28.4.10

நோஸ்டால்ஜிக் கவிதை - 2பெண்கள் வருங்கால இந்தியாவின்
வளர்ச்சி தூண்கள்
 

விளக்கில் விழும் விட்டில்களல்ல
உலகின் நாகரீகத் தொட்டில்கள்
 

மின்னி மறையும் நட்சத்திரங்களல்ல
ஒளிர்ந்து வரும் நெருப்புக்கோளங்கள்
 

வர்ணிக்கப்படும் கவிதைகளல்ல
வாசிக்கப்படும் செய்தித்தலைப்புகள்
 

கண்கள் காதலுக்கு மட்டுமல்ல
சாதீயினக் கொடுமைகளின் சாடலுக்கும்தான்
 

சமுதாயப்பார்வையில் கோழைகளல்ல
சமூகத்தை சீர்திருத்தும் தங்கப்பேழைகள்
 

ஆண்டாண்டு காலமாய் பேசப்படும்
பதுமைப்பெண்களல்ல
நூற்றாண்டு கவிஞன் கண்ட
புதுமைப்பெண்கள்
 

முகவரியற்ற முகாரிகளல்ல
முகத்தைக்காட்டும் முத்துச்சிப்பிகள்
 

இழிவு செய்தால் நலிவு கொள்பவர்களல்ல
ஏழுலகம் ஏத்தும் கலியுக கவசங்கள்
 

கண்ணீர் எங்களுக்கு ஆயுதமல்ல
நாங்கள் நிராயுதபாணிகள்
 

ஏக்கங்கள் எங்களுக்கல்ல
ஆக்கத்தின் தாக்கங்கள் மட்டும்
 

நல்ல பொழுதில்
சூளுரைகளெனும் வாளுரைகளை எடுப்போம்
ஏங்கிய காலத்தை வேம்பாய் மறப்போம்
தூங்கிய காலத்தையும் தூக்கி எறிவோம்
வரதட்சிணையை வாகாய் ஒழிப்போம்
வருங்காலத்தை வளமாக்குவோம்
அடுப்பறையை விட்டு ஏடு
எடுப்பறைக்கு வருவோம்
எழுத்தறிவு பெற்று எதையும் சாதிப்போம்
பெண் சிசுக்களை திசுக்களைப்போல் காப்போம்
பெண்கள் வருங்கால இந்தியாவின்
வளர்ச்சி  தூண்கள்


( 17 ஆண்டுகளுக்கு முன் 18.04.1993 அன்று திருச்சி வானொலியில் ஒலிபரப்பான கவிதை )

 

22 comments:

மதுரை சரவணன் said...

அருமை . பொண்கள் நம் நாட்டின் கண்கள். வாழ்த்துக்கள்

விஜய் said...

@ மதுரை சரவணன்

வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பா

விஜய்

thenammailakshmanan said...

மின்னி மறையும் நட்சத்திரங்களல்ல
ஒளிர்ந்து வரும் நெருப்புக்கோளங்கள்

வர்ணிக்கப்படும் கவிதைகளல்ல
வாசிக்கப்படும் செய்தித்தலைப்புகள்//

அட இது ரெண்டும் ரொம்ப சூப்பர்ப் விஜய் ,,,அப்பவே இப்படி அருமையா எழுதி இருக்கீங்க பாராட்டுக்கள்...

நேசமித்ரன் said...

அப்பவே....

ம்ம் :)

வாழ்த்துக்கள்

PPattian : புபட்டியன் said...

அருமை விஜய். அப்பவே வானொலி புகழா நீங்க? :)

இந்த காலத்துக்கும் பொருந்தும் கவிதை இது.

விஜய் said...

@ தேனக்கா

வாழ்த்துக்கு நன்றி அக்கா

விஜய்

விஜய் said...

@ நேசன்

அப்பவும் சுமார்தான் அப்பிடீன்னு சொல்றீங்களா நண்பா

வாழ்த்துக்கு நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ புபட்டியன்

வானொலி புகழ்லாம் இல்லீங்க நண்பா

இளையபாரதம் நிகழ்ச்சிக்கு பாட்டு கவிதை எல்லாம் பண்ணேன். (தேசியக்கல்லூரியில் படிக்கும்போது)

நன்றி நண்பா

ராமலக்ஷ்மி said...

வானொலி ஒளிபரப்புக்கு இப்போது வாழ்த்துக்கள்:)!

கவிதை அருமை விஜய்.

விஜய் said...

@ ராமலக்ஷ்மி

உளமார்ந்த நன்றிகள் அக்கா

விஜய்

சிவன். said...

93-இல் ரேடியோவா...kalakkunga

கவிதை நல்லா இருக்கு விஜய் சார்.. !!!

விஜய் said...

@ Sivan

தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிகுந்த நன்றி நண்பா

விஜய்

ஸ்ரீராம். said...

தொடர்ந்து படித்து வந்த உங்கள் கவிதை பாணியில் ஒரு மாற்றமாய் இருக்கிறதே என்று யோசித்த வண்ணம் படித்தேன்...ஓ..பத்தொன்பது வருடத்துக்கு முன்னால் எழுதியதா...
வானொலியில் நீங்களே படித்தீர்களா..?

விஜய் said...

@ எனது தங்கையை படிக்க வைத்தேன்

நான் கிடார் வாசித்தேன்

நன்றி ஸ்ரீராம்

விஜய்

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அட நிறைய வித்தியாசங்கள்!!

அருமை நண்பா. :)

விஜய் said...

@Blogger 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

நன்றி நண்பா

விஜய்

Anonymous said...

ஓ பதினேழு வருடத்துக்கு முந்தையதா?

’மனவிழி’சத்ரியன் said...

//வரதட்சிணையை வாகாய் ஒழிப்போம்//

விஜய் கவிதை ஏன் இவ்வ்வ்வ்வளவு நீ...........ளமா இருக்கேன்னு பாத்தா, காரணம் கடைசியா இருந்துச்சி.

ஆனாலும், பாருங்க விஜய் வரதட்சணை என்ற ஒன்றை ஒழிக்க ஆண்கள் தான் முன்வரும் முன்வர வேண்டும்.

விஜய் said...

@ தமிழ்

ஆமாம் சகோதரி

வருகைக்கு நன்றி

விஜய்

விஜய் said...

@ சத்ரியன்

பழைய கவிதை அதனால் தான் நீளம்

ஆமாம் நண்பா ஆண்கள் தான் ஒழிக்கவேண்டும்

நன்றி நண்பா

விஜய்

ஹேமா said...

ஒவ்வொரு வரிகளுமே அருமையா இருக்கு விஜய்.அப்பவே கலக்கலா எழுதியிருக்கீங்களே !

விஜய் said...

@ ஹேமா

நன்றி ஹேமா

விஜய்