26.1.10

விளிம்பு நிலை
புற ஊனம்

கருமை மட்டுமறியும்
இருட்டு விழிகள் 

முற்றிய மூங்கிலே 
மூன்றாம் காலாய்

அண்டச்சத்தமறியா
அரவச்செவி

தட்டேந்தும் குழந்தையின் 
அதிர்ஷ்ட ஆறுவிரல்கள்

ஒருவேளை பழகி மரத்த 
நா நுகர் மொட்டுகள் 

பசுமை புரட்சியின் 
பாசிச பதிப்பு பாதி 

உச்....... உச்சோ  
அனுதாபமோ 
அறவே வேண்டாம் 
இயன்ற பொருளில் 
ஈவோம் சிறிதளவாவது 
அவர்களும் வாழ ..................


அக ஊனம் 

ஆண்மை கொழுத்தவனுக்கு VD
பணம் பெருத்தவனுக்கு ED

இருட்டில் இடம்மாறும் 
இலவச நோவுகள் 

சாகடிக்கும்  தீயாய் 
மனுதர்மப் பகடிகள் 

உருவமில்லா இறைவனுக்கு 
இடிபாட்டில் வழிபாடு 

புதிது புதிதாய் முளைக்கும் கோவில்கள் 
ஒருவேளை தீபமேற்றா 9ம் நூற்றாண்டு கோவில் 

திகம்பர சாமியார்கள் 
அகப்படும் சாமானியர்கள் 

உயர்குதி காலணிகள் 
பெருகும் கருப்பை கோளாறுகள் 

சாவின் நுனியிலொருவன்

செல்போனில் சல்லாபம் 

இரண்டு வயதிலேயே அபாகஸ் 
வளரும் டிஸ்லெக்சியா 

மரபணு மாற்றிய விதைகள் 
நிலம் விற்கும் மகசூல் 

கலாச்சார சீரழிவால் என் 
கண்ணில் சொட்டு நீர்ப்பாசனம்


(நாளைய எனது பிறந்தநாளை {27.01.2010}  முந்திய கவிதை)
32 comments:

ஹேமா said...

விஜய் ....வாழ்த்துக்கள் சகோதரா.புறஊனம் அகஊனம் அக்கு அக்காப் பிச்சுப் போட்டுட்டிங்க.
என்ன சொல்ல இதுக்கு !

மனதில் ஊனங்களோடுதான் ஒவ்வொரு மனிதனும்.
புரிந்துகொள்ளும் காலங்களில் அவனே ஊனமாகிவிடுகிறான்.

என் இனிய முன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கு.என்றும் தொடர்ந்திருக்கும் இந்த வாழ்த்து.
அன்பும் அறனும் என்றும் நிறைவாய் இருக்க் இறைவன் நிறைவுகள் தரட்டும்.

அன்போடு சகோதரி ஹேமா.

விஜய் said...

உங்க பதிவுல நான் First இங்க நீங்களா

ரொம்ப ரொம்ப நன்றி ஹேமா

சகோதரியின் முதல் வாழ்த்து மனதை நிறைக்கிறது

விஜய்

சத்ரியன் said...

பிறந்தநாள் வாழ்த்துகள் விஜய்...!

Kala said...

எல்லாமே புண்ணாகி...
புரையேறிவிட்ட நம் நாடுகளில்
இரு ஊனமில்லை பார்பதெல்லாம்
ஊனம்தான் விஜய்!!


ஊனத்தின் வெளிப்பாடு
அருமையான கூப்பாடு!!
நன்றி

எல்லாம் வல்ல இறைவன் உங்கள்
ஆக்கமும்,ஊக்கமும்,நோக்கமும்
நலமே நடந்தேற துணைபுரிய...

துணையும்,துள்ளி வரும் தனயனும்
கொழிக்கும் தனமும்,செழிக்கும் உடலும்
வேண்டி வாழ்த்துகிறேன் வாழி நலம்சூழ!!

பலா பட்டறை said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய்:)) எல்லா நலமும் வளமும் கிடைக்கட்டும்.
--
முதல் கவிதை படித்தவுடன் என்ன விஜய் இப்படித்தான் எழுத முடிவெடுத்திருக்கிறீர்களா? என்ற பின்னூட்டம் மனதில் எழுந்தது..

இரண்டாவது கவிதை அதை கொன்று போட்டுவிட்டது..:( இது போலவே நிறைய எழுதுங்கள் விஜய்.. மிக அற்புதம், வரிக்கு வரி..:))

பாலா said...

அருமை ணா
பிறந்தநாள் வாழ்த்துகளும் கூட

விஜய் said...

@ சத்ரியன்

மிகுந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ Kala

தங்களின் வாழ்த்தும் உணர்வும் என்னை தலை வணங்க செய்கிறது தங்களன்பின்முன்

மிகுந்த நன்றி சகோதரி

விஜய்

விஜய் said...

@ பலா பட்டறை

ஷங்கர்

தங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிகுந்த நன்றி

எழுத முயல்கிறேன் நண்பா

விஜய்

விஜய் said...

@ பாலா

நெஞ்சார்ந்த நன்றி தம்பி

விஜய்

ஸ்ரீராம். said...

அருமை விஜய்...

இனிய பிறந்த நாளுக்கு 'எங்கள்' வாழ்த்துக்கள்..
அங்கய வருகைக்கு இங்கும் நன்றி..
"உயர்குதி காலணிகள்"
காலனிகள் என்று இருக்க வேண்டுமோ?
இருட்டு விழிகள், மூன்றாம் காலில் தமிழும், அரவச் செவியில் விஞ்ஞானமும் ரசித்த வரிகள்.
அதிருஷ்ட ஆறு விரலும், சொட்டு நீர்ப் பாசனமும் கூட ஈர்த்த வரிகள்.

ஜெகநாதன் said...

நல்ல கருத்துக்கள். ​​செவ்வியல் தன்மையோடு படைத்திருக்கிறீர்கள்.

ராமலக்ஷ்மி said...

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய்! எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க!

இரண்டு கவிதைகளிலும் சொல்ல வந்ததை அற்புதமாகச் சொல்லிவிட்டிருக்கிறீர்கள்.

விஜய் said...

@ ஸ்ரீராம்

"உங்கள்" வாழ்த்தை தலைவணங்கி ஏற்று கொள்கிறேன் நண்பா

காலணிகள் தான் நண்பா (ஹை ஹீல்ஸ்)

நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி

விஜய்

விஜய் said...

@ ஜெகநாதன்

பின்னூட்ட புயலின் வாழ்த்து இங்கு மையம் கொண்டதற்கு மிகுந்த நன்றி.

அடிக்கடி வருக
அறிவுரை தருக

விஜய்

விஜய் said...

@ ராமலக்ஷ்மி

மிகுந்த நன்றி சகோதரி

தங்களை போன்ற திறமை மிகுந்தோரின் வாழ்த்துக்கள் நிச்சயம் என்னை மேம்பட வைக்கும்.

விஜய்

Sivaji Sankar said...

விளிம்பு நிலையில் நான்.... :)

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா..

புலவன் புலிகேசி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா...கவிதை வழமை போல் அருமை...

விஜய் said...

@ சிவாஜி சங்கர்

மிகுந்த நன்றி தம்பி

தங்களின் திறமையால் பிறர் வியக்கும் நிலையை அடைவீர்கள்

விஜய்

விஜய் said...

@ புலவன் புலிகேசி

நெஞ்சார்ந்த நன்றி தம்பி

விஜய்

Senthil said...

Irandu kavidhaiyum superb! Intha andu mudhal ungal vazhavil nimmathiyum, santhoshamum mattume nilavida ellam valla GOD MURUGANAI anbudan vendukiren! Iniya Pirantha Naal Vazhathukkal ----------- Vidya, Senthil, Varsha, Deeksha Madurai.

ரிஷபன் said...

பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..

விஜய் said...

@ செந்தில்

மிகுந்த நன்றி

விஜய்

விஜய் said...

@ ரிஷபன்

மிகுந்த நன்றி நண்பா

விஜய்

padma said...

belated greetings vijay.
thanks for ur visit
padma

விஜய் said...

@ பத்மா

மிகுந்த நன்றி சகோதரி

அடிக்கடி வருகை தாருங்கள்

விஜய்

அன்புடன் மலிக்கா said...

மிக மிக அருமையான அக புற ஊனங்களை சொன்னவிதவிதம் அழகு சகோதரரே..

விஜய் said...

@ மலிக்கா

மனமார்ந்த நன்றி சகோதரி

விஜய்

அண்ணாமலையான் said...

அழகா சொல்லிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

விஜய் said...

அண்ணாமலையானின்
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி.

விஜய்

thenammailakshmanan said...

என் அன்பின் சகோதரர் விஜய்க்கு அக்காவின் அன்பு வாழ்த்துக்கள் முன்பே தெரிந்து இருந்தால் வாழ்த்திவிட்டுச் சென்றிருப்பேன் விஜய்
//உச்....... உச்சோ
அனுதாபமோ
அறவே வேண்டாம்
இயன்ற பொருளில்
ஈவோம் சிறிதளவாவது
அவர்களும் வாழ ..................//

ஊனம் என்பது ஊனமல்ல எல்லாம் மனதிலும் காணும் கண்ணிலும்தான் இருக்கிறது

//இரண்டு வயதிலேயே அபாகஸ்
வளரும் டிஸ்லெக்சியா

மரபணு மாற்றிய விதைகள்
நிலம் விற்கும் மகசூல்

கலாச்சார சீரழிவால் என்
கண்ணில் சொட்டு நீர்ப்பாசனம்//

ஆனால் இது அநியாயம் விஜய் உண்மையிலேயே

விஜய் said...

வாழ்த்துக்கு நன்றி சகோதரி

விஜய்