8.1.11

தட்டான்விராட் பிறங்கடை
அபிவாதனம் 


கழஞ்சு தண்டவாணி 
தாமிரக்குன்றிமணி 
குழைந்துருக்கிய 
மங்கல நாண்


அயத்தின் களங்கு
நீக்கி 
தணலில் தட்டிய 
கொழு


உளி துளைத்து 
துயில் திளைக்க 
தேக்கு சேக்கை


மாந்தக்கோட்டத்தின்
காந்தக்கோட்டை


யாழியின் அண்ணத்தில்
உருளும் கல் 


துரியோதனன் வழுக்கிய 
இந்திர பிரஸ்தம் 


ஆண்டவர்களின் 
ஆயுத கர்த்தாக்கள் 


பெருந்தனக்காரர்களின் 
பிரதேச பிரவேசம்


மயில் துத்தம் 
தீர்த்தமாய் 
மரித்த உயிர்கள் 


காட்மிய புகையில்
நுரையீரல் அரிப்புகள் 
கந்தாரச்சுவையில் 
உப்பிய கணயங்கள்


ஆறறிவு மிஞ்சிய 
அரும்பெரிய சந்ததி 
அடிமை அமீபாவாய் 
ஒடுங்கியது கண்டு 


குஞ்சர மல்லனின் 
பிரமேந்திரக்கல்லில் 
வெந்துளி  கசிகிறது 
கமலாலய தச்சனின் 
ஆரூர்க்குள  நீராய்   36 comments:

கோநா said...

பிரமிக்க வைக்கிறது தங்களது சொல்லாட்சி விஜய்.

சி. கருணாகரசு said...

மிக பிரமாண்ட சொல்லடுக்குகள்.... சில இடங்கள் சொற்களே மிக புதுமையாய் இருக்கு..... இன்னும் கருத்துகள் வரட்டும்............ அப்போத்துதான் நான் கவிதையை முழுமையாய் உள்வாங்கிக்கொள்ள முடியும்

வாழ்த்துக்கள் நண்பா.

சி. கருணாகரசு said...

நீங்க பயன்படுத்தியிருக்கும் சொற்கள் பல எனக்கு தெரியாதவை.... கல்லடுப்பு,உமி,ஊதாங்குழல்,பூனூல் இப்படி இருந்திருந்தா எளிமையா புரிஞ்சியிருப்பேன்...... பாராட்டுக்கள் நண்பா.

தமிழ் அமுதன் said...

என்ன சொல்லி பாராட்டுவதென இன்னும் யோசித்து கொண்டே இருக்கிறேன்...!

வாழ்க..! நண்பா.!

தமிழ் அமுதன் said...

நண்பர் கருணாகரசு சொன்னது போல எனக்கும் சில சொற்கள் புதியவை..புரியவில்லை...!

தமிழரசி said...

முதல் கருத்தை சொல்ல நினைத்த போது சொல்லிவிட்டு இருந்தார் இரண்டாவது கருத்தாவது சொல்லலாம் என்றால் கருணா சொல்லிட்டார் பாராட்டலாம் என்றார் அதையும் தமிழ் செய்துவிட்டார்.. நான் சொன்னால் என்ன என் நண்பர்கள் சொன்னால் பாராட்டுவது தானே எங்கள் ஒருமித்த கருத்து விஜய்..தட்டான்..பிரம்மித்தேன்

Senthil said...

Great words! Very difficult to understand! Viswakarma will give his full blessings to U, for this extraordinary poem!--- Vidya Senthil, Madurai./

Senthil said...

Great words! Very difficult to understand! Viswakarma will give his full blessings to U, for this extraordinary poem!--- Vidya Senthil, Madurai./

சத்ரியன் said...

சொற்கள் மீண்டு(ம்) சங்க காலத்திற்கு நடைக்கட்ட ஆரம்பிக்கிறது.

கனக்கும் கவிதையில் ஒரு கணக்கையும் வைத்திருக்கிறாயே விஜய்! வாழ்த்துக்கள்.

//ஆறறிவு மிஞ்சிய
அரும்பெரிய சந்ததி
அடிமை அமீபாவாய்
ஒடுங்கியது ..//

விஜய் said...

@ கோநா

முதல் வருகைக்கும் மனம் திறந்த வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ அரசு

தங்களை போன்ற நல் இதயங்களின் உற்சாக வாழ்த்துக்கள் தான் என்னை சற்று மிரள வைக்கிறது. இன்னும் நன்கு எழுத முயல்கிறேன் நண்பா

நெஞ்சார்ந்த நன்றிகள்

விஜய்

விஜய் said...

@ ஜீவன்

நண்பா நலமா ?

நீண்ட நாளைக்கப்புறம் தட்டான் கொண்டு வந்து சேர்த்துள்ளது

நமது சந்ததியின் முன்னேற்ற கவலை நண்பா

நன்றி

விஜய்

விஜய் said...

@ தமிழ்

சகோ, தங்களை போன்றாரின் ஊக்கம் இன்னும் என்னை மேற்கேற்றும்

மிகுந்த நன்றி சகோ

விஜய்

விஜய் said...

@ Vidya senthil

Thanks sis

vijay

விஜய் said...

@ சத்ரியன்

நன்றி நண்பா

மனக்குமுறல்களின் வடிகால் இது

விஜய்

ஸ்ரீராம். said...

கருணாகரசு சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன். பாராட்டுக்கள் விஜய்.

ஹேமா said...

இது வியஜ் பக்கம்தானே.சந்தேகமா பயமா இருக்கு.ஒண்ணும் புரியல !

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

/////உளி துளைத்து
துயில் திளைக்க
தேக்கு சேக்கை
////////


கவிதையில் வார்த்தை அலங்காரம் ரசிக்க வைக்கிறது ஒவ்வொரு வார்த்தையையும் . அருமை நண்பரே . வாழ்த்துக்கள்

பலே பிரபு said...

கவிதை நடை வியக்க வைக்கிறது !! சில இடங்களில் வார்த்தைகள் புரியவில்லை எனும்போது தமிழனாக வெட்கப்படுகிறேன்.

பலே பிரபு said...
This comment has been removed by the author.
கோநா said...

இந்த வார திண்ணை இணைய இதழில், வாழ்த்துக்கள் நண்பா...

விஜய் said...

@ ஸ்ரீராம்

மிகுந்த நன்றி நண்பா

விஜய்

விஜய் said...

@ ஹேமா

ஹேமா நிஜமா கோபம் வருது தானே

நன்றி ஹேமா

விஜய்

விஜய் said...

@ பலே பிரபு

முசிறி தம்பியின் வாழ்த்துக்கு மிகுந்த நன்றி

விஜய்

விஜய் said...

@ கோநா

வருக நண்பா

இனிப்பு செய்தியுடன் வந்துள்ளீர்கள்

நெஞ்சார்ந்த நன்றி நண்பா

விஜய்

கவிநா... said...

அண்ணா, என்னை மாதிரி ஆளுங்க எல்லாம் எட்டிக் கூட பார்க்கமுடியாதபடி எழுதி பயப்படவைக்கறீங்க அண்ணா...

பிரமிப்பா இருக்குண்ணா....

உங்களோட கடந்த பல கவிதைகளுக்கு நான் என்னோட வருகையை மட்டும்தான் பதிவுசெஞ்சுட்டிருக்கேன்.
இதற்கும் அப்படித்தான்....

ஆனால், கண்டிப்பா உங்க கவிதை வெகு சிறப்பான ஒன்றாகத்தான் இருக்கமுடியும் அண்ணா... வாழ்த்துக்கள் அண்ணா...

Kousalya said...

@@ பலே பிரபு

//சில இடங்களில் வார்த்தைகள் புரியவில்லை எனும்போது தமிழனாக வெட்கப்படுகிறேன்//

உங்க கவிதைகளை படிக்கும் போது எனக்கும் இந்த உணர்வு தான் வருகிறது ஒவ்வொரு முறையும்...

ஒரு சின்ன விருப்பம் சொல்லலாமா சகோ ?

கவிதையின் முடிவில் ஒரு சின்ன விளக்கம் கொடுத்தால் என்னை மாதிரியானவர்களுக்கு கொஞ்சம் பிரயோஜனப்படும். அழகான தமிழை சரியாக புரிஞ்சுக்குவோம். நான் சொன்னதில் தவறு இருப்பின் பொறுத்து கொள்ளவும்...

விஜய் said...

@ கவிநா

அன்புத்தங்காய்

நெஞ்சார்ந்த நன்றி

என்னை ஊக்கப்படுத்துவதில் உனக்கும் (ஒருமையில் அழைக்கலாம்தானே) மிகப்பெரிய பங்கு உண்டு.

மீண்டும் நன்றி தங்காய்

விஜய்

விஜய் said...

@ கௌசல்யா

ரொம்ப நன்றி சகோ

நான் எத்தனை தடவ நேசமித்திரன், முபீன் சாதிகா கவிதைகளை படிச்சிட்டு மண்டைய பிச்சுகிட்டு அலைஞ்சிருக்கேன் தெரியுமா ?

என் கவிதையெல்லாம் ரொம்ப சாதாரணம் அவர்களை ஒப்பிடும்போது

அர்த்தம் போட்டா மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று யோசித்தேன்

இனிமேல் முயற்ச்சிக்கிறேன் சகோ

ஏதாவது பிழை இருந்தால் கண்டிப்பா சொல்லுங்க சகோ

திருத்திக்கிறேன்.

விஜய்

கவிநா... said...

தாராளமாக அழைக்கலாம் அண்ணா.... கௌசி அக்கா சொன்னதை நீங்க முயற்சி செஞ்சா, அது எனக்கு ரொம்ப உபயோகப்படும். நன்றி அண்ணா...

சி. கருணாகரசு said...

நண்பன் விஜய்க்கும்..... அவர் குடும்பத்தினருக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

பலே பிரபு said...

உங்களை இங்கே அழைக்கிறேன்

http://bloggersbiodata.blogspot.com/

Raja said...

செறிவான மொழி ஆளுமை தங்களுடையது...வாழ்த்துக்கள் விஜய்...

விஜய் said...

@ ராஜா

மிகுந்த நன்றி நண்பா

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

தொடர்ந்து வருக

விஜய்

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மிக அருமை விஜய்.. அசத்திகிட்டே போறீங்க..:))

"நந்தலாலா இணைய இதழ்" said...

வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!

என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"