19.12.09

வறுமைக்கோடுபிய்ந்த பிரமிட் கூரையின்
காய்ந்த காகித கதவு

பெருக்கல் குறிகளின்
செவ்வக இணைப்பு

கதிர் மறுக்கும்
புங்கச் சாமரம்

நெளிந்த உலோகத்தில்
நெத்திலி கயல்

இயைந்த வாழ்வு
திரிந்தது

பாசத்துடன் பாஸ்மதி
குறைவிலா குவார்ட்டர்
பட்டா பெட்டி அறையில்
சிரிக்கும் காந்திகள்

இடைத்தேர்தல்
இடையிடையே வராமல்
அடிக்கடி வரணும்........

47 comments:

பூங்குன்றன்.வே said...

/இடைத்தேர்தல்
இடையிடையே வராமல்
அடிக்கடி வரணும்........//

காலம் அப்படிதான் மாறிவிட்டது நண்பா.
உண்மை பேசும் கவிதை.

புலவன் புலிகேசி said...

ம்...நல்ல சாடல்..நல்லா இருக்குங்கண்ணா...

பாலா said...

நல்லா இருக்கு அண்ணே
சின்ன பகடி ,வருத்தம் ,இயலாமை

ராமலக்ஷ்மி said...

தேர்தல் காலத்தில் மட்டும் மங்கி மறுபடி அழுத்தமாய் தெரியும் வறுமைக்கோட்டினைப் பற்றி சொல்லியிருக்கும் விதம் நன்று.

Anonymous said...

இடையிடையே வரும் இடைத்தேர்தலின் போது மட்டும் ஈரமாகும் ஈரக்குலைகள்...

ஆதங்கம் வெளிப்பட்டு இருக்கு...

கவிதை(கள்) said...

@ பூங்குன்றன்

தங்களின் தொடர் வருகையும் வாழ்த்தும் என்னை மேலும் மிளிர வைக்கும்.

மிக்க நன்றி நண்பா

விஜய்

கவிதை(கள்) said...

@ புலவன் புலிகேசி

நன்றி சகோதரா

டரியலுக்கு வாழ்த்துக்கள்

விஜய்

கவிதை(கள்) said...

@ பாலா

அதெல்லாம் சரி, போட்டி கவிதை எங்கே

கப்பலுக்கு பறந்துட்டீங்களா

பரிசு போட்டிக்கவிதைக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

விஜய்

கவிதை(கள்) said...

@ ராமலக்ஷ்மி

மிக்க நன்றி சகோதரி

தங்களின் வாழ்த்தும் ஊக்கமும் என்னை மேலும் எழுத வைக்கும்

மீண்டும் நன்றி

விஜய்

ரிஷபன் said...

படம் மிரட்டுது.. கவிதை உருட்டுது.. மனசை..

கவிதை(கள்) said...

@ தமிழ்

ஈரமாகும் ஈரக்குலைகள்

அற்புதம் சகோதரி

வாழ்த்துக்கு நன்றி

விஜய்

கவிதை(கள்) said...

@ ரிஷபன்

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா

விஜய்

பலா பட்டறை said...

நண்பரே விஜய்
//நெளிந்த உலோகத்தில்
நெத்திலி கயல்//
//பட்டா பெட்டி அறையில்
சிரிக்கும் காந்திகள்
//
அடேங்கப்பா...


ஒவ்வொரு வரியும் ரசித்தேன்...

பா.ராஜாராம் said...

அட,விஜய்!

நறுக்கு தெறிக்குது மக்கா!

ஸ்ரீராம். said...

எளிமையான வாழ்வை விளக்கும் வரிகள்...
ஏழ்மையைச் சுட்டினாலும் அதில் உள்ள நிம்மதியைக் கெடுக்கும் (இடைத்)தேர்தல்கள் தேவைதானா?

கவிதை(கள்) said...

@ பலா பட்டறை

தங்கள் மேலான ரசனைக்கும் வாழ்த்துக்கும், தொடர் வருகைக்கும் மிக மிக நன்றி நண்பா

விஜய்

கவிதை(கள்) said...

@ பா.ரா

மக்கா பிடிச்சிருக்கா

நன்றி மக்கா தங்களின் இடைவிடாத வேலைக்கு இடையில் வாழ்த்தியமைக்கு

விஜய்

கவிதை(கள்) said...

@ ஸ்ரீராம்

கண்டிப்பாக தேவை இல்லை

அரசாங்க பண விரயம்

மக்கள் ஒரு வாரம் சந்தோஷமாக இருக்குறத தவிர

விஜய்

அன்புடன் மலிக்கா said...

அருமையான கவிதை. வரிகளில் கலக்கல்...

கவிதை(கள்) said...

@ மலிக்கா

நன்றி சகோதரி

விஜய்

ஹேமா said...

அது சரி !

சந்தான சங்கர் said...

ஓட்டு விழுவதற்கென
ஓட்டை விழுந்த பண மூட்டை..
சில்லறை கவனிப்புகள் எல்லாம்
கல்லறை சென்றது
ஆட்சி பிடித்தபின்..

நல்லாருக்கு விஜய்

வாழ்த்துக்கள்..

ஜீவன் said...

கவிதை ...!அருமை ..!

கவிதை(கள்) said...

@ ஹேமா

ஏன் ஹேமா கவிதை கவரவில்லையா ?

விஜய்

கவிதை(கள்) said...

@ சந்தான சங்கர்

எப்பொழுதும் பின்தொடர்ந்து ஆதரிக்கும் நண்பனுக்கு நன்றிகள் பல

விஜய்

கவிதை(கள்) said...

@ ஜீவன்

நன்றி நண்பா

விஜய்

Sivaji Sankar said...

தலைப்பு தேர்வு அருமை.
படத்துடன் கவிதை நன்று....

கவிதை(கள்) said...

நன்றி தம்பி சங்கர்

விஜய்

thenammailakshmanan said...

//நெளிந்த உலோகத்தில்
நெத்திலி கயல்//

இது மிக அருமை விஜய் படத்துக்கும் இது பொருத்தமாக இருக்கு

கவிதை(கள்) said...

நன்றி சகோதரி தேனு

எங்க ரெண்டு நாளா பிசியா ?

விஜய்

Senthil said...

Padamum Varigalum migavum arumai. Kavidhai pani sirakka endrendum engal vazhthukkal ---------- Srividya, Varsha, Deeksha.

ஹேமா said...

ஏன் அப்பிடிக் கேட்டிட்டீங்க ?கவிதை நல்லாயிருக்கு.சரியா சொல்லியிருக்கீங்கன்னு சொன்னேன்.

படம் போட்டு கவிதை கேட்டிருக்கேன்.வாங்க விஜய்.

கவிதை(கள்) said...

Thanks வித்யாசெந்தில், வர்ஷா, தீக்க்ஷா

விஜய்

கவிதை(கள்) said...

@ஹேமா

நன்றி ஹேமா

இதோ வருகிறேன்

விஜய்

Kala said...

ஏழ்மையை,வறுமையை முதுமையை
கோடிட்டுக் காட்டும் வதனத்தை
திரும்பியும் பாக்காதவர்கள்.
தேவை ஏற்பட்டால்....

தேடி வந்து தாங்கி நின்று பிச்சை
கேட்கும் மட்டமான,,,,,,,....??

படத்துடன் நல்ல வரிகள்.நன்றி

கவிதை(கள்) said...

நன்றி சகோதரி கலா

தங்களின் தொடர் வருகையும் வெளிப்படையான விமர்சனமும் எனக்கு மிகுமகிழ்வு

விஜய்

சத்ரியன் said...

//இடைத்தேர்தல்
இடையிடையே வராமல்
அடிக்கடி வரணும்........//

விஜய்,

அம்சம்...!

கவிதை(கள்) said...

நன்றி நண்பா

விஜய்

சி. கருணாகரசு said...

நல்லாத்தான் யோசிக்கிறிங்க விஜய்...பராட்டுக்கள்

தியாவின் பேனா said...

ஆகா அருமை

கவிதை(கள்) said...

நன்றி அரசு

தங்களின் தொடர் வருகையும் வாழ்த்தும் எனக்கு பெருமகிழ்வு

விஜய்

கவிதை(கள்) said...

@ தியாவின் பேனா

மிக்க நன்றி நண்பா

ஊக்கத்திற்கும் வாழ்த்துக்கும்

விஜய்

thenammailakshmanan said...

உங்களைத்தான் 4 நாளா நான் தேடிக்கிட்டு இருக்கேன் விஜய்

எப்ப சரியாகும் உங்க இணைப்பு

balakavithaigal said...

வறுமைக் கோடுகள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதே ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பு.படமும் கவிதையும் அருமை வாழ்த்துகள் விஜய்

விஜய் said...

நன்றி சகோதரரே

விஜய்

நாவிஷ் செந்தில்குமார் said...

வெற்றி பெற வாழ்த்துகள்!

விஜய் said...

நன்றி நண்பா

விஜய்