங்களே.. இந்த கவிதையின்ட தார்ப்பரியம் விழங்கவில்லையா?
ஐயர் வீட்டு சாதி தடிப்புதான் இந்த கவிதை சொல்லாமல் சொல்லும் வந்த விசயம்,,

அடிச்சு துரத்தோணம் இவங்களை,,